Skip to main content

காத்திருப்பேனடி!

 

601029_10151611428160791_677914073_nஎன்னைப்போல் நீயும்
எவர் அவர் என்று
எண்ணுவியோ?
எடுத்ததுக்கெல்லாமே எகத்தாளம் 
பண்ணுவியோ ?
புரியாத கவிதைகள்
மரியானின் பாடல்கள் 
புறநானூற்று சுளகாலே
பிடரியில் இட தாளங்கள்
இவை யாவும் செய்திடவே
இலவு காத்து இருக்கிறியோ?

இதுகாலும் எழுதாத
கதையொண்டு வச்சிருக்கன்.
இவரெதுவும் அறியாத
கவியொன்று முடிஞ்சிருக்கேன்.
நீ வந்து திருத்தவென
சொற்பிலைகள் பொருட்பிழைகள்
ஒரு நூறு பலநூறு பலர் சொல்லியும்
விட்டிருக்கன்.

காட்டாத படம் எல்லாம் காட்டுவோர் மத்தியிலே
காட்டிய என் படங்கள் காட்சிப்பிழை என்பாரே!
நீ வந்து, முன் நின்று முகம் காட்டி நகை செய்து
ஒளி வந்து உன்கன்ன குழிமீது குடி அமர்ந்து
இருக்கின்ற அக்கணமே எடுத்திட்டால் அப்படமே
எம்மோட படுக்கையறை சுவரில் அது சித்திரமே!

உன்னோடு சேர்ந்து
போகோணும் எண்டதால
எவர் கேட்டும் போகாத
இடமெல்லாம் வச்சிருக்கேன்.
ஆத்தாடி சொன்னாலும்

அதை நானும் கேட்காம
கூட்டாளி பயலோட
கூத்தாடி திரும்பையிலே
வாயாடி உன்னிடம் நான்
வாங்கிக்கட்டும் பொழுதுனிலே
நடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பது எப்படிண்டு
நண்பர்கள் சிலரிடம் - கொஞ்சம்
கிளாஸ் கூட படிச்சிருக்கேன்.

என் முகநூலில் உன் நட்பு எப்போது வந்திடுமோ?
உன் டைம்லைனில் புதைந்திருக்கும்  காலம் தான் கனிந்திடுமோ?
இல்லாத ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் அதை மாற்றையிலே
எண்ணற்ற லைக்குகளும் கொமெண்டுகளும் கிடைத்திடுமோ?

காலமெல்லாம் சேர்ந்து வாழும் கனவொன்று நனவாகும்
நினைப்பெல்லாம் நிஜத்தினிலே நடக்காது நாம் அறியும்.
காரிகை உன் முன்னரேயே காலன் என்னை எடுத்தாலோ
தினகரன் பேட்டியிலே என் பெயரை ப்ளீஸ் கெடுக்காதே!

சில்லறையாம் இவ்வளவு ஆசையெண்டு சொன்னாலும்
சொல்லாத ஆசையொண்டும் உள்ளொன்று இருக்குதடி

எத்திசையும் எத்திக்கும் ஏரிக்கரையோ எம்மலையோ
நான் ஏறிப்போனாலும் நீ கூட வரவேண்டும்
நீ ஏறும் வேளையிலே நான் பின்னே வரவேண்டும்
சறுக்கி விழும் நேரத்தில் எழுப்பிவிட நீ வேண்டும்.
எழுந்து நின்று செருமும் போது -  குட்டி
அடக்கும் குணம் அது வேண்டும்.

இந்த மாட்டர் எல்லாமே சாவகாசமாய் பேசிடவே
நீ முதலில் யார் என்று
அறியும் கணம் வரவேண்டும்.

நீ முதலில் யார் என்று - நான்
அறியும் கணம் வரவேண்டும்.

நீ முதலில் யார் என்று - நான்
அறியும் கணம் வரவேண்டும்.

&&&&&&&&&&&&&&

முன்னைய கவிதைகள்.

உயிரிடை பொதிந்த ஊரே
மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

Comments

  1. நீ முதலில் யார் என்று
    நான் அறியும் கணம் வரவேண்டும்.

    அது விரைவில் நடக்க வாழ்த்துகள் .

    "நடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பது பற்றியெல்லாம்
    நண்பர்கள் சிலரிடம் - கொஞ்சம்
    கிளாஸ் கூட படிச்சிருக்கேன்."

    இதற்கெல்லாம் கிளாஸ்.............ம்ம்ம்ம்ம்ம்


    மனோ

    ReplyDelete
  2. // சில்லறையாம் இவ்வளவு ஆசையெண்டு சொன்னாலும்
    சொல்லாத ஆசையொண்டும் உள்ளொன்று இருக்குதடி... //

    அருமை...

    ReplyDelete
  3. பின்னீட்டீங்க... கண்ணாடிக்கு முன்ன நிண்டு நீ எல்லாம் இனி மேல் ஏதாச்சும் கிறுக்குவ கிறுக்குவ என்று கண்ணை குத்த பண்ணீட்டிங்க... ஃபீலிங்ஸ் கவிதை....

    ReplyDelete
  4. Wow. Good luck! One luck girl who ever she is going to be!
    Vani

    ReplyDelete
    Replies
    1. oh oh oh .its just a poem... For the narrator portrait-ed in the poem, yes she would be a lucky girl .. and I wish I am that narrator :D :D

      Delete
  5. Congrats :-)

    http://www.youtube.com/watch?v=ZM9Ccdx-Y6E

    ReplyDelete
    Replies
    1. Avvvv Yaen in the kolai veri anne

      Delete
    2. ஆனாலும் சக்தி அண்ணை கடியே தனி பாணி தான்.

      Delete
  6. ஒரு சின்னப் பிரச்சினை. சிலவேளை அவளே "இது இன்னொருத்தி" என்று ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. எனவே இனியும் தாமதிக்காமல் ....

    ReplyDelete
    Replies
    1. நான் அவனில்லை எண்டு சொன்னாலும் நம்பமாட்டீன்கள் அண்ணே

      //சிலவேளை அவளே "இது இன்னொருத்தி" என்று ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.//
      கடல்லயும் இல்லையாம் பாஸ்

      Delete
    2. வலைய கொஞ்சம் கவனியுங்க பாஸ். மீனெல்லாம் வந்து வந்து போகுது அந்த அலைகளை மேல!

      Delete
    3. வலைய சுறா அறுத்ததால வந்த வினை மச்சி இது. தைக்கோணும்

      Delete
  7. நீ முதலில் யார் என்று
    நான் அறியும் கணம் வரவேண்டும்.


    நீ முதலில் யார் என்று
    நான் அறியும் கணம் வரவேண்டும்.
    >>
    தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க சகோ!

    ReplyDelete
    Replies
    1. //தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க சகோ!//
      நல்லா கிளப்புறாங்க பீதிய

      Delete
  8. இந்த மாட்டர் எல்லாமே சாவகாசமாய் பேச
    >>
    கவிதை நல்லா இருக்குங்க சகோ! கைக்கோர்த்து பேச நிச்சயம் நல்ல துணை வேணும் சகோ

    ReplyDelete
  9. கோபிசங்கர்6/20/2013 8:08 pm

    வைரமுத்துவின் கவிதை சாயல் இருப்பதாக படுகிறது, நடை நன்றாக உள்ளது எனினும் கவித்துவம் இல்லை. எனக்கு இந்த கவி ஞானம் குறைவு . பிழை என நினைத்தால் just ignore it.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே .. facebook ல போடுவம் எண்டு அலுவலகத்தில ஆணி புடுங்கேக்க எழுதினது. கொஞ்சம் நீண்டதால படலைல போட்டிடன். தரம், நயம் குறைவு தான் ... ஏதாவது டிங்கரிங் பண்ணலாமா எண்டு இரவு பாக்கிறன்.

      Delete
    2. சின்ன டிங்கரிங் செய்திருக்கு .. பெரிசா இதுக்கு மேலே தேத்த முடியாதண்ணே ... அடுத்த கவிதைய அவசரபடாம செய்யிறன்!

      Delete
  10. சீக்கிரமே கல்யாணம் ஆகக்கடவது

    ReplyDelete
    Replies
    1. அக்கா சொல்லீட்டங்கல்ல ... இனி நடந்திடும்.

      Delete
    2. akkaavaa..aaha

      Delete
    3. இப்பிடி ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க .. நாம யூத்து எண்டு ப்ரூவ் பண்ணனுமில்ல.

      Delete
    4. யூத்தாமா...... Vijay's mokkai reaction in Sachin... :p

      Delete
  11. You have written 61 lines for the unseen angel.
    If you gave seen then the lines will be multiplied and a gift for us.

    irruvarin ( 2 persons) thudipinile (emotions?) varuvathu (appears) Kaathal (Love).
    oruvarin (1 person) thudipinile varuvathu Kavithai (poem)

    Well done.
    I called u from London today.

    Siva

    ReplyDelete
    Replies
    1. Sorry Siva .. I missed your call .. May be on the weekend?

      Thats Kannathasan ... Thanks for sharing it here.

      Delete
  12. Too much love feelings.............how is that JK. Hope you will get marry soon and talk about "ILLARAM"
    We are too old to...................

    Ajanthan

    ReplyDelete
    Replies
    1. //Too much love feelings.............how is that JK//
      காதலி இல்லாதவரைக்கும் காதல் உணர்ச்சிக்கு குறைவிருக்காது எண்டு யோகர் சுவாமிகள் சொல்லியிருக்கிறார்

      Delete
    2. யோகர் ஒரு பெரிய ஞானிதானப்பா!

      Delete
  13. தலை கவிதை சுப்பர். அரங்கத்தில வாசிச்சால் இன்னும் பின்னும். நிறைய ஜேகே டச் வச்சு சாத்தி இருக்கிறியள்.

    ReplyDelete
  14. "நீ வந்து, முன் நின்று முகம் காட்டி நகை செய்து
    ஒளி வந்து உன்கன்ன குழிமீது குடி அமர்ந்து
    இருக்கின்ற அக்கணமே எடுத்திட்டால் அப்படமே
    எம்மோட படுக்கையறை சுவரில் அது சித்திரமே"

    அழகான வரிகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    நீங்கள் நினைப்பது போல் கன்னக்குழியோடு ஒரு சுண்டிக்குளிப் பெண் வந்து அப்பெண்ணுடன் சேர்ந்து எடுத்த படத்தை படுக்கை அறையில் மட்டுமல்ல, உங்கள் டைம்லைன் இலும் போட்டு 1008 லைக்குள் பெற எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்

    வாழ்த்துக்கள்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே

      //நீங்கள் நினைப்பது போல் கன்னக்குழியோடு ஒரு சுண்டிக்குளிப் பெண்//
      சுண்டுக்குளி எண்டு முடிவே பண்ணீட்டாங்களா?

      Delete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .