Skip to main content

டெல்லிக்கு ராஜா!


2
ராஜாவுக்கு பிறந்தநாள்!
வெறுமனே வாழ்த்தை facebook இல் சொல்லி கடலில் விழுந்த துளியாக்குவதில்(அடடா இது வைரமுத்து கற்பனை ஆச்சே, ராஜா கோபிக்கப்போகிறார்) இஷ்டமில்லை. பதின்மத்து வயதில் ராஜா என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது. புதிதாக எதை சொல்லப்போகிறோம் என்று யோசித்தபோது ராஜா ஹிந்தியில் கோலோச்சிய பாடல்களை எடுத்துவிடலாம் என்ற ஒரு யோசனை. ஆனால் ஒன்று, எந்த ஒரு புதுப்பாட்டையும் முதன் முதலில் கேட்கும்போது ஒட்டாமல் தான் இருக்கும். கேட்க கேட்க உயிரை எடுக்கும். அந்த தேடலை ரசிகன் தான் செய்யவேண்டும். அதனால் இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே கேட்ட, உயிரை எடுத்த, எடுத்துக்கொண்டு இருக்கின்ற ராஜா பாடல்களை ஹிந்தியில் தருகிறேன். வெறும் மொழிமாற்றம் இல்லாமல் arrangements இல் மாற்றம் காட்டியிருக்கும் பாடல்கள். சில ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவை. பல இங்கேயிருந்து ஹிந்தி போனவை.
Aur_Ek_prem_Kahani__packshot_re_big“Aur Ek Prem Kahani” என்று ஒரு படம். கமல் நடித்த கன்னட சூப்பர் ஹிட்டான “கோகிலா” ரீமேக். பாலுமகேந்திரா படம். புதுசாக போடாமல் தன் பழைய ஹிட் மெட்டுகளை பாவித்து வெளியிட, இசை .. இசையை புரிந்தவர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் வணிக வெற்றியை வைத்து நல்ல இசையையும் படத்தையும் கணிப்பவர்களுக்கு குப்பையானது!
முதலில் தமிழின் ஜானகி பாடிய “காற்றில் எந்தன் கீதம்”, ஹிந்தியில் ஆஷா போன்ஸ்லே. ஹிந்தியில் பாடும்போது ஒரு வித “கட்” எப்போதும் இருக்கும். பாடல்களில் சுரங்களின் போது sustain இருக்காது. அது அந்த மொழி பாடல்களுக்கேயுரிய அழகு. ஏய் ஹைரதே ஆஷாகி என்று ஹரிகரனும் ஏய் அஜு நபி என்று உதித்தும் பாடும்போது அவை தமிழை விட அழகாக இருப்பதற்கு இந்த சாரம் தான் காரணம். ஆஷா அந்த தாளக்கட்டோடு பாடுகையில், ஜானகி பாடுவதில் இருந்து வித்தியாசமாக தெரிகிறது. எது சிறந்தது என்றெல்லாம் வாதம் தேவையில்லை. இரண்டுமே ராஜா தான்!


அடுத்த பாடல் hona hai என்ற, தமிழில் வந்த “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”. மனோவும் ஆஷா போன்ஸ்லேயும் பாடியது. பத்து வருடங்கள் கழித்து வெளிவந்திருந்தால் ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கவேண்டியது. Arrangements மொத்தமாக மாற்றியிருக்கிறார். தமிழ் பாடலின் interlude எல்லாம் உலகத்தரம். வயலின்கள் ரீங்காரம் செய்து ஒரு சின்ன சிம்பனியே நிகழ்த்தியிருப்பார். ஹிந்தியில் இதெல்லாம் மிஸ்ஸாகி ராஜாவின் வழமையான தொண்ணூறுகளின் பிற்பாதி பாணி வந்துவிட்டது!
அடுத்த பாடல் எங்கள் எல்லோருக்கும் favourite ஆன “காதல் ஓவியம். ஆஷா தான் மீண்டும். Meri Zindagi என்ற பாடல் எழுத்தோட்டமாக சில நிமிடங்களே வரும். ஹிந்தி இசை பிரியர்களிடம் கேட்டால் இந்த பாடலின் instrumental version ஐ வெகுவாக சிலாகிப்பார்கள். இரண்டையும் தருகிறேன்.







1989ம் ஆண்டு Mahaadev என்று ஒரு படம். அதில் “அந்த நிலாவை தான் நான்” முதல்மரியாதை பாட்டை பாவித்திருக்கிறார். அழகு!


அதே படத்தில் தான் இந்த Rim Jhim Rim Jhim பாட்டு. இதை தான் அண்மையில் யுவன்சங்கர்ராஜா பாலா படத்துக்காக “தீண்டி தீண்டி” என்று அப்பன் பாக்கட்டில் இருந்து உருவி போட்டிருந்தார். ஆட்டை கடிச்சு ஆன்ரியாவை கடிச்சு கடைசில அப்பனையே கடிச்சிட்டான் பாவி!

ராம்கோபால் வர்மா ராஜாவின் ரசிகன் என்பது தெரிந்தது தானே. அவரின் சிவா என்ற படத்து பாடல். தமிழில் இது “ஆனந்த ராகம்”.


காமக்னி என்று ஒரு படம்(இப்பிடி படத்துக்கெல்லாம் இசையமைக்கலாமா பாஸ்?). படம் எப்படியோ, தலைவர் பாட்டில் குறை வைக்கவில்லை. இந்த பாட்டு தமிழில் வந்ததா என்று தெரியாது. ஆனால் இந்த பாட்டை முதல் தரம் கேட்டாலே பிடிக்கும். அவ்வளவு இனிமை. கேளுங்கள்!




There you go. சத்மா! ராஜாவின் மிகச்சிறந்த ஹிந்தி அல்பம் இது. மூன்றாம் பிறை ரீமேக். ஓரளவுக்கு musical sense உள்ள எந்த வட இந்தியர்களிடமும் கேட்டு பாருங்கள். இந்த படத்தையும், படத்தில் ராஜாவின் இசையையும் சிலாகிக்காமல் இருக்கமாட்டார்கள். முதலின் கண்ணே கலைமானே. அண்மையில் ஸ்ரேயா கோஷல் கூட மேடையில் கலக்கிய பாடல்.




sadma_sridevi_stills_600x450இப்போது கிளைமாக்ஸ்! ராஜாவின் ஹிந்தி இசையின் உச்சம் இந்த பாடல். “Aye Zindagi Gale Laga Le” என்றால் சிலிர்க்காத இந்தியர்களே இருக்கமுடியாது. தமிழில் “என் வாழ்விலே வசந்தமே வா”. இதே concentration உடன், தமிழின் பல மொக்கை படங்களுக்கு நோ சொல்லிவிட்டு ஹிந்தியில் ராஜா இசையமைத்திருந்தால், நாம் ராஜாவை இழந்திருப்போம் தான், ஆனால் உலகம் முழுதும் இன்றைக்கு ராஜா வலம் வந்திருப்பார். ஒரு சிறந்த பாடலுக்குரிய அத்தனை elements உம் உள்ள, காலத்தால் அழியாத ... No words to say!




என் இனிய ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பிற்குறிப்பு!
தளபதி, நாயகன் போன்ற பாடல்கள் ஹிந்திக்கு போனாலும் அவற்றை வேறு யாரோ தான் மிக்சிங் செய்தார்கள்(ராஜா மணிரத்னம் கருத்துவேறுபாடும் காரணம்). அவை நன்றாக இருந்தாலும் இங்கே தவிர்த்துவிட்டேன். இந்த லிஸ்ட்டில் சீனிகம்மை ஏற்கனவே நான் காதலித்து விட்டதாலும்! “பா” பாடல்களை எல்லோருமே அறிந்திருப்பதாலும் குறிப்பிடவில்லை!

Comments

  1. இளையராஜாவுக்கு இசையாலே ஒரு வாழ்த்து மாலை!! மிக அருமை ஜேகே..

