Skip to main content

Posts

Showing posts from February, 2012

Disgrace

அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன். வெண்மேக கூட்டம்! சூரியன் மெதுவாய் நோட்டம்! வெள்ளைக்காரி வெட்கம்! கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five? நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends ...

A Thousand Splendid Suns

டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள். “யாரடா அந்த பொண்ணு?” “பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க! “The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது! ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிர...