இறப்பு ... Death ...எமன்!
இப்படி நிமிர வைத்த Terry Prachchet முடியும்வரை புத்தகம், ஓயவில்லை. இறப்பிடம் உதவியாளராக சேரும் Mort. இறப்புக்கு என்று ஒரு வீடு வேறு உலகத்தில் இருக்கிறது. அங்கே காலம் ஓடாது. வயது போகாது. எங்கள் கடவுள்களுக்கும் வயது போவதில்லை! ஆக அவர்கள் பிறந்து வளரவில்லை. ஒன்று அவர்கள் பொய். அல்லது அவர்கள் அப்படியே தோன்றியிருக்கிறார்கள்! இரண்டாயிரம் ஆண்டுகளாய் இளமையாய் இருக்கும் இசபெல்லா அறிமுகம். அவ்வளவு அழகு இல்லை அவள். மெல்லிய மார்பு, அதிகம் நீளம் இல்லாத முடி, நீட்டு முகம். அவளை பார்த்தால் பிடிக்காது. ஆனால் புத்திசாலி. ஆண்களுக்கு எரிச்சல் வர வைக்கும் புத்திசாலி! அவளுக்கு அவன் மீது மெல்லிய காதல்! அவனுக்கு பூமியில் இருக்கும் இளவரசி மீது … இதற்குள் ஒரு மந்திரவாதி ... சுஜாதாவின் விறுவிறுப்பு இருக்கும். Awesome!
ஒருகட்டத்தில் Mort ஒரு இளவரசியை எமன் லீவில் இருக்கும் சமயம், தானே போய் காவு கொள்ளவேண்டும். இவன் கொள்ளவில்லை. கொல்லவில்லை! விளைவு இயற்கை சமநிலை குழம்ப, இளவரசிக்கே தான் உயிரோடு இருப்பது சந்தேகம்! அதென்ன உயிரோடு இருப்பது என்ற கான்செப்ட்? அடுத்த கேள்வி!
இப்படி ஆச்சரியம் மேல் ஆச்சரியம். ஒரு fantasy கதையில் எத்தனை விஷயங்கள்? இன்னும் விவரிக்கலாம். ஆனால் வாசிக்கும் போது அந்த பரவசநிலை போய்விடும். ஒன்று மட்டும் சொல்கிறேன். ஆரம்பத்து இருபது பக்கங்கள் வாசிக்கும் போது மண்டை காயும். பொறுமை வேண்டும். சில வேளைகளில் நான்கு தடவைகள் கூட சில பக்கங்களை மீண்டும் மீண்டும் வாசித்து விளங்கியிருக்கிறேன். அப்படி ஒரு நான் லீனியர் அமைப்பு. கொஞ்சம் உள்ளே இறங்கி விட்டீர்கள் என்றால், சான்ஸே இல்லை. எப்போது இப்படியெல்லாம் தமிழில் வரப்போகிறது? வரவேண்டும். வரும்!
Mort,Don’t miss it! சாம்பிளுக்கு இரண்டு வரி தருகிறேன்.
Reannuals are plants that grow backwards in time. You sow the seed this year and they grow last year.Mort's family specialized in distilling the wine from reannual grapes. These were very powerful and much sought after by fortune-tellers, since of course they enabled them to see the future. The only snag was that you got the hangover the morning before, and had to drink a lot to get over it.
கிறுகிறுக்கிறதா! சும்மா வாசியுங்க பாஸ்!
Comments
Post a Comment