Skip to main content

என் கொல்லைப்புறத்து காதலிகள் - புதிய தொடர் அறிமுகம்!



அடுத்தடுத்து எழுதாதே, கொஞ்சம் இடைவெளி விட்டால் தான் நாங்களும் படிவோம், நீயும் படிவாய் என்றான் நண்பன் ஒருவன். எழுதுவது என்பது ஒருவித ecstasy மனநிலையை உருவாக்கும் போல, ஒரு கட்டத்தில் நாம் நினைத்தாலும் நிறுத்தமுடியாது. எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலத்தோன்றும். பின்னர் ஒரு விதமாக படிந்து அடங்கிவிடும். சும்மா சொல்லப்போனால் இதுவும் ஒருவித orgasm தான். ஜெயகாந்தனுக்கும் அது "இன்னும் ஒரு பெண்ணின் கதை" யில் நிகழ்ந்தது என்று சொல்லலாமா?, சப்ஜெக்டிவ் தான். என்ன சிலர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி என்று தெரியவில்லை. ஜெயமோகனின் எழுதும் ரேட் என்னை ஆச்சரியப்படுத்தும். அதிலும் ஒரு perfection இருக்கிறது இல்லையா? சொல்லும் கருத்தை விட்டுவிடுங்கள். ஜாக்கி சேகர் எழுதுவது வருடத்துக்கு சராசரி 275 பதிவுகள். எப்படி முடிகிறது? எது உந்துகிறது? எழுதுவதற்கும் வயாக்ரா ஏதும் இருக்கிறதா என்ன? மீண்டும் மீண்டும் அவர்களுக்கு substance கிடைத்துக்கொண்டே இருப்பது மேலும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். தேடல் தான்.



மற்றவன் அந்தரங்கம் என்றால் குழல் புட்டு தொண்டைக்குள் போவது தெரியாமல் ரசித்துக்கொண்டிருப்போம். அதுவும் ஒரு கிளர்ச்சி தான். இதற்குள் சிக்கி சின்னாபின்னப்படுவது நடிகர் கமல், ஐயோ பாவம். தமிழ் திரையுலகில் நடிகராகவும் இருந்து ஒரு சிந்தனையாளராகவும் இருப்பது ஒரு கிரிமினல் குற்றம். அதை கமல் இன்னமும் விரும்பி செய்வது ஆச்சரியமே. நம்மில் பலர் எவற்றையுமே முன்முடிபு செய்தபின்னரே வாசிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். இவன் இப்படித்தான் என்றும் இது இப்படித்தான் என்றும் தீர்மானித்துவிட்டால் பின் அவன் எதை சொன்னாலும் அது எதுவென்றாலும் அவ்வளவு தான். நமக்கு தெரியாததா என்ன?!


இன்னொருபக்கம் நம்முடைய அந்தரங்ககளை பகிர்வதிலும் எமக்கு ஒரு அலாதியான பிரியம் இல்லையா? நான் மூன்று வயதில் அம்மா சேலையில் தொங்கியத்தை பார்த்து நான்கு பெண்கள் so cute என்று Facebook இல் சொன்னால் அது பிறவிப்பயன். இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை எத்தனை likes என்று check பண்ணிக்கொண்டு இருப்போம், இதன் நீட்சி தான் video பகிர்வும் twitter உம், எம்மைப் பலர் அவதானிப்பதை ரசிக்கிறோம். இன்னொருவன் போடும் ஒரு மொக்கை status க்கு கிடைக்கும் comments எரிச்சல் வர வைக்கிறது. அவன் எங்கே இருந்து அதை களவாடினான் என்று கூகுளில் தொலைவோம். இதெல்லாமே ஒரு “survival of the fittest” என்ற விலங்கு கூறின் butterfly effect நீட்சிகள் தாம்.


தொடருக்கு வருவோம். யார் அந்த கொல்லைப்புறத்து காதலிகள். அது தான் கொல்லைப்புறம் என்று சொல்லிவிட்டேனே! நீங்களே பின்னாலே வந்து எட்டிப்பார்த்தால் தான் உண்டு. ஆனால் சிலரை முன்னே அழைத்து வரப்போகிறேன். வாரம் வாரம், ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு காதலிகள் வருவார்கள். தீரும்வரை அல்லது தீர்மானிக்கும் வரை !!!

ddd

 “எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் எழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்!”

--------------------------- முதல் காதல் வரும் ஞாயிறு --------------------------


Comments

  1. ஹாய் அண்ணா,
    யார் யார்ற வாழ்க்கையை எல்லாம் இழுக்கபோறீங்களோ தெரியல.. எல்லோருக்கும் பீதியை கிளப்பி விட்டுடீங்க :)

    //
    தீரும்வரை
    //

    தீர்ந்து விடும் என்று நம்பிக்கை உள்ளதா? :)

    ReplyDelete
  2. Extract from the post :

    நம்மில் பலர் எவற்றையுமே முன்முடிபு செய்தபின்னரே வாசிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். இவன் இப்படித்தான் என்றும் இது இப்படித்தான் என்றும் தீர்மானித்துவிட்டால் பின் அவன் எதை சொன்னாலும் அது எதுவென்றாலும் அவ்வளவு தான். நமக்கு தெரியாததா என்ன?!

    ;) ;)

    ReplyDelete
  3. புத்தகத்தில் படித்து முடிந்து நிறைய நாட்களாகி விட்ட பின்.... இப்போது கிண்டிலில் மீண்டும் வேண்டி படிக்கின்றேன். காதலிகள் எப்போதும் சலிப்பில்லாத ஆச்சரியங்களே.......ஆராதிக்க தெரிந்த ஆடவனின் அரவணைப்பில் இருக்கும் வரை......
    அடுத்த பாகம் எதிர்பார்க்கலாமா என்று கேட்கமாட்டேன் ஏனென்றால் நிச்சயமாக வரும் என்று தெரியும் . மிகவும் ஆவலுடன் இல்லை பொறாமையுடன் காத்திருக்கும் ஒரு மழைக்காக ஏங்கும் கள்ளிச்செடி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...