Skip to main content

சீனி கம்


Shreya-Ghoshal“ஜானே டோ னா, ஜானே ஜானே” என்று ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் போது கண்ணெல்லாம் ஒரு விதமாக சொருகி இதழ்களின் ஓரத்திலே ஒரு புன்சிரிப்பு ஒவ்வொருமுறையும் வரும்போது,  மெல்பேர்ன் புகைவண்டியின் முன் இருக்கையில் இருப்பவர் ஒரு மாதிரியாக என்னைப்பார்ப்பது வழக்கம். முற்பிறப்பில் செய்த புண்ணியத்தில் என்றாவது ஒருநாள்  அவள் முன்னாலே வந்து உட்கார்ந்தால் இந்த பாடலை full volume இல் வைத்து கேட்கவேண்டும். இந்த பாடலை கேட்கும் இவனை பிடிக்காத பெண்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். யாருக்கு வேண்டும்?

தமிழில் விழியிலே மணி விழியிலே

நான் ஸ்ரேயா கோஷலை காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான். குரலிலே தேன் வடியும் என்பார்கள். ஆனால் தேன் எல்லாம் அத்தனை இனிப்பு கிடையாது. ச்சோ ஸ்வீட் என்று சுஜாதா சொல்லும் பெண் ஸ்ரேயா இல்லை, அவளுடைய குரல் என்று சொன்னால் ஒருவரும் நம்பப்போவதில்லை தான். சான்சே இல்லை.


இளையராஜாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு சேப்பாக்கம் மாதிரி ஒரு பாட்டிங் பிட்ச்.  ஹாண்ட்சம் லுக்குடன் அமிதாப், லண்டனில் ஒரு வசந்தகாலத்து காதல் கதை. 34 வயது தபுவுடன் காதல். இவருக்கு 64 வயது. காதலை சொல்லும் விதம் அப்படியே போட்டுத்தாக்கும். இது போதாதா சச்சினுக்கு.ரொம்ப காலத்துக்கு அப்புறம் ரொமாண்டிக் மூட் வேறு வந்திருக்க வேண்டும் தலைவருக்கு. ரிசல்ட் டபுள் செஞ்சுரி தான்.


தமிழில் குழலூதும் கண்ணனுக்கு
எனக்கு ஆச்சரியம் தந்தது இந்த பாடலில் இருக்கும் அரேஞ்ச்மேன்ட்ஸ் தான்.  2000திற்கு பின்னர் வந்த அநேகமான ராஜா பாடல்களின் மெலடியும் மெட்டும் எப்போதும் போல அதே அட்டகாசத்துடன் இருந்தாலும் அரேஞ்ச்மேன்ட்ஸில் ஒருவிதமான ரெப்படிஷனில் மாட்டுப்பட்டு இருப்பார். ஒரே விதமான ஒலிநயமும் தாளக்கட்டுகளும், வாத்தியங்களின் பிரயோகங்களும் என எல்லாமே ஒரு விதமான தேக்கநிலைக்கு சென்று இருந்தன. அவ்வப்போது கமல் தீனி போடும் போது மட்டும் ஆனந்த தாண்டவம் நடக்கும். நான் நினைக்கிறேன் ராஜா இதை எல்லாம் கடந்து சென்று தன்னளவில் செய்கின்ற பரீட்சாரத்த முயற்சிகள் என்னைப் போன்றவனை வந்தடையவில்லை என்று. உப்புமா இயக்குனர்கள் வேறு. சிலவேளைகளில் நாங்கள் எல்லாம் நிலாக்காயும் நேரத்தோடு அப்படியே நின்று விட இவர் போய்க்கொண்டே இருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றும். ஆனால் சீனிகம் இசையில் அந்த பேச்சுக்கே இடம் இல்லை.  பியானோ பாட்டின் எல்லா இடத்திலும் ஓடித்திரிய இண்டர்லூடில் ட்ரம்பெட், போதரான்(Bodhran) என ஐரிஷ் இசையில் சும்மா பின்னி பெடலெடுத்திருப்பார். 

தமிழில் மன்றம் வந்த தென்றலுக்கு

மீண்டும் ஸ்ரேயா, மூன்று முத்துக்களும் ஒருவரிடமே. ஆச்சரியமில்லை, ரெகோர்டிங்கில் அந்த இரண்டு பாடல்களையும் கேட்டபின்னர் மூன்றாவது பாடலை வேறு யாரிடமும் கொடுக்கத்தோன்றுமா என்ன? மணிரத்னம் இதைக்கேட்டால், மௌனராகத்தை ரீமேக் செய்து,  “மன்றம் வந்த தென்றல்” பாட்டை பெண்ணுக்கு மாற்றி, ஸ்ரேயாவையே பாட வைக்கலாம். கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டை ஸ்ரேயா பாடினால் எப்படி இருக்கும்? ஜானகி அதை பாடும்போது அதில் ஒரு தாபம் இருக்கும், நம்மைக் கொல்லும். ஸ்ரேயா பாடி இருந்தால் நிச்சயம் அதில் ஒரு ஏக்கம் இருந்திருக்கும், நம்மை அள்ளும். மன்னிப்பாயா ஞாபகம் இருக்கிறதா? வேண்டாம் வேண்டாம். என்னதான் இருந்தாலும் அந்த “கம்பளிப்பூச்சி” காட்சியை ரேவதி தவிர வேறு யார் தான் நடிக்கமுடியும். ரோஜா மதுபாலாவை தவிர்த்து! 


இந்த படம் வெளிவரும் போது தலைவருக்கு 64 வயது. அமிதாப்புக்கு 65. எப்படி காதலித்து இருக்கிறார்கள் பாருங்கள். படத்தை பார்க்கும் போது இசையும் நடிப்பும் அந்த வசந்த காலத்து லண்டன் ஒளிப்பதிவும் கொன்று போடும்.




சீனி கம்மில் தன்னுடைய முன்னைய பாடல்களை பயன்படுத்தினார் என்று ஒரு குற்றச்சாட்டு. இப்படித்தான் பயன்படுத்துவார் என்றால் அவர் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யட்டும்.   செய்துகொண்டே இருக்கட்டும்.


2007 இல் கானா பிரபா முதன் முதலில் இந்த பதிவு போட்ட போது, அன்றைய தினமே சிங்கபூரில் முஸ்தபா கடைக்குச்சென்று டிவிடி வாங்கிப்பார்த்தேன். படம் முடிந்த பின் மீண்டும் நள்ளிரவு லேப்டாப்பில் போட்டு மறுபடியும் பார்த்தேன். எப்படிப்பட்ட ரொமாண்டிக் இசை. ராஜா ஒரு ராட்சசன் என்று சும்மாவா சொன்னார்கள்?


காதலிக்கவேண்டும்,  தபுவை எப்படியும் தேடிப்பிடிக்கமுடியும்! தலைவரே இன்னொரு சீனிகம் ப்ளீஸ்!



Comments

  1. வணக்கம் இன்றுதான் முதன் முதலில் உங்கள் தளத்திற்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன்..


    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகி ஸ்ரேயா கோசல்

    ReplyDelete
  2. நன்றி சார்வாகன் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  3. நன்றி ராஜ் ... தொடர்ந்து வாருங்கள். உற்சாகமளிக்கிறது.

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த ராஜாவின் சமீபத்திய ஆல்பம்.. இந்த பாடல்கள் வந்தபின்னர் ராஜா தன்னுடைய பழைய இவ்வாறு மீண்டும் பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தேன்.. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

    ReplyDelete
  5. பா திரைப்படத்தில் பயன்படுத்தி இருந்தார். ஆனால் அந்த படத்துக்கு பின்னணி இசையில் தான் கூடுதல் கவனம் கொடுத்து இருப்பார்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு ரசித்தேன்

    ReplyDelete
  7. அடடா, வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டமா! இசை பற்றிய பதிவுக்கு பிரபாவின் பாராட்டா? நன்றி பிரபா உங்கள் வருகைக்கு .. உங்களுக்கு சொல்லவேண்டும் என்று தோன்றியது. என்னடா இவன் publicityக்காக சொல்லுறான் என்று நினைப்பீங்க எண்டு சொல்லவேயில்லை! வந்தது பரம சந்தோசம்.. உண்மையிலேயே.

