Skip to main content

The Spirit Of Music


1992ம் ஆண்டு, ஒருநாள் எங்கள் நண்பி யசோ அக்கா வேக வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். ஒருவித படபடப்பும் பரவசமும் அவர் முகத்தில்,  என்ன என்று எல்லோரும் பார்த்தோம். ரோஜாவின் இசை இப்போது தான் கேட்டேன். ஆச்சரியம் தாங்க முடியவில்லை, சொல்லுவதற்கு வந்தேன் என்று தன்னுடைய walkman ஐ எடுத்து headphone ஐ ஒவ்வொருவர் காதுகளிலும் மாறி மாறி மாட்டினார். பரவசம் எம்மையும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றத் தொடங்கியது. சின்ன சின்ன ஆசையின் சின்ன சின்ன சத்தங்கள் என்னென்னவோ செய்தது. இறுதிப்பல்லவியில் வரும் ஒவ்வொரு இறுதி note இலும் ஒவ்வொரு ஜாலம் காட்டினார். "காதல் ரோஜாவே" காதலிக்கச்சொல்ல,  புதுவெள்ளை மழை யாழ்ப்பாணத்தையே குளிரவைக்க ஒரு மாலை நேரத்தில்,

ரோஜாவின் மயக்க வைக்கும் பின்னணி இசை


A R ரகுமான் பிறந்தாரே!











சென்ற ஏப்ரலில் அவருடைய உத்தியோகபூர்வ சுயசரிதை “The Spirit Of Music” வெளிவருகிறது என அறிந்து சிங்கப்பூர் முஸ்தபா கடைக்கு போன் மேல் போன் போட்டும் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனக்கோ இருப்புக்கொள்ளவில்லை. தலைவர் ஒவ்வொரு பாடலையும் எப்படி உருவாக்கினார், அதற்றுக்குப்பின்னால் இருந்த சுவாரசிய தகவல்கள், அவர் பார்வையில் பிறரின் இசை என்று பலதகவல்கள் இருக்குமே,  என்ன செய்வது என்று தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில் தான் ஆபத்பாந்தவனாய் நண்பன் அன்பு பெங்களூரில் இருப்பதாய் facebook இல் status போட்டான். இசையில் நாட்டம் உள்ளவன் என்பதால் மறுக்கமாட்டான் என்று தெரிந்து வாங்கிவரமுடியுமா என்று கேட்டேன், மறுக்கவில்லை. ஆனால் அவன் அப்படியே மலேசியா சென்று ஒருமாதம் நின்று, இன்னொரு நண்பனூடாக அந்த புத்தகம் என் கை வந்து சேர பலநாட்கள் ஆகிவிட்டது. அவன் அதற்குரிய பணமும் பெறவில்லை. நன்றி நண்பா. புத்தம் புதிதாய் புத்தகம் கமகமத்தது, கிடைக்காத காதலி ஒரு முறை நம்மைப்பார்த்து தான் சிரித்தது போல இருக்குமே, அது போல!

புதுப்புத்தகம் என் கைகளில்!

நஸ்ரின் முன்னி கபீர் என்ற இந்தியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும் ஒரு தொலைக்காட்சி தயாரிப்பாளருக்கும் ரகுமானுக்கும் இடையேயான உரையாடல் பாணியில்தான் நூல் நகர்கிறது. ரகுமானை தன் வட்டத்தில் இருந்து வெளியே இழுத்து வருவது இயலாத காரியம். அவர் ஒரு introvert. ஆனால் நஸ்ரினை ரகுமான் தன்னுடைய வட்டத்துக்குள் இழுத்துவிட்டாரோ என்ற பிரமை ஏற்படுகிறது. தலைப்புக்கேற்ற ஒரு spiritual feel சூபி இசை வடிவில் நூல் முழுதும் விரவி இருக்கிறது. ரகுமானின் இசையில் ஒரு openness எப்போதும் இருக்கும். ஒரு கட்டுக்குள் அடங்கமாட்டார், இது தான் சரி என்ற ஒரு வரையறையும் வைத்துக்கொள்ள மாட்டார். அது தான் அவருடைய வெற்றியின் அடிப்படை என்பது நூலை வாசிக்கும் போது தெரியும். திருடா திருடா வின் “தீ தித்திக்கும் தீ” முதலில் ஒரு lullaby யாக தான் உருவாகி இருக்கிறது. அதற்குள் ஒரு சூறாவளி இசை புகுத்தச்சொல்லி மணிரத்னம் சொல்ல இவர் முதலில் ஆச்சரியப்பட்டாலும் பின்னர் அதை செய்துபார்க்க, கிடைத்தது அந்த கொன்னக்கோலும் எலெக்ட்ரிக் மற்றும் பேஸ் கிடாரும் செய்த தாண்டவம். அந்த இசை கேட்கும்போது ஒரு ஆண்மையும் பெண்மையும் கலக்கும் உணர்வு இருக்கும். A magic created by two legends!


