சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா. கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார்.
“சாரி டீ இன்னும் வரல”
“ஆ நான் அப்புறமா பேசறேன்”
“கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!”
“இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்”
“ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்”
“ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்”
தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்!
“ஜேகே .. நீயும் எழுதுவ தானே”
“எழுதினான், பட் சரி வரல!”
“ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!”
“ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது”
“கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?”
“What the … கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி”
“இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே”
“நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?”
“இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்தான் தெரியுது”
“ஏண்டா கோர்த்து விடுறீங்க, ஒங்களுக்கு கவுஜ தானே வேணும் பாஸ்!”
எனக்கு இந்த கவிதை மாட்டார் என்றாலே ஸ்ரீலங்கா ஆர்மிக்கு ஐடென்டிட்டி கார்ட் காட்டுவது போல வயத்த கலக்கும்! இதுக்காக தான் ஏதன்ஸ் வாலிபன் உலகக் கவுஜ எல்லாம் பதிவில போட்ட போது ஒரு சின்ன கமெண்ட்டுடன் நான் எஸ்கேப்பு. சிங்கை கவிஞர் கௌரியிடம் இயல்பாக இருக்கும் கோபம் அவரை ஒலக கவிதை எழுத தடுக்குது என்று வாலிபன் எனக்கு ஒருமுறை சொன்னாப்ல!(கோர்த்து விட்டாச்சு)! இத்தனை ரவுடிங்க இறுக்கிற தெருவில பேஸ்மண்ட வீக்கான நமக்கு ஹன்சிகா வேண்டாம் என்று தான் தோன்றியது. பக்கத்து தெருவில தான் கவிஞர் கேதா வேறு இருக்கிறான். அவனும் அவன்ட மனிசியுமா சேர்ந்து நம்மட ஹன்சிகாவை நாறடிச்சிடுவாங்களே என்று டிக் டிக்.
விதி வலியது! எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஏன் ஆகாமப்போனது என்று ஊரே கேட்டுது! சொல்லணுமா? சுஜாதா தான். யாப்பு படிச்சு தேர்ந்தா பிறகு தான் மீறி புதுக்கவிதை எழுதணுமாம். போங்கடா போக்கத்த பசங்களா எண்டு கவுஜ பக்கமே போறதில்ல! வேணுமின்னா நீ ஹன்சிகாவ வச்சுக்க. எனக்கு மேகலாவே போதும். ஒலக கவிஞர் கேதாவ கோர்த்து விடலாம் எண்டா, மச்சி நீ கவித பாடியே தீரனும் என்று கொலைவெறில தலைவரு. நானும் பாரத்த ஹன்சிகா மேல போட்டிட்டு கவுஜய எழுதீட்டன். பொண்ணும் நல்லா தாங்குது! எழுதி முடிச்சா பீம் பீம் என்று யாரோ ஹாரன் அடிக்கறான், கவிஞர் கேதா வாசலில. வாசிச்சிட்டு சொன்னாரு,
மாப்பிள, இந்தா நாத்தம் நாறுது, ரொம்ப டீப்பா லவ்வு பண்ணுற. இப்படி பாடினா பொண்ணு போடாங்கோனு சொல்லீட்டு போய்க்கிட்டே இருக்குமே!
டீப்பா லவ்வு பண்ணினா நாறுமா பாஸ்?
காதல் என்பது துர்நாற்றம் வீசும் பூ!
நம்ம கவிதை?
அது குப்பை கூட மூக்கைப்பொத்தும் நாற்றம்!
என்ன கொடுமை சரவணா. இதுக்கு சுஜாதா தேவலாம் என்று சொல்லி நானும் கவித பாடியாச்சு. பாருங்கள் மக்களே. குப்பை ரொம்ப நாறுதா? அட்லீஸ்ட் அகற்ற சொல்லி ஒரு கமெண்ட் ஆவது போடுங்க மகா ஜனங்களே. இனி கவுஜைக்கு போவோமா?
ஒரு சின்ன கிளிப்பிங்! நாங்களும் டிவில வரணும் இல்லையா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பானை பழம் ரெடி
பாக்கு வெற்றிலை ஊதுபத்தியும் ரெடி
கும்பம் வைக்க தேங்காய் முடியும் ரெடி
அடடா பிள்ளையார் பிடிக்க வேண்டுமே!
ஆஸி முழுக்க மூசி மூசி மாடுகள் தேட
மாடுகளை தேட!
கடைசியில் நான் மாட்டினேன்!
பிள்ளையார் பிடிக்க போய் கவிஞராய் ஆன கதை இது!
நல்ல காலம்,
வாலி கூட கவிஞன் தானே!
மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் கனிச்சீர் என்னும்
கடிச்சீர் எண்ணம் கடுகளவும் இல்லை!
மண் வாசனை, மாவீரர் மறைவு, வெருகல் என்னும்
நினைவிடை தோய்தலுக்கு கறாராய் அனுமதியும் இல்லை!
டிஸ்டன்ஸ்ல மூனு,
மூனு கலரு வைட்டு,
வைட்டு பேக்ரவுண்டு நைட்டு
என்று சந்தம் பாட நான் தரணி போற்றும் கவிஞனும் இல்லை!
அக்கம் பக்கம் பார்க்கிறேன்!
அதிரதர் ஆர்ப்பரிக்கும் மேடை.
அற்பன் எனக்கு ரதமும் களமும் கொடுத்ததே
ஆப்பு வைப்பதற்கு தானோ என்று ஒரு சந்தேகம்
அர்த்தரதன் போல் அனைத்தும் இழந்து,
அனாதையாய் நின்றாலும்,
அகதியாய் வந்தவனை அள்ளி அணைக்கும் தேசம் இல்லையா!
ஆசையில் கவிபாட வந்த பூசை நான்
கவியில் நிறை இருந்தால் கர ஓசை தாருங்கள்
குறை இருந்தால் கல்லெறியுங்கள்!
அறை எனக்கு புதிதில்லை,
அறை எமக்கு புதிதில்லை
இறை பிதா இயேசுவையும் அது விடவில்லை!
தமிழுக்கென்று தனிமாசமாம்! முதல் நாளில் பொங்கலாம்
தையல் அவள் வரவுக்கு அத்தனை ஆரவாரம் ஏனோ?
வெளிக்கிடும் போது மருமகள் வியாக்கியானம் கேட்டாள்!
அள்ளி அணைத்தேன் அக்காவின் உறவை
ஆசையாய் சொன்னேன் தை மகளின் கதையை
உழைக்கும் மக்களாம் உழவர்,
ஆடிப்பட்டம் தேடி விதைத்து,
அல்லும் பகலும் ஓடி உழைத்து,
ஆறாம் மாசம் அரிவி வெட்டி
புதிர் எடுத்து அது குழைத்து
புதுப்பானை அடுப்பில் வைத்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை சேர்ந்து பொங்கல் பொங்கி
மகிழும் நாளாம் தை முதல் நாள்.
உப்பிட்டவன் உள்ளளவும் நினைக்கும் நாள்
உதயனையும் உழவனையும் வணங்கும் நாள்
தை மகள் தமிழனின் முதல் மகள் மூத்த மகள் என்றேன்
முழுசிப்பார்த்தாள் மூன்று வயது தத்தை.
இத்தனை விளக்கம் எதுக்கு எனக்கு ?
முட்டாள் மாமா தெரியாதாம் உனக்கு!
தை தான் தமிழர் புத்தாண்டு என்றாம் ஒரு கணக்கு!
சொன்னபோது உணர்ந்தேன், மடியில் சுவாமி நாதனை!
தை பெண்ணே! உன்னை தாய் என்று சொல்லவா?
சங்கடமான கேள்வி!
தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!
தமிழ் புத்தாண்டு உனக்கு பிறந்தானா?
இல்லை சித்திரைக்கு பிறந்தானா?
அப்பா உன்னது என்கிறார்
அம்மா சித்திரை என்கிறார்
ஒரு டிஎன்ஏ சாம்பிள் கொடேன்
தகப்பன் போன இடம் தெரியவில்லை!!
தாய் யார் என்பதும் புரியவில்லை!
தமிழனே!
தாய் நாட்டை தொலைத்தது போல பெற்ற தாயையும் தொலைத்து விடாதே!
தை பெண்ணே! உன்னை காதலி என்று சொல்லவா?
தென்மேற்கு பருவமழை, திருவையாறு இசை கச்சேரி,
முத்திவிநாயகர் கோயிலில் திருவெம்பாவை பஜனை,
உன்னை வரவேற்க மார்கழி தயாராகும்
என் பெண்ணை வரவேற்க வீட்டில் பொங்கல் பொங்கும்
வஞ்சியை கொண்டாட வண்டுகள் வெடிகள் கொழுத்தும்
மோகம் முப்பது நாளில் முழு உலகமும்
காதலர் தினம் கொண்டாடும்
நீயும் மாசமாவாய்,
மாசியும் வரும் கையோடு மகமும் வரும்
தாட்சாயினியும் பிறப்பாள்
முருகன் கைப்பிடிப்பான்!
தக்கனுக்கு வந்து தண்டனையும் கொடுப்பான்
அன்று தமிழர் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கானது
இன்று குரங்கு பிடிப்பதெல்லாம் பிள்ளையார் ஆகிறது!
நம்பியாரும் நார்வேயும் கைவிட்ட நமக்கு
நம்பிக்கை இருக்கு கடைசி வரை துணைக்கு!
தையல் பெண்ணே வருக
திகட்ட திகட்ட காதல் செய்க!
அது ஒரு அழகிய கனாக்காலம்
அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோ
திருப்பினால்
தென் கச்சியின் - இன்று ஒரு தகவல்
குன்னக்குடி - சிறப்பு வயலின்
ஒற்றை எண்ணில் மாவிலைத்தோரணம்
முற்றத்து மண்ணில் அரிசிமாக்கோலம்
வெடி கொளுத்தும் அண்ணன்மார்!
வெடியோடும் அண்ணன்மார்!
அக்காவும் வந்து இணைய ஆட்டம் சூடு பிடிக்கும்!
ஆதவன் மெல்ல எழுகிறான்
ஆவின் பால் பொங்கி வழிகிறது
அம்மா பால் நினைந்தூட்டியவனை பண்ணிசைக்க
கரும்பும், கறுத்தகொழும்பானும், கதலியும் சேர்த்து
புட்கை சாப்பிட்டோம்!
சிங்களவன் சிரிப்பான் அதையும் பொங்கல் ஆக்கி விட்டோம்
தமிழன் பொங்குவது தைப்பிறப்புக்கு மட்டும் தானே!
நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்
கைலையில் சிவன் ஆட அப்பர் பாடினார்!!
இலங்கையில் கிருஷ்ணா பாட சம்மந்தர் ஆடுறார்!!!
மேல்போர்னில் தைப்பொங்கல்!
அதிகாலையில் அலாரம்,
அடிக்கும் போது பத்து மணி!
எழுந்தவுடன் சண் டிவியில்
எந்திரன் சிறப்பு காட்சி
பொங்கல் எங்கயடி? எண்டு பொண்டாட்டியிடம் கேட்டால்
மங்களம் தான் தருவாள் மதுரைக்கு அரசி!
முற்றத்து அரிசிக்கோலமும் திரிஷா மார்பில் டாட்டு ஆனது
தேங்காய் மஞ்சள் கும்பம் எல்லாம் ஹன்சிகா மோத்வானி உருவம் ஆனது
பொங்கலுக்கு சிக்கின் சேர்த்து பெப்சியுடன் பேத்தி
அங்கலாய்க்கும் பெரிசுகள் பெயர் வாங்கினர் நோட்டி
சூரியனை தேடி கிழக்கே நோக்கினேன்!
யுகம் யுகமாய் தன்னை எரித்து எம்மை அணைப்பவன்
அவன் அனல் பார்வை தாங்கோணாமல்
ஆஸி வரை ஓடி ஒளிந்துவிட்டு
குளிருக்காய் .. ஆஸி வரை ஓடி ஒளிந்துவிட்டு
தூர நின்று துதி பாடும்
எட்ட நின்று கவிபாடும்
என்னை நினைத்து எள்ளி நகையாடி
நிலம் விரல் கிளைந்திட நிற்கிறேன்
அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
என்றான் கவிஞன் ஒருவன்
முளை வர நிலம் உழுதல் வேண்டும்
களைகள் படுதல் வேண்டும்
தமிழர் எழுதல் வேண்டும்
இது எம் கடன்
அக்கடன் தீரும் வரை
தை பெண்ணே
நாம் பொங்குவோம்
பொங்கிக்கொண்டே இருப்போம்
தமிழையும் பொங்கலையும்!
பொங்கிட்டீங்க போங்க...
ReplyDeleteஉச்சரிப்பு கொஞ்சம் பிழறுதே... மேடை நடுக்கமோ..
வாழ்த்துக்கள்...
//முற்றத்து அரிசிக்கோலமும் திரிஷா மார்பில் டாட்டு ஆனது//
உங்கள் தொலை நோக்கு சிந்தனையை கண்டு நான் வியக்கேன்...
ஒலக கவிஞர் எதுக்கு இந்த அழுகல் பப்பாவில ஏத்துற அழுகுணி ஆட்டம்? சும்மா சொல்லக்கூடாது தலை, நீங்க எழுதினத வாசிச்ச உடனையே, சா இது கவிதை எண்டு சொன்னான். அதை நீங்க வாசிக்கேக்க இப்பதாண்டா கவிதை எண்டனான். இது அங்க இருந்து அனுபவிச்சவனுக்குத்தான் விளங்கும். அவனவன் பொங்கல் பானைய விட்டே வெளிய வரமாட்டன் எண்டு அடம்பிடிக்கேக்குள்ள நீங்கள் மட்டுந்தான் Trisha டாட்டூ வரைக்கும் போய் ஒரு ஆழாமான பார்வை பார்த்த தொலைநோக்கு சிந்தனையாளர். அடுத்த கவிதையில உங்கட எல்லைகளை கடந்து போவீங்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுவன்.
ReplyDeleteஎனக்கும் ஒரு நம்பிக்கை வருது, கவிதை எழுத :-)
ReplyDelete('டாய் வாணாம்டா' என்று தலைவர் சுஜாதாவின் குரல் கேட்குது)
வேடிக்கையாகச் சொன்னேன், என்னால் முடியாது, பயப்பிடவேண்டாம் :-)
ReplyDelete// ஏதன்ஸ் வாலிபன் உலகக் கவுஜ// - ரைடு, எழுத்துப்பிழைகளை 'இயன்றளவு' குறைக்கிறேன்... அட அத இப்படியா வெளிச்சம் போடுவீங்க....
ReplyDelete(பாதி ரீசன் பஞ்சி மீதி ஆர்வக்கோளாறு...)
//பொங்கலுக்கு சிக்கின் சேர்த்து பெப்சியுடன் பேத்தி
அங்கலாய்க்கும் பெரிசுகள் பெயர் வாங்கினர் நோட்டி//
இந்த இடத்தில ஓசை நயம் நல்லா இருக்கு...
கைகள் சந்திக்க எழுதின கவிதை சிரிச்சுட்டு போக நிறைய இருக்கு...
கவிதை எண்டுறது ஆத்தில குளிக்கிற மாதிரி ஒவொரு குளியலும் ஒவ்வொருத்தர் குளியலும் வேறு வேறு - அது தனி - என் அடங்காத தாகத்தை தணிக்காத கானல் - என் கைக்கெட்டாத நீர் -
நன்றி மயிலன் .. தமிழ் மேடை எறி சரியாக பத்து வருஷம். கோர்வையாக, அட்சர சுத்தமாக பேசும் ஆற்றல் கொஞ்சம் போய் விட்டது. இரண்டு மேடை ஏற அது வரும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete//உங்கள் தொலை நோக்கு சிந்தனையை கண்டு நான் வியக்கேன்...
லைட்டா உள்குத்து இருக்குமாப்போல!
கேதா,
ReplyDeleteஇந்தியன் டீமுக்கு சச்சின் ஆட்டம் ஓரளவுக்கு ஓகே எண்டு சொல்றீங்க!
சக்திவேல், நான் எழுதினது கவிதை தான் என்று உங்கட பாவப்பட்ட மனசு நம்பினா .. எழுதித்தள்ளலாம்! மக்களே கணையாழியின் கடைசிப்பக்கங்கள் மாத்திரம் வாசிச்சா, கவிதை எழுதுறவன் எல்லாம் நாண்டுக்கிட்டு செத்திடுவாங்க. தலைவர் அப்பிடி கலாய்ச்சி இருக்கிறாரு!
ReplyDeleteவாலிபா!
ReplyDeleteகவுஜ என்ற சொல்லு தமிழ்நாட்டில் கவிதையை நக்கலாக சொல்ல பாவிப்பது!!! ஒங்க ஒலக கவுஜய நான் நக்கல் அடிப்பனா பாஸ்!!!!!
//கைகள் சந்திக்க எழுதின கவிதை சிரிச்சுட்டு போக நிறைய இருக்கு...//
கேப்ல கவித .. அதில இருக்கிற நக்கலையும் கண்டனன்!!! சிந்திக்கவும் எழுதுகிறேன்!!!
//
கவிதை எண்டுறது ஆத்தில குளிக்கிற மாதிரி ஒவொரு குளியலும் ஒவ்வொருத்தர் குளியலும் வேறு வேறு - அது தனி - என் அடங்காத தாகத்தை தணிக்காத கானல் - என் கைக்கெட்டாத நீர் - //
என்னோடது காக்கா குளியல் பாஸ். நானும் குளிச்சேனே!!