Skip to main content

Posts

Showing posts from 2011

ஐம்பதிலும் ஆசை வரும்!

  இன்றைக்கு ஐம்பதாவது பதிவு! அரங்கேற்ற வேளையில் விளையாட்டாய் ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயரும் போது செய்த ஒரே ஒரு தீர்மானம், இனி மேல் மற்றவர்களுக்காக, நான் ஏங்கும் விஷயங்களில் சமரசம் செய்வதில்லை என்பது. திகட்ட திகட்ட வாசிக்கவேண்டும் என்பது அதில் ஒன்று. எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது இன்னொன்று. சிங்கபூரின் மெஷின் வாழ்க்கை அதற்கு காரணம் என்று நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டேன். இனி சொல்வதாயில்லை. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தில் இருந்து எழுதிய பதிவு இங்கே.   எழுதவேண்டும் என்பது அடங்காத வெறி. ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வசதி, குறிப்பிட்ட சிலரே வாசிப்பர். ஆனால் அழகாய் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று இடித்துக்கொண்டு இருந்தது. ஆங்கிலம் என் மொழி இல்லை. சில உணர்வுகளை இயல்பாக சொல்ல முடிவதில்லை. தமிழ் வசப்படுமா என்பதும் தெரியாது.  எழுத ஆரம்பித்தேன். வசப்பட்டு விட்டேன்.   ஆரம்பித்த உடனேயே எழுதிய அக்கா சிறுகதை, கௌரி போட்ட கமெண்ட் உடன் செல்ப் பிக்கப் ஆகியது.  என் கதையில் அரசியல் பார்வைகளை நான் திணிப்பதில்லை. அந்த கதைக்கு எது நியா...

கரிசல் காட்டு கடுதாசி

கி.ரா அளவுக்கு எளிமையாக வாழ்க்கையை வெறு யாராலும் பதிய முடியுமா என்பது சந்தேகமே. சின்ன சின்ன விஷயங்களை அவர் எடுத்து கையாளும் விதம் அடடா … அதுவும் இயல்பாக வரும் நையாண்டியும் நக்கலும். நாய்கள் பற்றி ஒரு கட்டுரை/கதை இருக்கிறது. ஒவ்வொரு பத்தியையும் வாசித்து முடித்த பிறகு, புத்தகத்தை மூடி வைத்து யோசித்து யோசித்து .. வாவ் .. எழுத்தாளண்டா! நாய்களை பற்றி எழுதும்போது சொல்கிறார், “அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்” Are you getting it? .. என்ன சொல்ல வருகிறார் பார்த்தீர்களா? இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா! என்ன ஒன்று, சுஜாதாவின் எழுத்துக்களில் ஒரு வித ஏளனம் இருக்கும். கீராவிடம் நையாண்டி மாத்திரமே. ஆனால் அடி நாதம் ஒன்றே .. வேண்டுமென்றால் புதுமைப்பித்தனையும் இந்த வரிசையில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். நகுலன்? நேற்று மீண்டும் “ பதுங்குக...

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே!

♫உ.. ஊ.. ம ப த ப மா♪   தொடரை நிறுத்தலாம் என்று தான் அக்காவும் அபிப்பிராயப்பட்டார். உன் ரசனை இது. உன்னோடு வைத்துகொள். ஆளுக்கு ஆள் அது மாறுபடும் என்றார். ஒரு வாரம் பொறுத்துப்பார்த்தேன். முடியல! இந்த பதிவு வேணாம்னு சொல்றது மேகலாவையே வேணாம்னு சொல்ற மாதிரி! என் பாட்டுக்கு எழுதப்போறன். பாட்டு பிடிச்சிருக்கா சொல்லுங்க! இந்த வாரம் கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் பாடல்களை கோர்த்து இருக்கிறேன். புள்ளி என்னவோ ஒரே வகை சிந்தனையில் அமைந்த பாடல் வரிகள் தான். ஆனால் அதையொற்றி வரும் பாடல்கள் வேலிகள் எல்லாம் தாண்டி ஓடும். டென்ஷன் ஆக வேண்டாம். பதிவுக்கு போவோம்! சிலவேளைகளில் வைரமுத்துவின் கற்பனைகள் ஒரே பாணியில் அமைந்துவிடும். ஒரு முறை தான் காதலித்து இருப்பார் போல! இந்த வரிகள் பெண்ணை தொலைத்த ஏக்கத்தில் வரும் வார்த்தைகள். என்ன ஒரு அழகான கற்பனை. வைரமுத்து வைரமுத்து தான்! “கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே” “அதை தேடி தேடி பார்த்தேன்” உயிரே படம் சந்திரன் மாஸ்டரிடம் நானும் ப்ரியாவும்(அல்லது பார்த்தியா?) முதல் ஷோ பார்த்தோம் என்று நினைக்கிறேன். பாடல் காட்சி கொஞ்சமே இருவர் படத்த...

Mort

Mort ஒரு நோஞ்சான் இளைஞன். இவன் வீட்டிலும் வேலை செய்கிறான் இல்லை என்று அப்பா ஒருநாள் சந்தைக்கு கூட்டி சென்று யாருக்காவது கூலி வேலைக்கு கொடுக்கலாம் என்று நிறுத்திவைக்க, அவன் உருவத்தை பார்த்தே எல்லோரும் விலகிபோகிறார்கள். இருட்டிய பிறகு ஒருவர் வருகிறார். அவனை வேலைக்கு எடுக்கிறார். யார் அவர்?

திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்

திரைகடல் ஆடி வரும் தமிழ் நாதம் ஆல் இந்திய ரேடியோ தூத்துக்குடி வானொலி நிலையம் நேரம் இரவு எட்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் திரைத்தென்றல்! உங்களில் எத்தனை பேருக்கு இந்த அறிவிப்பு ஞாபகம் இருக்கிறது? அட நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவரா? தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு குட்டி ரேடியோவுடன் அலைந்தவரா? தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சி கேட்காமல் இரவு சாப்பாடு உங்களுக்கும் நிச்சயம் இறங்கி இருக்காது. என்னை மீண்டும் 90களின் அந்த இனிமையான நாட்களுக்கு அழைத்துச்செல்ல இன்றைக்கு முயல்கிறேன்! நீங்களும் வருகிறீர்களா? ஒவ்வொரு நாள் இரவும் ஆறு மணிக்கு கை கால் முகம் கழுவி படிப்பதற்கு மேசைக்கு போகவேண்டும். அது வீட்டில் எழுதப்படாத சட்டம். நான் படிப்பது சிவபெருமான் புட்டுக்கு அணை கட்டியது போல தான். தொடர்ந்தாப்போல் அரை மணித்தியாலம் கூட என்னால் இருந்து படிக்க முடியாது. அந்த நேரம் தான் தண்ணீர் விடாய் வரும். சாமி கும்பிட தோன்றும். பாத்ரூம் போகவேண்டும் போல இருக்கும். பேனா மக்கர் பண்ணும. பென்சில் கூர் தீட்ட வேண்டி இருக்கும். ஆனால் அம்மா எவ்வளவு கேட்டாலும் சாப்பிட மட...

“Yarl IT HUB” : யாழ்ப்பாணத்தில் ஒரு Silicon Valley

  அப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தமும், அதை தொடர்ந்த பனிப்போரும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, நாடுகள் வழமைக்கு திரும்பிக்கொண்டு இருந்த காலம். அந்த ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். பத்து வயது தான். ஒரு முறை பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு இலத்திரனியல் என்ஜினியர் வீட்டுக்கு செல்கிறான்.  அவருடைய வீட்டு கராஜில் ஒரு பரிசோதனை செய்கிறார்கள். கார்பன் மைக்ரோபோனை பயன்படுத்தி சத்தத்தை அம்பிளிபை பண்ணும் பரிசோதனை. என்ஜினியர் அந்த சிறுவனையும் துணைக்கு வைத்து வேலையை தொடர்கிறார். சிறுவன் அன்றிரவு அப்பாவுக்கு வந்து நடந்ததை சொல்கிறான். அவர் நம்பவில்லை. எலேக்ட்ரோனிக் அம்பிளிபயர் இல்லாமல் இதை செய்ய முடியாது என்கிறார். சிறுவன் செய்து காட்டுகிறான். அப்பா மகனை பெருமிதமாக பார்க்கிறார்.   சிறுவன் வளர்கிறான். பெற்றோருக்கு அவன் ஒரு சாதாரண பிள்ளை இல்லை என்பது தெரியவருகிறது. அவன் திறமைக்கு தோள் கொடுக்கின்றனர். அவன் தன்னுடைய பாடசாலை பிடிக்கவில்லை என்கிறான். மாற்றிக் கொடுக்கிறார்கள். அவன் இஷ்டப்படியே அவனுடைய சின்ன சின்ன ஆராய்ச்சிகளுக்கு இலத்திரனியல் பொருட்களை வாங்கி கொடுத்தனர். இப்போது அந்த பக்கத்து தெரு...

“மேகம் இடம் மாறும்போது!!”

அன்புள்ள பிருந்தன்! ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான்.  சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை குட்டு வாங்கியதால் பாடுவதை குளியலறையோடு நிறுத்தியவன். என் விமர்சனத்தை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. குப்பையில் போட்டு விடலாம். ATM மெஷினில் வரும் Balance Receipt ஐ பார்த்து விட்டு கசக்கி எறிவது போல எறிந்துவிடுங்கள். எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று எப்படியும் பார்ப்பீர்கள் தானே! உங்களையும் உங்கள் சகோதரர்களையும் முதன் முதலில் கேள்விப்பட்டு இன்றைக்கு பத்து வருடங்கள் இருக்குமா? அப்போது தான் சில ராஜா, ரகுமான் பாடல்களை உங்கள் குரல்களில் பாடி ஒரு சீடி வெளியிட்டு இருந்தீர்கள். கஜன் கொடுக்கும் போதே, “காந்தினியின் குரலை கேட்டுப்பார், she got something” என்று சொன்னான். அதுதான் ஆரம்பம். அப்புறம் கூடிய சீக்கிரமே உங்கள் ஆல்பம் “துளிகள்” வெளியானது. கஜன் சீடீ வாங்கிக்கொண்டு நேரே என் வீட்டுக்கு தான் வந்தான். எம்மிடம் இருந்த 5 in 1 இல் போட்டு கேட்டோம் .. By then I  realised you got something! Brunthan’s masterpiece of todate!...

என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டி

  எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவே வளர்ந்தது. காய்த்து கொட்டியது. இலைகளை விட காய்களின் எண்ணிக்கை தான் அதிகம். வளரும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. காய்க்க ஆரம்பித்துவிட்டதா? பாத்தி எல்லாம் கட்டி ஒரே அமர்க்களம் தான். தனியாக தண்ணீர் பாய்ச்சி, தேயிலை சாயம், கோழிச்செட்டை எல்லாம் வெட்டித்தாட்டு பெற்ற பிள்ளையை கவனிப்பது போல கவனிக்கத்தொடங்கினோம். சனிக்கிழமை வந்தால் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் எழுப்பி விடுவார்கள். ஒரு பிளேன்டீயை குடித்துவிட்டு ஒரு துவாயை தலையில் முண்டாசு போல கட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் யாழ்ப்பாண பனிக்கு முட்டுச்சளி தலைக்குள் ஏறிவிடும். எலுமிச்சை மரத்தடிக்கு போய் சந்தைக்கு கொண்டு போகக்கூடிய பதமான காய்களை பிடுங்கவேண்டும்.

“சின்ன குயிலின் சோகம்!”

அலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்டபோது மெல்லிய புன்னகை என்னையறியாமல் வந்தது. நடந்து கொண்டிருந்த இடம் மெல்பேர்ன் நகரத்து யாரா(Yarra) நதியின் குறுக்கு பாலம். பாலத்தின் விளிம்பு தடுப்பில் உட்கார்ந்திருந்த வெள்ளை புறாக்களை ஒரு குட்டிப்பொண்ணு துரத்தி விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் தாய், தன் பருமனான உடலை தூக்கிக்கொண்டு, “Careful honey .. careful” என்று பொண்ணை அதட்டிக்கொண்டு பின்னாலேயே ஓட, அந்த சுட்டியோ சட்டை செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது. தாயும் சளைக்கவில்லை! “பொன்மேனி உருகுதே” என்ற இடம் வருகிறது. சித்ராவின் ஆலாப்பு. பாடல் முழுதும் ஒருவித கோவைகுசும்பு  குழைந்த குரலில் பாடியவர் சட்டென சாஸ்திரிய சாயலுக்கு மாறி சித்ரா தான் பாடுகிறேன் என்று கோடி காட்டுகிறார். இந்த சறுக்கலை எப்படி இளையராஜா அனுமதித்தார்? என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போது, அந்த தாயின் கையில் பொண்ணு அகப்பட திடுக்கிட்டேன். அந்த இடத்தில் சித்ராவும் அவர் மகள் நந்தனாவும் ஓடி விளையாடுவது போல கற்பனை வர, தா...