என்ன இது என்ன இது என்ன இதுவோ?


தன்னுடைய ஆரம்ப கால இசை முயற்சிகள், மற்றைய இசை அமைப்பாளர்களுக்கு வேலை செய்யும் நேரத்தில் மேலைத்தேய இசையை headphone இல் கேட்டுக்கொண்டு இருப்பது, இளையராஜாவிடம் ஒன்றரை வருடங்கள் வேலை பார்த்தது, இளையராஜா, ரகுமானின் தந்தையிடம் keyboard வாசித்தது என பல தெரியாத சுவாரசியங்கள் எங்கும் பரவிக்கிடக்கின்றது.

“I think, Shankar trapped in his own success” என்று ஷங்கர் பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டதை சிறு வருத்தத்துடன் கோடி காட்டுகிறார். ரகுமான் தன்னுடைய இசையில் அதிகம் விட்டுகொடுத்தல்கள் செய்தது ஷங்கருக்கும் K S ரவிக்குமாருக்கும் என்று தான் நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் இவர்கள் கூட்டணி தொடராவிட்டால் பல நல்ல பாடல்களை நாம் இழக்கவேண்டி வராது!


மீண்டும் மீண்டும் மீண்டும் … ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்!


உரையாடல் ஹிந்தி திரை உலகத்துக்குள் நுழைகிறது. லகானிலும் , ரங்கே தே பசந்தியிலும் டெல்லி6 இலும் நடந்த ஆச்சரியங்களைப்பேசுகின்றனர். “மெயின் வரி வரி” பாடல் ரெகார்ட் செய்த கதை சுவாரசியமானது. லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே உடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்கிறார். செண்பகமே செண்பகமே பாடல் யார் பாடியது என்று முதலில் தெரியாமல் கேட்ட போது ஆச்சரியப்பட்டதாக சொல்கிறார். இந்திராவுக்காக சுகாசினியுடன் பணி புரிந்துகொண்டு இருந்தபோதே “Bombay Theme Music” உருவானதாகவும், அது மணிரத்னத்துக்கு அதிகம் பொருந்தும் என்று நினைத்து கை மாற்றியதையும் சொல்கிறார். “Slumdog Millionaire”, “Couples Retreat” படங்களில் மற்றும் Dido வுடன் வேலை செய்தது என பல அனுபவங்கள் ஆங்காங்கே.


சஜ்னா !!


யார் இந்த நஸ்ரின் என்று எனக்குத்தெரியாது. ஆனால் முடியுமானால் இவர் இனி இப்படியான சுயசரிதை எழுதும் முயற்சிக்கு தடையுத்தரவு வாங்கவேண்டும்!  தன்னுடைய ரகுமான் பற்றிய பிம்பத்தை மையமாக வைத்தே கேள்விகளை கேட்கிறார். ரகுமானின் இருபது வருட தமிழிசை பற்றிய பதிவுகள் பத்தோடு பதினொன்று ஆகின்றன. ரகுமானின் எதிர்கால projectsகளை மையமாக வைத்த கேள்விகள்.  “என் மேல் விழுந்த மழைத்துளியே", "எழுத்துப்பிழையும் நீ", "கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழைத்துளி” என்ற கவிதைகள் எல்லாம் குல்சார், மெஹபூப், பிரச்சூன் ஜோஷி பற்றிய கேள்விகளில் கரைந்து மறைக்கப்பட்டுவிடுகிறது. அவ்வப்போது conscious ஆக ரகுமான் சொல்ல விழைந்தாலும் நஸ்ரின் அதை புறந்தள்ளி தாண்டிச்செல்கிறார்.