    அழகான விளக்கங்களுடன் ஒரு வானொலி நிகழ்ச்சி கேட்ட அனுபவம்.. இசைவிருந்திற்கு நன்றி.. ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நன்றி றியாஸ் .. வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  3. கருப்பு வெள்ளையில் ராஜா பாட கொடிகள் பூக்கள் தழைந்து வந்து ரசிப்பதும், இதை கவனியாது ராஜா மெய்மறந்து எங்களையும் மெய் மர(ற)ப்பிப்பதும் ரசனைக்காரன் செய்த படம். மற்றபடி காற்றில் எந்தன் கீதம் sustain தான் எனக்கு பிடிக்கும்.

    மற்றபடி மலையாளம் படிச்சுக் கொண்டிந்த ஜேகே ஹிந்திக்கு தாவினதேனோ ?

    ReplyDelete
  4. மிக வித்தியாசமான தொகுப்பு, நன்றி! இனிமேல் தான் ஒவ்வொன்றாக கேட்டுப் பார்க்க வேண்டும் ஹிந்தி ராஜ ராகங்களை.

    ReplyDelete
  5. ஐயா, ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் . உங்களின் கட்டுரை ரசிக்கும் வகையில் இருந்தது

    ReplyDelete
  6. அட்டகாசம் நல்ல தொகுப்பு

    ReplyDelete
  7. நன்றி வாலிபன் ..

    //மற்றபடி காற்றில் எந்தன் கீதம் sustain தான் எனக்கு பிடிக்கும்.//
    அது புரிகிறது .. பெரிசு சிறிசு(நீங்கள் அப்படி சொல்லவில்லை) என்று யோசிக்காமல் இரண்டையும் ரசிப்போம் தலைவரே!

    ReplyDelete
  8. //மற்றபடி மலையாளம் படிச்சுக் கொண்டிந்த ஜேகே ஹிந்திக்கு தாவினதேனோ ?//

    யாதும் ஊரே யாவரும் கேளீர்!

    ReplyDelete
  9. நன்றி முன்பனிக்காலம்!

    ReplyDelete
  10. நன்றி Murugesan Ponnusamy ...

    ReplyDelete
  11. வாங்க பிரபா .. நன்றிகள்..

    ReplyDelete
  12. இசையை மாத்திரம் ரசிப்பவர்களுக்கு ராஜாவின் பாடல்கள் ஹிந்தியில் இன்னும் இனிமையாக இருக்கலாம். ஆனால் வார்த்தை சிதையாமல் நல்ல கவிதைகளுக்கு இசை அமைத்த ராஜாவின் தமிழ் பாடல்கள் எப்போதும் எனக்கு ஒரு படி மேல். இசைஞானியின் பிறந்தநாளில் அவரின் இன்னொரு பரிணாமத்தை தொகுத்து கொடுத்தது அழகு.

    ReplyDelete
  13. நன்றி கேதா ...

    ராஜாவின் பல பாடல்களுக்கு ... என்னளவில், அவற்றின் வரிகள் பல நீதி சேர்க்கவில்லை ... அவை சந்தத்துக்கு தான் உதவின.. கவியும் இசையும் ஒருங்கிணைந்த பாடல்கள் சில நூறே ...

    தமிழா ஹிந்தியா என்ற விஷயத்துக்கே போகவில்லை .. ஹிந்தி, அதற்கே உரிய இசை அழகால் பாடலுக்கு வலிமை சேர்க்கிறது .. கேட்பதற்கு ஓரு தனி அனுபவம் .. அதை தான் ரசிப்பது.

    ReplyDelete
  14. நன்றி கோழிபையன்! என்னா பெயருப்பா :)

    ReplyDelete
  15. ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪போட்டுட்டானே என்று விழுந்தடிச்சு கொண்டு வந்தால் ........எல்லாமே ஹிந்திப்பாட்டு நமக்கு சரிவராதே

    இசையை ரசிப்பதற்கு மொழி அவசியமில்லை என்று சொன்னாலும் முடியவில்லை இதை கூட தமிழ் பாட்டுகளுடன் தான் ஒப்பிட்டு ரசிக்க வேண்டியிருக்கிறது

    என்னவோ ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪தொடங்கியாச்சு நமக்கு ஓகே .

    ReplyDelete
  16. வாங்க கீதா .. எனக்கு இந்த தொகுப்பை கொடுக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. கூடிய சீக்கிரம் தமிழுக்கு வருகிறேன் ( அடங்குடா டேய்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .