2002ம் ஆண்டு இருக்கும். நானும் அறிவிப்பாளர் குணாவும் சேர்ந்து சக்தி FM இல் ஹைக்கூ பற்றிய ஒரு தனி நிகழ்ச்சி நடத்தினோம். நல்ல பல ஹைக்கூக்களை சேகரித்து, அவற்றின் தோற்றம், இலக்கணம் என ஒரு முழு நிகழ்ச்சி செய்தபோது மகிழ்ச்சி தான். இதிலே முதலாவது ஹைக்கூ நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிருஷாந்தி சம்பவத்தை சுட்டி நிற்கிறது என்று சொல்லி sensor செய்து விட்டார்கள். இன்னும் பல ஹைக்கூக்கள் அந்த காலத்தில் எழுதினேன். எல்லாம் தொலைந்து விட்டது. தோன்றும்போது எழுதுகிறேன்.
எப்போதோ ஒருமுறை, கற்றதும் பெற்றதும் என்று நினைக்கிறேன், ஒரு ஹைக்கூ வெளியானது. யார் எழுதியது என்று தெரியவில்லை. ஆனால் இன்றும் மறக்கவில்லை.
சாலை வெள்ளம்,சேலை தூக்க,
சேறானது மனது!
இரு"மாதரை".. அட, இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குமுன்னு தெரியாம போச்சே.. :)
ReplyDeleteமுதல் இரண்டு படங்களிலும் உள்ள ஒற்றுமையால் சீருடை என்பது cutting word ஆ joining word ஆ என்று ஒரு குழப்பம் வருகிறது..
ஹா ஹா .. அது உண்மையில் சீதை சொல்வதாக தான் முதலில் இருந்தது, அந்த படம் போட்ட பின்னர் பல அர்த்தங்கள்!
ReplyDeleteசரியான படங்கள் அமையவில்லை ... தேடினேன் கிடைக்கவில்லை. மூன்றாவது ஹைக்கூ ஒரு டப்பா ஹைக்கூ என்று இப்போது வாசிக்கையில் தோன்றுகிறது!!