ரகுமானின் படங்களிலியே the most complete and classic album என்று நான் நம்பும் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” பற்றி எந்த உரையாடலும் இல்லை. வெற்றிபெறாத எந்த படமும் பேசப்படவில்லை. மே மாதம், காதல் வைரஸ், Mr Romeo என்று பல படங்களைப்பற்றிய எந்த தகவல்களும் இல்லை. ரகுமானுடன் பணிபுரிந்த தென்னிந்திய பாடகர்கள் பற்றி அதிகம் இல்லை. ரகுமானின் கர்நாடக, தென்னிந்திய கிராமிய இசை வடிவங்களில் செய்த  பரீட்சார்த்த முயற்சிகளை நஸ்ரின் கண்டுகொள்ளவேயில்லை. கண்ணோடு காண்பதெல்லாம், சௌக்கியமா, தென் கிழக்கு சீமையிலே எல்லாம் நஸ்ரின் அறிந்திருப்பாரோ தெரியாது. சூபி இசை நூல் முழுதும் நிறைந்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக “Luke Chuppi” போன்ற பாடல்களை எல்லாம் அப்படியே விட்டுவிடுவது அநியாயம். ரகுமானின் “Ada, A Way Of Life” ஆல்பத்தின் அறிகுறியே இல்லை. இப்படி பல இல்லைகள். எனக்கென்னவோ “Elephant and the blind philosophers” போல  தனக்கு பிடித்த, வேண்டிய  ரகுமானை  மட்டுமே நஸ்ரின் வெளிக்கொணர முயன்றிருக்கிறார். ஒரு சுயசரிதத்தின் அடிப்படையே சரிகிறது அங்கே.


என் மனம் உனக்கென்ன விளையாட்டு பொம்மையா?


புத்தகத்தில் ஒருவித அலை பாயும் தன்மையும் இருக்கிறது. எந்த பகுதி எங்கே வரும் என்று தெரியாது. டான்னி போய்லே வந்த பின்னர் சடுதியாக லதா மங்கேஷ்கர் வருவார். உலகமே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளனின் சுயசரிதம் இத்தனை mediocre ஆக இருந்திருக்கவேண்டாம். எதிலும் ஒரு அவசரம். எந்த ஒரு homework உம் இல்லாத ஒரு பேட்டி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அநேகமான விடயங்கள் தெரிந்தவை. அநேகமானவை ரகுமானின் கருத்துக்கள் அன்றி அவருடைய வாழ்க்கை படிமங்கள் கிடையாது.  ரகுமானை வழிபடும் எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண ரசிகன் மூடிவைத்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.


புத்த்தகத்தில் இறுதியில் ரகுமானின் “Connections” CD மற்றும் ஏராளமான புகைப்படங்கள். ஒரு ஆறுதலுக்காக இணைத்து இருக்கிறார்கள்.


CNN Talk Asia, 2009 இல் ஒரு documentary செய்திருப்பார்கள். அதில் ஒரு உயிரும் உணர்வும் இருக்கும். என்னத்த சொல்ல  நஸ்ரின் சொதப்பிவிட்டார்.


Fingerboard ஐ கேட்டு பாருங்கள் .. divine!


Spirit Of Music : அள்ளித் தெளித்த கோலம்





Comments

  1. ஹாய் அண்ணா,
    எங்கள் சார்பில் நூலை விமர்சித்து இருக்கிறீர்கள் :). நஸ்ரின் ஹிந்தி படங்களை மட்டுமே பார்த்து கிணற்று தவளையாய் இந்த புத்தகத்தினை எழுதியிருப்பாரோ.

    ReplyDelete
  2. எல்லாமே ஒரு வியாபாரம் போல தான் தோன்றியது.

    ReplyDelete
  3. அருமையான பதிவு..பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நன்றி குமரன் வருகைக்கும் ஆதரவுக்கும்

    ReplyDelete
  5. JK பலருக்கு அந்த புத்தகம் பற்றிய தவல் தெரியாது , நான் தரையிறக்கம் செய்து தான் வாசித்தேன், அந்த லிங்கை நான் இணைத்துவிடுகிறேன், ஏ.ஆர் ரகுமான் பற்றிய நஸ் ரினின் கருத்துக்கள் பலவற்றை தொடாமல் ஒரு சில வெற்றி பெற்றவைகளை மட்டும் தழுவி சென்றதை போல உணர்கிறேன் , ஆனாலும் ஏ.ஆர் இன் ஒரு சில பாடல்கள் வெற்றி பெறாத படங்களால் வெளியில் பேசப்படவில்லை, ஆனால் தற்போது வசந் டீவியில் ஏ ஆர் இன் சகோதரி ரெஹானா ரகுமானின் இசை பயணத்தைப்பற்றி ஒரு நிகழ்ச்சி செய்யப்போகிறார், அதனை எதிர்பார்த்துகாத்திருக்கிறேன்..

    ReplyDelete
  6. அருமையான பதிவு,ஏ.ஆர் பற்றிய பல சுவையான தகவல்களை இங்கே பகிர்ந்துகொண்டது அனைவருக்கும்போய் சேரும் வகையில்..

    ReplyDelete
  7. எப்ப அந்த ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ணுது மச்சி .. நல்லா இருக்கும் எண்டு நினைக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .