Skip to main content

“கொச்சின் மாடப்புறா!”


unnudan11998ம் ஆண்டு தீபாவளி. காலையிலேயே பொதிகையில் புதுப்பட பாடல்கள் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அம்மாவிடம் ஏச்சு வாங்கிக்கொண்டு டிவி முன் உட்கார்ந்த போது,  முதல் பாடல் ஒரு சுலோகத்துடன் ஆரம்பித்து, “பச்சை மா மலை மேனி” என்று தொடர, தேவாவுக்கே உரிய வயலின் ரீங்காரத்துடன் கோரஸ் சஞ்சாரிக்க, ஹரிஹரன் கணீரென்று பாடத்தொடங்கினார். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஒரு வித பரவசத்தில் பார்த்துக்கொண்டு இருந்ததில் எந்த படப்பாடல் என்றும் கவனிக்கவில்லை. பாடல் முடிந்த கையோடு, மிகுதி நிகழ்ச்சியை பார்க்காமல், நண்பன் பார்த்தியிடம் ஓடிப்போய் என்ன படம் என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அது "உன்னுடன்” என்று.


வானம் தரையில் வந்து !

இந்த பாடலில், ஹரிகரனை ஷேவாக் மாதிரி அடித்து ஆட தேவா அனுமதித்திருப்பதாக தெரிகிறது. தலை சும்மா பின்னி எடுத்து இருப்பார். இன்றைக்கு வரைக்கும் யாரும் இந்த பாடலை மேடையிலோ வேறு நிகழ்ச்சியிலோ நன்றாக பாடியதாய் தெரியவில்லை. அத்தனை கடினம் இது. ஒருமுறை ஹரிஹரன் கூட மேடையில் பாடி சொதப்பி இருப்பார்!

வைரமுத்துவுக்கு மெட்டை கேட்டவுடனேயே இது ஒரு கோகினூர் என்று தெரிந்து விட்டது. ஆரம்ப வரிகளே அமர்க்களம். இந்த பாடலைப்பற்றி ஒரு முறை “சக்தி எப் எம் இளைய சக்தி” நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது வரிக்கு வரி சிலாகித்து இருப்பேன். அப்படி ஒரு காதல் இதன் மீது.
வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துகொண்டதே
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே
தென்றல் பூக்களைப் ஒளிந்துகொண்டதே
என்னடா இது எல்லாமே ஏறுக்கு மாறாக இருக்கிறதே என்று பார்த்தால்,
Unnudanவிழிகளை வீசிய இளைய கொடி இந்த
விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
ஒருமுறை அடி ஒரே முறை ஒரு பார்வை பார்
உலகம் சுழலும் மறுபடி
என்று முடித்திருப்பார்! கெட்டுது போ!
 
 
90களில் தேவாவின் வீட்டில் சரஸ்வதியின் புட்பகவிமானம் மிஸ்லாண்ட் பண்ணி இருக்க வேண்டும்! அந்நாட்களில் எல்லாம் தேவா என்றாலே தென்றல் தான். அந்த பீரியட்ல வேறு காதல் படங்கள் தான் டிரெண்ட். “ஆசை”, “காதல் கோட்டை” யில் ஆரம்பித்து, “கண்ணெதிரே தோன்றினாள்”, “நினைத்தேன் வந்தாய்” என்று தேவாவுக்கு எப்படி தான் அந்த மூடு வந்ததோ தெரியவில்லை. தலைவர் மெலடி மேல் மெலடியாக போட்டுத்தள்ளிக்கொண்டு இருந்த நேரம். ஆர்.பாலு என்ற இயக்குநர், “காதல் கோட்டை” தன்னுடைய கதை என்று புலம்பி விட்டு, பின் “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற படம் எடுத்தார். பாட்டுகள் பற்றி சொல்ல தேவையில்லை. அவர் எடுத்த அடுத்த படம் தான் “உன்னுடன்”. தேவா தான் இசை. அதே முரளி கௌசல்யா ஜோடி. பாடல்கள் உலகத்தரம்!
 
இந்த படம் ஒரு நல்ல மெலடி பாடல்களுக்குரிய சூழ்நிலைகள் அமைந்த படம். கௌசல்யா ஒரு மருத்துவ கல்லூரி மாணவி, மலையாளி வேறு. முரளி வழமை போல ஒரு ரிசேர்வ்டான,  பார்மசி கடை வைத்திருப்பவர். இருவரும் நண்பர்கள். இருவருக்குள்ளும் ஒரு காதல் இருக்கும், ஆனால் சொல்ல மாட்டர்கள். ஒருவிதமான intellectually matured நிறைந்த காதல். அவர்களின் பேச்சுகளிலும் பார்வைகளிலும் அது தேங்கி இருக்கும். இது போதாதா ஒரு மியூசிக் டிரெக்டருக்கு? தேவா ஒரே ஓவரில் நான்கு சிக்ஸ்ர்ஸ்!
 

கண்டு பிடி அவனை கண்டு பிடி

SPB, ஹரிணி பாடிய பாடல். தாண்டியா வகை பாடல். ஹரிணி “நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டு பிடி” என்று கொஞ்சும் போது அதை மீண்டும் கொடுத்து விட வேண்டும் போல தோன்றும்!




திருடிச் சென்றதைத் திருப்பித் தண்டால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
என்று பெண் பாட
திருடிச் சென்றவள் திரும்பி வந்தால்,
மிச்சம் இருப்பதை மீண்டும் திருடச் சொல்வேன்
என்னும் போது SPB சின்ன சிரிப்பு சிரிப்பார்… அய்யோடா..
 
அடுத்த பாடல், சோகம் கொட்டும். அந்த நாட்களில் தேவாவின் சோகமான, மற்றும் சில ரொமாண்டிக் ஸ்லோ மேலோடிகளை உன்னிப்பாக கேட்டுப்பாருங்கள். உதாரணத்துக்கு கருடா கருடா பாடல் போல, ஒரு பேஸ் பிட்ச்சில் வயலின் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அப்படியே ஒரு பெண் கோரஸ் ஹார்மனி பாட, நம் மனசை ஏதோ ஒன்று பிசையும். உடனே பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்து “ஐ லவ் யு” சொல்லலாமா என்று மனதுக்குள் தோன்றும். அது தான் 90களில் தேவா!

கோபமா?
கோபமா! Pan flute, வயலின், செல்லோ என எல்லாமே சேர்ந்து இதயத்தை கிழிப்பது போதாது என்று ஹரிஹரன் மென்மையான குரலில் “கோபமா?” என்று கேட்கும் போது எந்த பெண்ணும் இளகாமல் இருக்க மாட்டாள். 
மீண்டும் வைரமுத்து, மனுஷன் எப்படி அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று பாருங்கள்.
மெளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
மறு மொழி ஒன்று பேசிடம்மா
அந்த கால கட்டத்து காதல் படங்களின் ஒரு சிறப்பு அவற்றின் பாடல்களின் ஒளிப்பதிவு. பாடல் காட்சிகள் எல்லாம் ரசித்து ரசித்து ரொமாண்டிக்காக எடுத்து இருப்பார்கள். அதிகமான நடனம் இல்லை. அவனும் அவளும் காஸுவலாக நடப்பது மட்டும் தான். ஆனால் காட்சிகள் எல்லாம் சும்மா கண்களை அப்படியே அள்ளும்.
 
இந்த பாடல், இந்த ஆல்பத்துக்கே சிகரம் வைத்த பாடல் என்று சொல்லலாம். The number which sealed the album என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். உன்னிகிருஷ்ணன், சொர்ணலதா குரல்கள். கேரளத்து காட்சிகள். பெண் மலையாளி. அவளின் ஊரில் அவன், அவளோடு சுற்றிப்பார்க்கிறான், உள்ளுக்குள்ளே குமையும் காதல், சொல்லவோ தயக்கம். வேறு என்ன வேண்டும்?

கொச்சின் மாடப்புறா'!
கொஞ்சி கொஞ்சி பாடுவது என்று சொல்லி கேட்டு இருக்கிறீர்களா? உன்னி பாடுவது அப்படி இருக்கும்!
பாடலை கேட்கும் போது அந்த கொச்சின் துறைமுகமும் அது சார்ந்த பகுதியையும் உணர கூடியதான இசை கோர்ப்பும் வாத்திய தெரிவுகளும் தேவா பயன்படுத்தி இருப்பது புரியும். இடையில் “சீதா கல்யாணம்” வேறு வந்து சேர அப்படியே பாடல் கம கமக்கும்!
 
music-director-deva
என்றாவது ஒருநாள் தேவாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், எப்படி இந்த மாதிரி பாடல்களை உங்களால் 90களில் உருவாக்க முடிந்தது? என்று கேட்கவேண்டும். அது ஏன் 2000திற்கு பின்னர் நின்று விட்டது? தேவா மற்றவர்களின் இசையை பயன்படுத்துகிறார் என்பதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இவ்வாறான உலகத்தரமான இசையை, அதை காதலித்தால் மட்டுமே தர முடியும். தேவா காதலித்தார்.
 
சின்னஞ்சிறியது பறவை தன் சிறகில் சுமக்கும் சிலுவை
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை

என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா?  மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்!
முன்னைய வாரங்களின்  ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪





















Comments

  1. மன்மதகுஞ்சு11/08/2011 11:45 pm

    தேவாவின் ஒரு படப்பாட்டையே உன்னுடைய பாணியிலே சவாரி செய்து விமர்சனம் செய்திருக்கிறாய். ஆனால் இந்த விமர்சனம் தேவாவே பார்த்தால் ஆனந்தக்கண்ணீர் விடுமளவுக்கு அருமையான விமர்சனம். இந்த படத்தைப்பார்த்துவிட்டு நீ என்னுடன் இந்தப்படத்தைப்பற்றியும் இசை மட்டுமல்லாது கொச்சின் மாடப்புறா காட்சி தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு பற்றி சிலாகித்து கூறியதும் என்னால் மறக்கமுடியாயது,மீண்டும் 98 ம் ஆண்டுக்காலப்பகுதியின் நினைவலைகளை கிளறி விட்டிருக்கிறாய், ஆனா ஹலெட்டே தேவான்னா பார்த்தி வராமல் சுபம் போடமுடியாது என்பதை நிரூபித்துவிட்டாய்.என்னைப்பொறுத்தவரை தேவாவின் குடும்பமே அண்ணன் தம்பி,மகன் என்று ஒன்றாகா கூடி இருந்தபோது அவர் சாதித்தது அதிகம் என்றே சொல்வேன்.அதன்பின்பு அவரின் அந்த கடல்முத்துக்கள் பிரகாசிக்காதத் கவலைதான் என்றாலும் விட்டுச்சென்றவை அனைத்தும் ஒளிமழுங்காதவை.

    ReplyDelete
  2. தலைவரே ... சந்திரன் மாஸ்டரிடம் இந்த படம் பார்த்தது என்று நினைக்கிறேன்.. first day show in Jaffna ..தங்கர்பச்சன் பற்றி பேசியது இன்னும் ஞாபகம் இருக்கிறது ....தேவாவின் பரம ரசிகன் பார்த்தி பெயர் இல்லாமல் ஒரு தேவா பதிவா? ஹ ஹா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .