" ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்திருக்கிறான்) “குமார? ஹூ இஸ் இட் … கவுட?” “குமாரா, ஓய தன்னவலு?” (குமார, உனக்கு தெரியுமாம்) சிலிர்த்தெழுந்தாள் மேகலா, “இஸ் இட் குமரன்? குமரன்த?” “ஔ எயா தமாயி” (ஓம் அவனே தான்) -------------------------------------------------- கிளிநொச்சி மகாவித்தியாலயம் முடிவடைந்து மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருந...