இன்று காலை ஏதன்ஸ் நகரத்து வாலிபனின் வீட்டுக்கு போனேன். “புத்தனின் ஊரில் புத்தர்கள்” என்று ஒரு கதை. சிறுகதை. சார் கவிஞர் என்பதால் கதை எழுதினாலும் கவிதை போல இருக்கிறது. நான் எழுதும் கவிதை கதை போல இருப்பது போல! கதையை அங்கே போய் வாசியுங்கள். கதைக்கு நான் போட்ட கமெண்டும் அவன் பதிலும் பதவில் ஏற்றப்படவேண்டியது போல தோன்றியதால் காப்பி பேஸ்ட் டீ!
- //ஒரு காய்ந்து போன அரசமிலை காற்றில் நடமாடியது, மிதந்தது, ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது, கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது, சட்டென அம்பாகி நோக்கி நகர்ந்தது, வளையம் வளையமாய் சுழன்று பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது. அரசமிலைக்கு நிலம் சரணா சமாதியா ? என் கற்பனை செரியா ? //
சங்ககால உவமானம் இன்றைக்கும் நின்றுபிடிக்கிறது!
உங்கள் அளவுக்கு தமிழறிவு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நல்ல கவிதையை கதையாக எழுதி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களோ? உரைநடை கவிதை என்றும் சொல்லமாட்டேன். சிறுகதை தான். 70 களின் சிறுபத்திரிகைக்கதை.
ஒரு உண்மை, எழுதுபோருளை, சிறுகதையாக்கினால், அப்பட்டமாக முகத்தில் அடிக்கும். ஏர்போர்ட்டிலும் அடிக்கும்! கவிதையாக்கினால், ஜேகே போன்ற சாதாரண வாசகர்களுக்கு புரியாது. ஆக இரண்டும் கெட்டானான இந்த பாணிக்கு தாவிவிட்டீர்களா?
ஜே.கே இந்த சம்பிரதாயங்களை இனி விட்டு விடுவோம். இது கவிதை மாதிரி உங்களுக்கு தோன்றியது எனக்கு கொஞ்சம் வியப்பே, சிறுகதை வடிவம் தான் ஒருத்தனின் சிந்தனை ஓட்டத்தை செரியா தீட்ட உதவும். கவிதையில் சந்தங்களுக்காக நான் சமரசம் செய்ய வேண்டி இருந்திருக்கும்.... என் மொழி அறிவு இதை இதே தாக்கத்தில் கவிதையாய் தர காணாது. இது எழுதி சுமார் 5-6 வருடமிருக்கும். அண்மைக்காலமாக வலைத்தலங்களுக்குள் என் வாசிப்பை சுருக்கியதால் வீரியம் இழந்தவனாக உணருகிறேன். இந்தக் கதையே விளங்குமா எனும் சந்தேகத்தில் - பழைய பாடம் - படம் பார் பாடம் படி என்று ஆக்கியிருக்கிறேன். மற்றபடி உங்கள் வாசிப்பு ரசனை blog-அறிந்த உண்மை, நான் சாட்சிக்கு வரத் தேவையில்லை.
அந்த உதாரணம் " காற்றின் தீராத பக்கங்களில் தான் கதை எழுதிய போது" மறு ஜென்மம் எடுத்தது. நான் சும்மா பிச்சையில் இருந்து சொச்சை போடுகிறேன்.
அந்த உதாரணம் " காற்றின் தீராத பக்கங்களில் தான் கதை எழுதிய போது" மறு ஜென்மம் எடுத்தது. நான் சும்மா பிச்சையில் இருந்து சொச்சை போடுகிறேன்.
இந்த வகை சிறுகதைகள் குறிப்பாக கணையாழியில் வாசித்து இருக்கிறேன். ஈழத்தில் 90களின் ஆரம்பத்தில், இந்தியாவில் 70களில் இந்த பாணி சிறுகதைகள் தான் இலக்கியப்பட்டியல் ஆகி இருக்கிறது. அண்மையில் "Australian Short Stories" என்ற 70களின் கதைத்தொகுப்பில், யாரென்று தெரியாத ஒரு கூலியின் சாவு வீட்டை மையமாக வைத்து ஒரு சிறுகதை. இதே உணர்வுகள் தான். ரசித்தேன்.
இப்படி எழுத முயலும் போதெல்லாம், சுஜாதா என்னை தடுத்துவிடுவார். இந்த வகை எழுத்தில் ஒரு சிக்கல், வாசகனுக்கு அந்த மனநிலையை நாங்கள் create பண்ண வேண்டும். அந்த context புரிய வேண்டும். பெரும்பாலான பதிவுலக வாசகர்கள் அந்த பக்கமே போவதில்லை. தனக்கு பிடித்ததை வாசிப்பான். வித்தியாசமான எழுத்தை தனக்கு பிடித்தமானதாக்க அழும்பு பண்ணுவான். நீங்கள் சொன்னது போல், வாசிப்பு என்பது web surfing என்ற கட்டுக்குள் அடங்கிவிட்டது. ஜெயமோகனால் இன்னொரு விஷ்ணுபுரம் எழுதமுடியாது. இன்னொரு பொன்னியின்செல்வன் இந்த தலைமுறையில் சான்ஸ் இல்லை. வாசகர்கள் இல்லை. பொறுமை இல்லை. கொஞ்சப்பேர் மிச்சம் சொச்சம்! என் வீட்டு லைப்ரரி புத்தகத்தில் அம்மாவினதும் என்னுடையதும் கைரேகைகள் மட்டுமே!
எழுத்தாளர்களில் இரண்டு வகை.இசையை எடுத்துக்கொள்ளுங்கள். யாருமே இல்லாத அமேசன் காட்டுக்குள்ளும் ஏதோ ஒரு குயில் சங்கீதம் பாடிக்கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்களே இல்லாவிட்டால் இளையராஜா?
இங்கே இந்த பதிவுக்கு வராத கமெண்ட்கள் மீது கோபம் வருகிறது. உங்கள் facebook நண்பர்கள் share பண்ணும் links ஐ பார்க்கும் போது இன்னும். பக்கத்து இலையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்!
சிலவேளை காட்டுக்குள் இளையராஜா போல இருக்கிறோமோ என்று தோன்றுகிறது! எசப்பாட்டு கேக்குதா?
நிற்க, நானும் கொமேன்ட்களுக்கு ஆசைபடுகிறேன் தான், ஆனால் நிறைய கொமென்ட்களை விட இந்த மாதிரி ரசனையான ஒரு கொமென்ட் தருகிற திருப்தி தனி. என்னுடைய கோபம் நான் ரசிக்கப் படாமல் போவதிலும் ஒரு நல்ல தொழில்முறை எழுத்தாளன் ரசிக்கப்படாமல் போயிடுவானோ என்பதுதான்.
பட்டிமன்றங்களுக்கும் கலக்கப்போவது யாருக்கும் வேறுபாடற்றுப் போனது போல, எல்லாம் மாறும், மாறியே வந்துள்ளது. வேறு வழியில்லை.
>ந்த வகை சிறுகதைகள் குறிப்பாக கணையாழியில் வாசித்து இருக்கிறேன். ஈழத்தில் 90களின் ஆரம்பத்தில், இந்தியாவில் 70களில் இந்த பாணி சிறுகதைகள் தான் இலக்கியப்பட்டியல் ஆகி இருக்கிறது
ReplyDeleteOk எனக்கு மறு கருத்து உண்டு. இந்த வகைகளை (70 களின் ஸ்டைல், 90 களின் ஸ்டைல்) என்பவற்றை ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கம். நல்ல சிறுகதை, மோசமான சிறுகதை என்ற ஒன்றை மட்டும்தான் நான் ஞாபகத்திற்கு வைத்துள்ளேன். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. ஆவற்றை 30'ம் ஆண்டு ஸ்டைல் என்று ஒதுக்கிவிடமுடியுமா?
(30'ம் ஆண்டு ஒரு குத்துமதிப்பாகப் போடுகிறேன்)
சக்திவேல் ... சிறுகதைகளை நான் நல்லவை கெட்டவை என்று மதிப்பிடவரவில்லை. மதிப்பிடவும் கூடாது! ஒரு சில கதைகளை வாசிக்கும் போது அந்த பாணி கோலோச்சிய காலம் ஞாபகம் வருவதை என்னால் தவிர்க்கமுடியாது. "ஆசைக்கனவே அதிசய நிலவே" என்ற இம்சை அரசன் பாடல். புதுப்பாடல் தான். ஆனால் அந்த பாணி எம்எஸ்வி பாணி தானே. இதில் ஒதுக்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ReplyDeleteநான் சொல்ல வந்தது இந்த பாணி கோலோச்சிய காலம் என்ற ஒன்று இருந்தது என்பதை என்பதைத்தான். இது தான் இலக்கியம் என்று வரையறுக்கப்பட்ட காலம் அது. புதுமைப்பித்தன் ஒரு revolutionist writer. பின்னாளிலே இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா வந்தார்கள். உதயாவின் பாணி கொஞ்சமே சுந்தர ராமசாமி (நான் அதிகம் வாசிக்கவில்லை, ஆனால் இவர் பாணி பற்றிய ஒரு understanding சுஜாதா கணையாழியில் சொல்லி கொஞ்சம் தெரியும்)
பாடல்கள் போல எழுத்துக்கும் காலத்துப்பாணி என்ற ஒன்று இருக்கவேண்டும். விமர்சனத்துக்கு அது உதவும். தவிர அவ்வகை எழுத்துக்கள், சமகாலத்தில் இருந்த சிந்தனையோட்டத்தையும் குறிக்கும். relevance முக்கியம். உதயாவின் இந்த கதைக்கு அவனினின் சின்னவயது வாசிப்பு தான் காரணம்(அவன் தான் சொல்லவேண்டும்).
பாரதி போல இன்றும் பலர் புரட்சி கவிதை எழுதுகிறார்கள் தானே. ஆனால் அவன் காலத்தில் தான் அந்த இம்பாக்ட்!
>பாரதி போல இன்றும் பலர் புரட்சி கவிதை எழுதுகிறார்கள் தானே. ஆனால் அவன் காலத்தில் தான் அந்த இம்பாக்ட்!
ReplyDeleteok பாணிகள் ஒருவிதத்தில் சரிதான். ஆனால் பாரதி வெற்றி பெற்றதற்குக் காரணம் அவர் வாழ்ந்த காலம் என்று நான் நினைக்கவில்லை. மாறாக originality and talent. அதே பாரதியார் இப்ப பிறந்திருந்தாலும் அதே யுகக் கவிஞனாகியிருப்பார் என்பது என் வாதம்.
மோசமான கதைகள் என்று நான் சொல்லவந்தது எந்தப் பாணியிலும் நல்ல கதைகளும் எழுதலாம் மோசமான கதைகளும் எழுதலாம் என்பதற்கே.
இந்த கருத்தை எழுதும் முன் அவரது தளத்திற்கு சென்று கதையை வாசித்தேன்.. நீண்ட நாட்களாகிவிட்டது.. இதைபோல் வாசித்து..தமிழ் சிறுகதைகள் இன்னும் வலைதளங்களில் ஓர் ஓரமாய் வாழ்துகொண்டுதான் இருக்கிறன..
ReplyDeleteஆனால் நீங்கள் சொன்னதுபோல...
//பெரும்பாலான பதிவுலக வாசகர்கள் அந்த பக்கமே போவதில்லை. தனக்கு பிடித்ததை வாசிப்பான். வித்தியாசமான எழுத்தை தனக்கு பிடித்தமானதாக்க அழும்பு பண்ணுவான். நீங்கள் சொன்னது போல், வாசிப்பு என்பது web surfing என்ற கட்டுக்குள் அடங்கிவிட்டது. //
இங்கு கவிதைகளையும் கதைகளையும் விரும்பும் வாசகர்கள் மிகவும் குறைவு... மீறி கதை இருந்தால் அதன் உயர அகலத்தை பொறுத்தே வாசிப்பு முடிவு செய்ய படுகிறது...
நீண்ட கதையெனில் வாசிக்காமலே...ஓர் "அருமை" மட்டும் கிடைத்துவிடுகிறது..
அத்தகைய கருத்துரைகளின் எண்ணிக்கையைவிட இதுபோல் ஒன்றிரண்டு கருத்துரைகள் வந்தாலே எழுத்தாளன் சந்தொஷபடுவான்.. அந்த விதத்தில் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
வலைப்பூவில் ஓசியில் படிக்கவே யாரும் முன்வராத நிலையில், காசு கொடுத்து வாங்கி இன்னொரு பொன்னியின் செல்வனா..? அட போங்க சார்...
வாலிபன் அவர்கள் உங்களது தனிப்பட்ட நண்பர் எனில்...அவரிடம் அவரின் தளத்தில் இணையும் இணைப்பு பட்டையை நிறுவ சொல்லுங்கள்... கருத்து மட்டறுப்பை நீக்கிவிட சொல்லுங்கள்.. முக்கியமாய் word verification யும் நீக்கிவிட சொல்லுங்கள்..
ReplyDeleteமேலும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது; என் மேலுள்ள comments எதுவும் ஏ.எ.வா'இன் சிறுகதை பற்றியது இல்லை. பொதுப்படியானது.
ReplyDeleteஆனால் அவரது சிறுகதை 70 பாணி என்பதை "அதிகப்பிரசங்கி" த்தனமாக எதிர்க்கிறேன் :-). அது 70 பாணியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நல்ல கதையா என்று பாருங்கள். (மீண்டும் அ.பி. தனம்)
சக்திவேல், பாரதி யுக கவிஞன் ஆனதுக்கு அவன் காலமும் ஒரு காரணம் என நினைக்கிறேன். கவிதைகளால் சமூகமாற்றங்களை ஏற்படுத்த முடிந்த காலம். இப்போது உக்கிர இலக்கியங்களின் தடங்கல் வேறு. சேரன், வைரமுத்து, அப்துல்ரகுமான் போன்ற கவிஞர்களால் சிறுதுரும்பை கூட தூக்கி போடா முடியாத நிலைமை தான். பாரதியின் வாழ்க்கை வாழ்ந்தால் சிலவேளை நடக்கலாம் தான். ஆனால் அவனும் தளம் மாற்றி போராடியிருப்பான் என்றே தோன்றுகிறது. சிலவேளை மீடியா சப்போர்ட் இருந்தால் முடியும். அதற்கு அவன் சில விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டும். அவன் மாட்டான். அதனாலேயே இன்னொரு பெரியாரும் பாரதியும் உருவாவது கடினம். ஞானி கூட ஐந்து பத்திரிகள் மாறி தான் ஒபக்கங்கள் எழுத வேண்டிஇருக்கிறது.
ReplyDeleteசிலவேளை அவனால் முடியலாம். அவன் ஒரு போராளி தானே. Anyway இவை எல்லாம் வெறும் speculations தான். அவன் தான இல்லையே!
நன்றி மயிலன். பொறுமையும் Areas of interests ம் தான் வாசிப்பு இன்றைக்கு இருக்கும் நிலைக்கு காரணம். தமிழ்நாட்டில் வாசிப்பு நன்றாக இருக்கிறது என்றே நினைக்கிறேன் (புத்தகச்சந்தை வியாபாரம்).. ஈழத்திலும் புலம்பெயர்ந்தவர் மத்தியிலும் போர் நல்ல ஒரு excuse ஆக எல்லோருக்கும் போய் விட்டது.
ReplyDeleteகதையை வாசித்தபோது அது நிச்சயமாக என்னை பின்னோக்கி அழைத்துப்போன உணர்வு ஏற்பட்டது. ஜேகே சொன்னதுபோல எழுபதுகளின் சஞ்சிகையொன்றில் தேர்ந்த ஒரு எழுத்தாளனால் எழுதப்பட்ட கதைபோன்ற உணர்வை அந்த உரைநடை ஏற்படுத்தியிருந்தது. புதுமைப்பித்தனின் கதைகளில் இந்த எழுத்தை நான் கண்டிருக்கிறேன். அதற்குப்பின் ஜெயகாந்தனின் நடையிலும், சிலவேளைகளில் பாலகுமாரனின் நடையிலும் இந்த ஓட்டம் இருக்கும். யாரோ ஒருவன் கதையின் மையத்தில் நின்று, செய்யும் சுயவிசாரணையும், தேடல்களும் கதையோட்டத்தில் கலந்திருக்கும். எனக்கு இந்த எழுத்து பிடிக்கும். இது ஒரு புள்ளியில் வாசகனை இருத்தி, அவன் வாழ்க்கையை அந்த புள்ளிக்கு இழுத்து வரும். சுஜாதாவின், இன்றைக்கு ஜேகே இன் நடை வாசகனை ஒரு வேகமான நதி ஓட்டம்போல் இழுத்து செல்லும். அதிலும் குறிப்பாக எழுத்தாளன் எல்லா விசாரணைகளையும். தர்க்கங்களையும், சிந்தனைகளையும் வாசகனிடமே விட்டுவிடுகிறான். இந்த இரண்டு நடைகளிலும் ஒரு அழகு. ஆனால் பின் சொன்ன நடை இன்றைய இணைய வாசகனின் வாசிப்புக்கு அதிகளம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteபாலகுமாரன் என்னில் பிரிக்க முடியாத ஒரு ஆட்கொணர்வு - நான் நிறையவும் ஆழவும் வாசித்திருக்குறேன். இங்கே சிலாகிப்பவர்களது வாசிப்பு என்னையும் தாண்டி நிற்பதால் தள்ளி நின்று கற்றுக்கொள்கிறேன்.
ReplyDeleteஇந்த 70 நடை, 80 நடை, சண்ட வரிசை, லகு துரிதம் அனுத்துரிதம் எல்லாம் எனக்கு தெரியாது சாரே... சிவஞானம் அல்லது போல் சேருக்கு தெரிஞ்சிருக்கலாம்
பாலகுமாரன் என்றால் உடனே நினைவுக்கு வருவது சுந்தரத்தின் உயிர் பிரிதலை 'அலை பாயுதே' பாடலைக் கொண்டு சித்தரித்தது - விஸ்வரூபம். அதே போல் மாணிக்கவாசகர் கதையும் மணியாத்தான் இருக்கும்.
வாலிபரே
ReplyDeleteஅது எப்பிடி இலக்கியவாதி என்று கொண்டாட ஆரம்பித்தவுடன் புரியாத அருந்ததிராய் புலிட்சருக்கு எழுதுறது போல ஆரம்பிச்சிடுறீங்க?
ஆமா இவர் நம்மளக் கிண்டுறாரா இல்லை ராயக் கிண்டுறாரா ?
ReplyDelete//சண்ட வரிசை, லகு துரிதம் அனுத்துரிதம் எல்லாம் எனக்கு தெரியாது சாரே.//
ReplyDeleteஇதெல்லாம் தெரிஞ்சிருந்தா எனக்கும் மியூசிக் D வந்திருக்கும் தலை. எத்தினை தரம் பாடமாக்கியும் ஏறலையே.