மே மாசம் பதினெட்டு. பிரபாகரனின் சடலம் மீட்கப்படுவதோடு புத்தகம் ஆரம்பிக்கிறது! அந்த சம்பவத்தின் பின்னரான சிங்களவர் தமிழர் உணர்ச்சிகளும், வெளிப்படுத்திய முறையும் தொடர, அடுத்த சாப்டரில், விஷயம் இலங்கை வரலாறுக்கு தாவுகிறது. முதல் முதலில் தமிழர்களும், சிங்களவர்களும் எனக்கு சொல்லிவைத்திருந்த வரலாற்றை ஒரு வெள்ளைக்காரன் வேறு தளத்தில் மூலாதாரங்களுடன் எழுத, வரலாறுகளில் நம்பிக்கை இழக்கிறேன்! ரோமில் எரியும் போது பிடில் பிடித்தவன் யார் என்ற உண்மை! அப்புறமாய் தீயை அணைத்தவன் எழுதும் வரலாற்றில் தங்கியிருக்கிறது!. சோழ சாம்ராஜ்யத்தில் பாலும் தேனும் ஓடியதா அல்லது குருதியும் குரோதமுமா? என்பது நீங்கள் தமிழனா கலிங்கனா என்பதில் தங்கியிருக்கிறது. கலிங்கன் அடுத்த தலைமுறைக்கு தங்கினானா என்பதிலும் தங்கியிருக்கிறது! அஜீத்தன் எழுதியது போல, history always written by winners. நம்ம சங்க இலக்கியத்தையும் கம்பனையும் ஏன் காந்தியையும் கூட ஒரு வித பதட்டத்துடன் பார்க்கும் தருணம்!
Gordon Weiss இன்னொரு வெள்ளைக்கார லசந்த விக்கிரமசிங்க, சிவராம், ரஜனி திரணகம .. You name it! வாசித்த ஒவ்வொரு சிங்களவனும் தமிழனும் தன்னை தானே காறித்துப்பவேண்டும். துப்பினேன்! கோத்தாவும் மகிந்தாவும் செய்த அநியாயங்கள், போர் முனையில் சிக்கியிருந்த கருண் என்ற UN காரரின் அனுபவங்கள், புலிகள் செய்த அட்டூழியங்கள். வேண்டாம் இதை எழுதி, அதற்கொரு ஐநூறு கமெண்ட்கள் அங்கேயும் இங்கேயுமாய் .. அயர்ச்சி!
இதை வாசிக்கும் நீங்கள் தமிழரோ இல்லை சிங்களரோ இல்லை என்றால், தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்! தந்த பாலாவுக்கு நன்றி. சீக்கிரம் வாங்கப்பா .. நிறைய கதைக்க இருக்கு!
நான் ஏன் இதை வாசிக்கவேண்டும்? பேசாமல் ஒரு பைனரி பாயிண்ட்டில் நின்று விட்டால் என்ன? எது என்னை தடுக்குது?
Comments
Post a Comment