சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது.
ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது.
The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals the moment of separation and colours the manner in which the juxtaposed elements are related.
எளிமையாக சொல்லுவதாக என்றால், இரண்டு படிமங்களை முதல் இரண்டு வரிகளிலும் சொல்லி, மூன்றாவது வரி அவற்றை தொடுக்கவேண்டும். அந்த தொடுப்பு, கவிதையை வேறு தளத்துக்கு கொண்டு செல்லவேண்டும். இதிலே எத்தனை சிலபல்கள்(syllables) எல்லாம் வேண்டும் என்றும் ஒரு ரூல் இருக்கிறது. அது தமிழில் எழுதும்போது பொருந்தாது என்பதால் ஹைக்கூவின் ஆதாரமான விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
இந்த படத்துக்கு ஹைக்கூ எழுதுவது சவாலான விஷயம். படம் ஏற்கனவே பல கதைகள் சொல்லுகிறது. அந்த கருவை சிதைத்துவிட கூடாது. தூண்டில் போடும் சிறுவனும், நீரில் மின்னும் நட்சத்திரங்களும் தான் சாரம். அதை தொடுக்கவேண்டும். தொடுத்துப்பார்த்த முயற்சி தான் இது!
தூண்டில் வீசும் சிறுவன்.
விண்மீன் எல்லாம் கடலில் விழுந்து
மண்புழு தேடி அலைகிறது!
முதல் இரண்டு வரிகளும் படிமங்கள். சட்டத்தை இன்னமுமே மீறவில்லை. மூன்றாவது தான் அந்த கோர்ப்பு. ஏன் விண்மீன்கள் கடலில் விழவேண்டும்? ஐயோ பாவம், இந்த சிறுவன் நீண்ட நேரமாக மீனுக்கு காத்திருக்கிறானே! ஒரு வெளிச்சத்தை கொடுத்து பார்ப்போமே! என்று கடலில் விழுகிறது. விழுந்தது அப்படியே கிடக்கவேண்டியது தானே? இல்லை. அதற்கு அப்பாலே சென்று, அட நாமும் மீன் தானே, அந்த தூண்டிலில் போய் நாமாகவே மாட்டிகொள்வோமா? அப்போது மீன் மாட்டியது என்று அவன் முகத்தில் சின்ன சந்தொஷத்தையாவது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில், “எங்கே அந்த மண்புழு” என்று அவை தேடி தேடி அலைகின்றனவாம்.
உயர்திணை நிகழ்ச்சியில் கோகிலா மகேந்திரன் கேதாவின் “காற்றில் ஒடிந்த தளிர்கள்” என்ற சிறுகதையை வெகுவாக சிலாகித்து, ஒரு கவிதை என்பது காலம் கடந்து, சொல்லும் விஷயம் கடந்து, மேலும் மேலும் பலதை சொல்லவேண்டும் என்றார். இப்போது இங்கே எழுதிய ஹைக்கூ வேறு என்ன விஷயம் சொல்லுகிறது? இது கூட உருவகம் தான். யோசித்துப்பாருங்கள். இந்த விண்மீன்கள், தங்களை மீன்களாக காட்டி ஏமாற்றி, சிவனே என்று மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் சிறுவனை தூண்டி விட்டு, அவனுக்கு மெல்லிய சந்தோஷத்தை கொடுக்க முயன்று, இறுதியில் அவனுக்கு ஏமாற்றம் தானே கிடைக்கும்? தூரத்தில் இருந்து மின்னுவதற்கு மட்டுமே லாயக்கான விண்மீன்களுக்கு எதற்கு இந்த விபரீத ஆசை? ஏன் இந்த மோசம்? இந்த உருவகத்தை நம்முடைய வெளிநாட்டு தமிழர்களோடு பொருத்தினால்… ப்ச்ச் .. அந்த சிறுவனை மீன் பிடிக்கவிடுங்கள் ப்ளீஸ்!
இதே கேதாவின் இன்னுமொரு படத்துக்கு ஒரு ஹைக்கூ முயற்சி.
சூரியன் மறையும் சமயம்
காத்திருக்கும் காவலரண்
உள்ளே சீருடை!
நானே எழுதி நானே ரசிக்கும் வங்குரோத்து வேலையை திரும்பவும் செய்யப்போவதில்லை! ஆனால் சீருடை யார் யாரெல்லாம் அணிவார்கள்?.
பிற்குறிப்பு : முதலில் ஹைக்கூவில் ஆரம்பத்தில் “தூண்டில் போடும் சிறுவன்” என்றே எழுதினேன். கேதா தான் அதை “வீசும்” என்று மாற்றினால் கொஞ்சம் சந்தம் கூட வரும் என்றான். That’s what called attention to details!
சிந்திக்கத் தூண்டும் கவிதைகளாக இருப்பதே ஹைக்கூ
ReplyDeleteகவிதைகளின் சிறப்பு
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 2
ReplyDeleteவிண்மீன்கள்
ReplyDeleteவானமிறங்கி ஓடுகின்றன
தூண்டில் சிறுவன்.
*****
விண்மீன்களுக்குள்
சண்டை நடக்கின்றது
எனக்கான தூண்டில்.
*****
சிறுவன்
தூண்டில் வீசுகிறான்
வானத்தில் அமாவாசை!
*****
விண்மீன்கள்
ஐஸ்பாய் ஆடுகின்றன
தூண்டிலுடன்.
*****
விண்மீனுக்கும் புழுவுக்கும்
வாழ்க்கைப் போராட்டம்
சிறுவனின் ஆசை.
அடுத்த படத்திற்கு....
மீண்டும் சூரியன்
இன்று
வேறொரு நாள்!
*****
வர முடியாது
யாரும்
தொடுவானம் இறங்குகிறது.
*****
செவ்வாடை அகன்றதும்
சீருடை தரிக்கிறது
அரண்!
ச்சும்மா..நானும் சீருடை போட்டுப் பார்க்க முயற்சித்தேன். அவ்ளோதான்!
:)
கவிதை எழுதுவதற்கே நல்ல திறமை வேணும், அதிலேயும் ஹைக்கூ எழுதணும்னா சொல்லவே வேணாம்.!
ReplyDeleteசீருடை அணிபவர்கள் பள்ளி மாணவர்கள்,போலீஸ்,ராணுவம் ,வக்கீல்கள் இன்னும் பலதரப்பட்ட மக்கள் .இவர்கள் அனைவரும் காலையில் பணிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து பணிக்கு செல்வதும்,பின்பு மாலை வேலையில் சூரியன் அஸ்தமமிக்கும் பொழுது வீடு திரும்பி சீருடை களைந்து,தங்களுக்குப் பிடித்த உடை உடுத்துவது இயல்பு .
ReplyDeleteதன் சொந்த வீட்டில் மட்டும்தான் ,ஒருவன் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறான் ;வீட்டை விட்டு வெளியே சென்றால் அவனுக்கு சீருடை என்ற பாதுகாப்புக் கவசம் தேவைப்படுகிறது ;இரவு நேரத்தில் மட்டும்தான் மனிதன் சுதந்திரம் உடையவனாகவும்,இயல்பானவனாகவும் வாழ்கிறான் ; ,பகல் நேரங்களில் தன்னுடைய சுயத்தை இழந்து மற்றவர்களுக்காக,வேடமணிந்து வேடதாரியாக வாழ்கிறான் என்பதாகப் பொருள் கொள்ளலாம் .
வாழ்த்துக்கள் ...
ReplyDeleteநன்றி ரமணி!
ReplyDeleteநன்றி ராஜு
ReplyDelete//விண்மீனுக்கும் புழுவுக்கும்
வாழ்க்கைப் போராட்டம்
சிறுவனின் ஆசை.//
அழகு. ரெண்டாவது வரி படிமத்திலிருந்து கொஞ்சமே தவறுகிறதோ?.. திருத்தினால் அமோகமாக வரும் ... அருமை ராஜூ
//செவ்வாடை அகன்றதும்
சீருடை தரிக்கிறது
அரண்!//
இதில் இருக்கும் அரசியல் எனக்கு புரிகிறது. வித்தியாசமான பார்வை ராஜு.
நன்றி உங்கள் முயற்சிகளுக்கு .. இவை இந்த பதிவை மேலும் பலப்படுத்துகிறது.
வரலாற்று சுவடுகள் .. ஒரு முயற்சி பண்ணி பார்க்கவேண்டியது தானே.
ReplyDeleteவாங்க முருகேசன்
ReplyDeleteஉங்கள் பார்வையும் அழகு ... என்னுடைய ஹைகூவில் ஒரு சம்பவம் இருக்கிறது. அநேகமான பாலியல் வல்லுறவுகள் ஈழத்தில் காவலரண்களில் இராணுவத்தால் சத்தம் போடாமல் நடைபெற்றன .. பெறுகின்றன .. அதிலும் சிறுமியர் துஷ்பிரயோகம் கொஞ்ச நஞ்சமில்லை ... "உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்" என்ற சிறுகதை மூலமும் இது தான்.
நன்றி கவி அழகன்!
ReplyDeleteada nalla sinthanai!
ReplyDelete// That’s what called attention to details!//
ReplyDelete:) ofcourse
சூரியன் மறையும் சமயம்
ReplyDelete''கிருஷாந்தி'' பூக்களும் மறையும்.......
''காவலனை'' தேடி
காத்திருக்கும் காவலரன்
உள்ளே சீருடை
வெளியே பலருடை
நன்றி சீனி!
ReplyDeleteநன்றி மயிலன்
ReplyDelete//:) ofcourse//
:)
வாங்க கீதா
ReplyDeleteஆகா ..அழகு .. நாங் அப்பவே படிச்சு படிச்சு சொன்னன் .. ஒரு blog ஆரம்பிச்சு எழுத தொடங்குங்க ..