Skip to main content

ஆம்பிளைங்க டூயட்!!!


இந்த இசைத்தொடர் குசேலன் படத்தை விட ப்ளாப்! கடந்த பதிவுக்கு வெறும் நூறு ஹிட்ஸ் தான். மற்றவர்களுக்கு எழுதாதே, உனக்கு பிடிச்சத எழுது என்றான் மன்மதகுஞ்சு. இந்த வாரம் என் வாசகர் தமிழினி ஒரு ஈமெயில் அனுப்பினார்.
“இப்போது நீங்கள் இசைப்பதிவு எழுதுவதில்லையா? நீங்கள் முன்பு சொன்னது போல் சனி அல்லது ஞாயிறில் எழுதலாமா? ரசித்துப்படித்துக் கெற்க பலர் உள்ளோம்!!!”
இந்த வாரம் என்னை கவர்ந்த ஆண்கள் இணைந்து பாடும் டூயட்கள் சில. ஸ்டார்ட் ரெடி மியுசிக்!

தென்றலே தென்றலே, இதை feel பண்ணி கேட்காத ஒருவர் தானும் இருந்தால் நான் பாடல் கேட்பதையே நிறுத்திவிடுகிறேன். அருமையான பியானோ இசையுடன் ஆரம்பிக்கும் பாடல். உன்னியின் ஹம்மிங் இழையாய் தென்றலே தென்றலே என்று ஆரம்பிக்கும்.
தூரத்தில் நிலா, பக்கத்தில் காதலி தூங்குகிறாள். இரண்டுமே எட்டாத தூரத்தில். இரண்டும் அவனை எரிக்கிறது. ஆனாலும் தூங்க வைக்கிறான். நல்ல பாடல் உருவாக வேறு என்ன situation வேண்டும்?
முதலாவது இண்டர்லூட்டில் கொஞ்சம் சறுக்கல். இசையும் காட்சியும் கவரவில்லை. சரணம் ஆரம்பிக்கும் போது ரகுமான் comes back again. இரண்டாவது இண்டர்லூட். அமிர்தம். ரகுமானின் மாஸ்டர் பீஸ் பியானோ. அது முடிய கொஞ்சம் பான் ப்ளூட் ரிதம், மனோ ஆரம்பிக்கிறார். மனோவா இது? “அதோ மேக ஊர்வலம்”  பாணி குரலில் பாடியிருப்பார்.  இந்த பாடலை ஹிந்தியில் சோனுநிகமும், எஸ்பிபியும் பாடி இருப்பார்கள். சோனுநிகம் சொதப்பி இருப்பார். ஆனால் எஸ்பிபி ஹிந்தியில் பாடும்போது, ஹிந்தி ஏன் இசைக்குகந்த மொழி என்பதை நிரூபிப்பார். Beautiful!


அடுத்த பாடல் தலைவர் பாடல்! தலைவரும் எஸ்பிபியும் சேர்ந்து பாடியது. பாலச்சந்தர், சிந்துபைரவிக்கு பின்னர், இளையராஜா இருக்கும் தைரியத்தில், இசைக்கலைஞர் சார்ந்த புது புது அர்த்தங்கள், புன்னகை மன்னன் என்று அடுத்தடுத்து எடுத்தார். அப்புறம் ரகுமானை வைத்து டூயட் கூட எடுத்தார். ஆனால் கதை அவரின் ஒரே டெம்ப்ளேட் தான். ஒரு ஆணுக்கு இரு பெண்கள். அல்லது ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள். இரு கோடுகளில் ஆரம்பித்தது. ஆசாமி நிறுத்தவேயில்லை! அவ்வப்போது “வறுமையின் நிறம் சிகப்பு” போன்ற பாரதி இன்ஸ்பிரேஷன்ஸ் வருவதும் உண்டு!

இந்த பாடல் புது புது அர்த்தங்கள் படம். இசையில் சர்ப்பரைஸ் சேர்ப்பது பற்றி ஒருமுறை எழுதி இருந்தேன். இது அந்த வகை பாடல். சாதரணமான குத்து வகையில் ஆரம்பிக்கும். எஸ்பிபி ராஜா சேரும்போதே ஏதோ இருக்கவேண்டும் இல்லையா? அது சரணத்தில் புரியும்! கவனமாக கேளுங்கள்.
இளையராஜா : ஏ நான் பாட பிறந்தது ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு
                               ஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு
                              என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
                              அட தென் பாண்டி குயிலினம் நான் தான்.
         எஸ்பிபி : நான் பாடவே ஏழு ஸ்வரங்களூம் தான் தாவிடும் மேவிடும்..
இளையராஜா : ஒ ஹோ (நக்கலை பாருங்கள்)
எஸ்பிபி : ஊர்கோடியே மாலை அனிந்திட தான் தாவிடும் ஆடிடும்
இளையராஜா : ஓ.ஓ (again!)
எஸ்பிபி விடவில்லை. அடுத்த வரியில் பாவத்தையும் மெலடியையும் கவனியுங்கள்
எஸ்பிபி : என்னிசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா?
இளையராஜா : அடடாடா.....(இது தனக்கு தானே சொல்லுவது!, மெலடி அவரது அல்லவா)
எஸ்பிபி :ள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதா?

இளையராஜா : ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் (again)
பாருங்கள். எத்தனை நயம், இசை, நேசம் எல்லாமே இருக்கும். Very authentic ராஜா இசை. எஸ்பிபி குரல். இராட்சசர்கள்!

அடுத்த பாடல், எஸ்பிபி யேசுதாஸ் இணைந்து பாடியது. எல்லோருக்கும் உடனே ஞாபகம் வருவது “காட்டு குயிலு” தான். அதை விட இந்த பாடல் ஒரு படி அதிகம் தான்! படம் கௌரி மனோகரி. இசை மலையாளத்து இனியவன்! மெல்லிசை கர்நாடக இசைகளுக்கு இடையேயான போட்டி. இந்த இருவரை தவிர போட்டிக்கு வேறு யார் தகுதியானவர் என்று நினைக்கிறீர்கள். Amazing!
ஜேசுதாஸின் ஆலாபனையுடன் ஆரம்பிக்கிறது. எஸ்பிபி பல்லவி எடுக்க பாடல் மெதுவாக டேக் ஒப் ஆகிறது. எஸ்பிபியும் சின்ன சின்ன ஆலாபனைகள் முயற்சி செய்தாலும் ஜேசுதாஸ் முன்னால் அது வான்கோழி effort ஆகிவிடுகிறது!  இண்டர்லூட் முழுதும் இனிமையான ஜேசுதாஸ் சுரவரிசைகள். எனக்கு இந்த ராகம் மாட்டர் ஒன்றும் தெரியாது. அதை தான் எஸ்பிபியும் சரணத்தில் பாடுகிறார். சரணத்தில் எஸ்பிபி சிக்ஸ் அடித்துவிட இப்போது ஜேசுதாஸ் அண்டர் ப்ரெஷர்!
இரண்டாவது சரணத்தில் கடும் போட்டி. சுரமும் பாடலும் போட்டி போடுகிறது. இங்கே தான் எஸ்பிபி தப்பு செய்கிறார். தன் குரலில் பாவத்தை கை விட்டுவிட்டு கர்நாடக பாணிக்கு தாவுகிறார். எஸ்பிபி தன் பாணியில் பாடியிருந்திருக்கவேண்டும், இனிமை இப்போது கொஞ்சம் மிஸ்ஸிங். ஜேசுதாஸ் இரண்டாவது சரணத்தில் கொஞ்சம் பீட் பண்ணி விடுகிறார். அந்த சந்தோஷ ஸ்தாயி முடிக்கும் போது குரலில் தெரிகிறது. இறுதி பல்லவியை ஆலாபனையுடன் ஜேசுதாஸ் பாடுகிறார்!
இந்த பாடலை பேராதனை பூங்காவில், நண்பர்கள் உறவினர்களுடன் ஒருமுறை சென்றபோது பாடச்சொல்லி பாட முயற்சித்து மூக்குடைபட்டது ஞாபகம் வருகிறது! தேவையில்லாமல் பல்ப் வாங்குவதில் என்னைப்போல ஒரு ஆளை வேறு எங்கும் காண கிடைக்காது.
இரண்டு ஜாம்பவான்கள் பாடும் பாடல். இனி வருமா? ஐயோடா!



அடுத்த பாடல் அதிகம் அறிமுகம் தேவை இல்லை. படம் “படித்தால் மட்டும் போதுமா”. பிபிஸ் டிஎம்எஸ் இணைந்து கலக்கிய எவர்கிரீன் எம்எஸ்வி பாடல்.  பாடல் காட்சியில் அளவுக்கு அதிகமான நாடகத்தன்மை. கொடுத்த காசுக்கு மேலாகவே நடித்து இருக்கிறார்கள். இருவருக்கும் ஐம்பது வயது மேக் அப் வேறு போட்டு இருக்கிறார்கள்!!
இந்த பாடலுக்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் தேவையான அளவு பிரித்து மெய்ந்துவிட்டார்கள். சிவத்திரன் மாஸ்டரும், குமரன் மாஸ்டரும் 1997 ம் ஆண்டு சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி அசத்தியது இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது.




அடுத்த பாடல், என்னுடைய all time favourites களில் ஒன்று. “Girl Is Mine”. பாடல் எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால், என்னுடைய ஒரு சிறுகதைக்கு Girl Is Mine என்று வைக்கும் அளவுக்கு பிடிக்கும். தலைவர் மைக்கல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பத்து பாடல்.  திரில்லரில் பெஸ்ட் என்று நான் நினைப்பது “wanna be starting something” என்ற பாடல் தான். ஆனால் இந்த மெலடியும் அது அளவுக்கு பிடிக்கும். மைக்கல் ஜாக்சன் ஒரு கம்போஸர், பாடலாசிரியர் மாற்றும் நடனமேதை. இப்படி ஒரு டாலேன்ட் எப்போது பார்க்கபோகிறோமோ தெரியாது.




Beatles புகழ் Paul McCartney யுடன் மைக்கல் ஜாக்சன் சேர்ந்து பாடியது. இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். அவளும் தன்னை தான் காதலிக்கிறாள் என்று இருவருமே உரிமை கோருகிறார்கள்.  Paul இன் குரலில் அருமையான பேஸ் இருக்கும். நம்ம ஜேசுதாஸ் போல. MJ பற்றி சொல்லவே தேவையேயில்லை. ஹை பிட்சில் பிச்சு உதறுவார். இருவருமே சேரும்போது அற்புதமான இசை ஹார்மனி ஒன்று உருவாகுகிறது.
MJ இந்த பாடலை ஒரு நடுராத்திரியில் திடீரென்று எழுந்து கட கடவென எழுதியதாக கூறுவர். MJ க்கு மிகவும் பிடித்த பாடல் என அவரே சொல்லியிருக்கிறார். இந்த பாடலில் ஒரு அரசியலும் இருக்கிறது. இது த்ரில்லரில் இருந்த ஒரே ஒரு மெலடி பொப் பாடல். உயர்குடி வெள்ளையர்களை திருப்திப்படுத்த MJ உருவாக்கிய பாடல் என்றும் சிலர் சொல்லுவார்கள்.
மைக்கல் பாடலாசிரியாராக மிளிரும் இடங்கள் ஏராளம். அவரின் பாடல்களில் வரிகள் எப்போதுமே high quality இல் இருக்கும். இந்த பாடலும் குறைவில்லை. பாடலை கேட்கும் போது வரிகளையும் கவனியுங்கள்! இசையும் கவிதையும் சங்கமிக்கும் பாடல். இயல்பாக இருக்கும்.
"The Girl Is Mine"
[(Michael)]
Every Night She Walks Right In My Dreams
Since I Met Her From The Start
I'm So Proud I Am The Only One
Who Is Special In Her Heart
[Chorus]
The Girl Is Mine
The Doggone Girl Is Mine
I Know She's Mine
Because The Doggone Girl Is Mine
[(Paul)]
I Don't Understand The Way You Think
Saying That She's Yours Not Mine
Sending Roses And Your Silly Dreams
Really Just A Waste Of Time
[Chorus]
Because She's Mine
The Doggone Girl Is Mine
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
[Bridge (Paul)]
I Love You More Than He
(Take You Anywhere)
[Michael]
But I Love You Endlessly
(Loving We Will Share)
[Michael & Paul]
So Come And Go With Me
To One Town
[Michael]
But We Both Cannot Have Her
So It's One Or The Other
And One Day You'll Discover
That She's My Girl Forever And Ever
[(Paul)]
I Don't Build Your Hopes To Be Let Down
'Cause I Really Feel It's Time
[Michael]
I Know She'll Tell You I'm The One For Her
'Cause She Said I Blow Her Mind
Chorus (Michael)
The Girl Is Mine
The Doggone Girl Is Mine
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
[Michael & Paul]
She's Mine, She's Mine
No, No, No, She's Mine
The Girl Is Mine, The Girl Is Mine
The Girl Is Mine, The Girl Is Mine
[Paul]
The Girl Is Mine, (Yep) She's Mine
The Girl Is Mine, (Yep) She's Mine
[Michael]
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
The Girl Is Mine, The Girl Is Mine
[Paul]
Michael, We're Not Going To Fight About This, Okay
[Michael]
Paul, I Think I Told You, I'm A Lover Not A Fighter (சூப்பர்)
[Paul]
I've Heard It All Before, Michael
She Told Me That I'm Her Forever Lover, You Know, Don't You Remember
[Michael]
Well, After Loving Me, She Said She Couldn't Love Another
[Paul]
Is That What She Said?
[Michael]
Yes, She Said It, You Keep Dreaming
[Paul]
                                                               I Don't Believe It (என்ன ரேஞ்சு இது! பாடவே முடியாது)

Comments

  1. என் பதிவுகளிற் சிலவற்றிற்கு 100 ஹிற்ஸ் கூட இல்லை :-(

    உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் எழுதுங்கோ :-).

    PS : நானும் ஒரு மைக்கேல் ஜாக்சன் ரசிகன், தீவிர ரசிகன். அதேநேரத்தில் மகாராஜபுரம் சந்தானத்தினதும் ரசிகன். அதுவும் தீவிர ரசிகன்தான்.

    ReplyDelete
  2. காட்டுக் குயிலை ஒதுக்கியதன் மூலம் நீங்கள் 'பெரியவர்' என்று உறுதிப்படுத்தி உள்ளீர்கள் - வாலிபர்கள் சார்பில் கண்டனங்கள்.

    ReplyDelete
  3. நன்றி சக்திவேல்! ஹிட்ஸ் எல்லாம் இப்ப கவனிக்கிறதில்ல.. நம்ம பாட்டுக்கு எழுதுவோம்!

    ReplyDelete
  4. @வாலிபா .. காட்டுக்குயிலு "அருவி கூட" வோடு ஒப்பிடும்போது கொஞ்சம் below par தான்!!

    ReplyDelete
  5. மன்மதகுஞ்சு1/17/2012 9:29 pm

    அது என்னமோ தெரியல மனோவின் அதோ மேக ஊர்வலம் பாட்டு அதிகமான பாடல்களில் எதிரொலிப்பது தவிர்க்கமுடியாததாகிப்போகிறது,காதல் தேசம் பாடலை பாடாத இளைஞர்களே இல்லையெனலாம் 1996 இல் .. ஒரு பெண் -இரு காதலர் கதையில் காட்சிக்கேற்ற பாடல் வரி ,குழையும் இசையும் நிலவு காட்சியும் மனதில் என்றும் வாட்டும் ..

    அருவி கூட பாடல் மனசில் உள்ள கலவரங்களையெல்லாம் தூக்கி எறீந்துவிட்டு ரிலாக்ஸாக்கும் பாடல்,அதன் இசையை மிகவும் லாவகமாக ஆலாபனை, பல்லவி,இண்டர்லூட்,சரணம் மிகவும் அழகாக எடுத்துக்கூறியிருப்பது கேட்காதவர்களை தேடிப்பிடித்து கேட்க சொல்லும்..அதிலும் இசை ஒன்றே என்ற வரிகளை பாடும் விதம் ....

    MJ பாட்டு அருமை...அவரின் மெலடிகளை எம் வீட்டின் வாசல் வரை தேவா அவர்கள் கொண்டு வந்து டெலிவரை செய்துவிட்டதால் ஒலக பாடலை கேட்கமுடியவில்லை.. இப்போது அந்த பாக்கியம் கிடைத்தது சூப்பர்

    ReplyDelete
  6. MJ ன் மேலடிகளை கேட்காமலேயே அவரை பற்றி பலர் விமர்சனம் செய்வர். அவர் வெறும் நடன கலைஞர் என்ற அளவில் நினைத்துக்கொள்பவர்களும் ஏராளம். He is a legendary music composer. உனக்கு தெரியும் தானே... நாங்க பிரியா வீட்ட கேட்காத பாட்டா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...