    ReplyDelete
  8. //சீனி கம்மில் தன்னுடைய முன்னைய பாடல்களை பயன்படுத்தினார் என்று ஒரு குற்றச்சாட்டு. இப்படித்தான் பயன்படுத்துவார் என்றால் அவர் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யட்டும். செய்துகொண்டே இருக்கட்டும்.//
    It is balki who forced (requested) him to use it :)

    http://www.youtube.com/watch?v=ggCsY864GbM&feature=related


    Nice taste :)

    ReplyDelete
  9. நன்றி திலகன். எனக்கென்னவோ பால்கி செய்தது சரியென்றே தோன்றுகிறது. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    இந்த வார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ வெளியாகிவிட்டது. வாசித்து பாருங்கள்

    http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_25.html

    ReplyDelete
  10. ஓ...
    //எனக்கென்னவோ பால்கி செய்தது சரியென்றே தோன்றுகிறது//
    அத நான் பிழையாண்டு சொல்வில்லையே :)

    (IMHO) இயக்குனர்கள் ரகுமானையும் , ராஜாவையும் இன்னும் வடிவாக பாவித்திருகலாம்.

    பாக்கவேண்டிய பட்டியல்ல கனகாலம இருத்த இந்த படத்த போனகிழம பாத்திடன். இந்த பதிவு அதற்கு ஒரு உந்துதல். நன்றி

    ReplyDelete
  11. திலகன் ... நான் உங்கள் கருத்துக்கு வழி மொழிந்தே என்னுடைய கருத்தை சொன்னேன். was just a clarification only...

    நான் சீனிகம் recommend பண்ணின ஆக்கள் எல்லாம் நினைச்ச அளவு இல்லை என்றார்கள் .. எனக்கு எப்போதுமே light romantic comedy என்றால் ஒரு விருப்பம் ... உங்களுக்கு எப்படி?

    ReplyDelete
  12. நீங்கள் கேள்விகேட்டு கானகாலமாகிவிட்டது தான் எண்டாலும் :)
    comedy & romance movies தான் ரொம்ப பிடிக்கும் (வயசு போக போக அது இன்னும் கூடுற மாதிரி பீலிங்ஸ் ;-))

    அவுஸ்ரேலாயா வந்து முதல் 2 வருசம் படம் கொமடி & ரொமான்ஸ் படம் பாக்கிறது தான் தொழில். IMDB ல ஒரு லிஸ்ட் வைத்திருத்தானான். ஒருக்கா பாக்காணும்.
    இப்ப உடனடியாக நினைவிக்கு வருகிற படங்களெண்ட.
    Notting Hill
    Pretty Woman
    Shall We Dance
    Bridget Jones's diary and another one
    Music and Lyrics
    You have got mail
    Little Miss Sunshine
    The Holiday
    Hitch
    Ghost Town
    The 40 Year-Old Virgin
    Kate & Leopold
    Sandra Bullock's Adam Sandler's movie it will go on..

    ReplyDelete
  13. I came across your posts on music just recently. I was feeling like I have hit the jackpot. Because I am a music lover and posts on music interests me more than others. Anand likes literature and he would be talking about your posts like viyazhamaatram,Kollai purathu kathaligal and all and now I found this so I can recommend something to him too.

    This particular post about Cheeni Kum is amazing.The observation on all the intricacies and subtle differences is simply brilliant like the movie. The songs especially "jaane do na" and the movie was and is my favourite till now. I am pretty sure that the song's magic will have made the audience have a personal and emotional connection. Thank you so much for “♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪”.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...