அதிகாலை மூன்று மணி. மெல்பேர்ன் குளிர், வசந்தகாலம் ஆரம்பித்து ஜஸ்ட் ஒரு நாள் தானே! இன்னமும் கொஞ்சமும் குளிர்ந்துவிட்டு போகிறேனே என்ற அடம் பிடித்தது. ஹீட்டர் போட்டு அதன் ஆசையை கலைக்க மனம் இல்லை. சூடாக ஒரு ப்ளேன் டீ போட்டு குடித்துக்கொண்டே, ஹோம் தியேட்டரின் வொலியூமை கொஞ்சம் குறைத்துவிட்டு couch க்கு வந்து quilt ஆல் போர்த்துக்கொண்டு சாய்ந்து கிடக்க, பதினொறாவது தடவையாக மீண்டும் ப்ளே பண்ண ஆரம்பிக்கிறது, மீண்டும் மீண்டும் மீண்டும். அப்படி ஒரு இரவின் நிசப்தத்துக்கு தேவையான அளவு சத்தம். இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் நான். மற்றையவர் … இளையராஜா.
இது “நீ தானே என் பொன் வசந்தம்” படத்து இசை விமர்சனம் கிடையாது. இசை என்பது எம்மோடு கூட வரும் ஜீவன். அதை விமர்சிக்க கூடாது. அனுபவிக்கலாம். இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக கடந்த சில மணித்தியாலங்களில் இளையராஜா எனக்கேற்படுத்துகின்ற அனுபவம். பகிரவேண்டும் போன்று தோன்றியது. சில மொமென்டஸ் .. பகிர தவறினால் அப்புறம் விட்டுவிடுவோம். அனுபவி ராஜா அனுபவி!
முதற்பாடல், “என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்”, ஏற்கனவே இரண்டு வரி டீசர் கொடுத்து வாரக்கணக்கில் பித்துபிடித்து அலையவிட்ட பாடல். “உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்” என்று கார்த்திக் குரல் பேஸில் இறங்கும்போது, நமக்குள்ளேயே ஒரு இயல்பான புன்னகை வந்து மெலிதாய் தலை அசையும். இது தான் எனக்கு தெரிந்த அறிந்த அனுபவித்த ராஜா. கேட்கும்போது, இது இசை, இங்கே பாரு வயலின், இங்க பாரு percussion என்று ஒன்றுமே கிடையாது. இது உனக்குள் இருக்கும் பாட்டு, நான் வெளியே எடுத்து உனக்கே தருகிறேன் என்று சொல்லும் விஷயம் அது. வெரி சப்டில் மெலடி. இங்கே இந்த இடத்தில் என்று இல்லாமல் ஒரே சீரான meditative romantic feel தரும் பாடல். அல்பத்தில் உடனேயே பிடித்துபோகும் பாடல். இந்தப்பாடலை தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சியில் முதல் நாள் இரவு கேட்டுவிட்டு அடுத்தநாள் இரணைமடு அணைக்கட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு பாடுவது போல ஒரு காட்சி. ராஜா என்னை பதினாறு வயதுக்கு கொண்டுபோய் சேர்க்கும் சாடிஸ்ட் வேலை பார்க்கும் பாடல் இது. ப்ச்! அனேகமாக முதலில் பிடிக்கும் பாடல் மிகவும் பிடித்த பாடலாக பிற்காலத்தில் நிலைப்பதில்லை. பார்ப்போம் இது எப்படி என்று.
“வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே”. ஐந்து வருடங்களுக்கு பின்னரும் ஐபோடில் ப்ளே பண்ணும்போது, வாசிக்கும் புத்தகத்தை மூடிவிட்டு நான் கண்மூடி லயிக்கப்போகும் பாடல் என்பது ஆரம்ப ஹார்மனி கோரஸிலேயே புரிந்துவிட்டது. பாடலில் ராஜா இசை எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளுக்குள் நுழைகிறது. Again ரீதிகௌளை? தீபனிடம் கேட்கவேண்டும். ராஜாவுடன் சேர்ந்து பேலே ஷிண்டே பாடும்பாடல். பேலே ஷிண்டே பாடிய “கூட வருவியா” வை எவன் மறப்பான்? அல்பத்தில் ஸ்ரேயா கோஷல் இல்லாத குறையை பேலே தீர்த்துவைக்கிறார். மீண்டும் சப்டிலான மெலடி, அதற்கேற்ற மாதிரியான குளிரவைக்கும் ஒலிச்சேர்க்கை. கௌதம் மேனனுக்கு கோயில் கட்டி கும்பிடவேண்டும். இதை எப்படி கெளதம் காட்சிப்படுத்தியிருப்பார் என்ற ஆர்வம் எகிறிவிட்டது. கவுத்திடாதீங்க பாஸ்! கேட்கும்போது மாயக்கண்ணாடி படத்தின் “உலகிலே அழகி நீ தான்” பாடலும் சிலம்பாட்டம் படத்தின் “மச்சான் மச்சான்” (இதுவும் ராஜா - ஷிண்டே டூயட் தான்) பாடலும் அவ்வப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. தற்போதைய நிலவரத்தின் படி my pick of the album! “இதற்கா மெனக்கட்டு லண்டன் போகவேண்டும்?” என்று கேட்ட நண்பனுக்கு என் பதில், “இதற்கு தான் போகவே வேண்டும்!”
“காற்றை கொஞ்சம்”. மூன்று நாட்களுக்கு முதல் பாடல் வெளிவந்தவுடனேயே “This is it” என்று நினைக்கவைத்த பாடல். வாவ் …. “நானா ன ன நக நானா “ என்ற ஆண் குரலில் ஒரு prelude, காதலி பார்த்து சிரித்த கணத்தில் ரீங்காரம் இடும் prelude அது. அந்த சந்தோஷத்தில் நிச்சயம் பக்கத்தில் இருந்த Gate ஆல் எகிறிக்குதித்தால் வரும் மூடுக்கு கொடுக்கவேண்டிய இசை. ரகுமானுக்கு அது ஹொஸான்னா, ராஜாவுக்கு இந்த “காற்றை கொஞ்சம்”. நண்பர் ஜீ இதன் பீட் தேவதை படத்து “நாள் தோறும் எந்தன் கண்ணில்” பாட்டினுடையதை ஒத்திருக்கிறது என்றார். அட! நோட்டுகளோடு சேர்ந்து percussion கூடவே பயணிப்பது “விடிய விடிய நடனம் சந்தோஷம்” பாட்டிலும் ராஜா கொஞ்சம் ட்ரை பண்ணியிருப்பார். ராஜாவுக்குள் இருக்கும் மைக்கல் ஜாக்ஸன் ரசிகன் இப்படியான மெலடிகளில் சத்தம்போடாமல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பான். அவர்கள் வேலை இசை கோர்ப்பது. நம் வேலை, கேட்கும்போது அவர்களை கோர்த்து ரசிப்பது! ஹோம் தியேட்டரில் கேட்கும்போது மூலை முடுக்கில் இருந்தெல்லாம் ஹார்மனி சவுண்ட்டுகள். கேட்டமாத்திரத்திலேயே இந்த பாட்டு பல வருஷங்களாக புது புது விஷயங்களை கொட்டிக்கொண்டு இருக்கபோகிறது என்பது புரிந்துவிடுகிறது. கடவுளே நான் கடந்து போகாமல் இருக்கவேண்டும்.
“என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே! மீட்டபோதும் மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்!”
நா. முத்துக்குமார் அந்தப்பக்கம் ராஜா சிக்சர் பவுண்டரி விளாசும்போது அவ்வப்போது சிங்கிள் எடுத்து கொடுக்க தவறவில்லை! நல்ல காலமாக தாமரையிடம் மீண்டும் கெளதம் போகவில்லை!
“சாய்ந்து சாய்ந்து”, படத்தை பற்றி தெரிந்தவர்கள் இந்த பாடலை அறியாமல் இருக்கமாட்டார்கள். படத்தின் ஐடென்ட்டி பாடல். ராஜா தொண்ணூறுகளில் இருந்து அடுத்த தசாப்தத்துக்குள் நுழையும் பாடல். யுவன் ரம்யா பாடும் பாடல். கிட்டாரும் யுவனும் சேர்ந்து Country music ஐ கொண்டுவருகிறார்கள். ஆனால் முழுமையான country இசைக்குரிய கிட்டார் வீச்சு போதவில்லை(Alan Jackson பாடல்). ராஜா அதிகமாக ஏனோ பியானோவை தன் பாடல்களில் பாவிப்பதில்லை. ஆனால் பாவிக்கும் போதெல்லாம் அது உயிரை எடுக்கும்( என் வானிலே, நீ பார்த்த பார்வை”). இதிலே பியானோ அடி ஆழத்தில் சப்போர்ட் கொடுக்க, ஐந்தடி மேலே கிட்டார் இன்னொரு சப்போர்ட். மேல் தளத்தில் ராஜாவின் தனித்துவ ஒரகஸ்ட்ரா. எனக்கு இருக்கும் ஒரே நெருடல் அந்த யுவன் குரல் தான். பொருந்தவில்லை. பாடலை கண் மூடி லயிப்பதற்கு குறுக்கே நிற்கிறது. ரம்யா குரல் நன்றாக இருந்தாலும் அவருக்கு ஸ்கோப் அதிகம் இல்லை. யுவனை தவிர்த்திருக்கலாமோ?
That’s it. வெளியாகி ஒரே நாளில் எட்டு பாடல்களையும் கேட்டு ரசிப்பது சாத்தியமில்லை. எனக்கு பிடித்த genre இல் இருந்த நான்கு பாடல்களை மட்டும் தெரிவு செய்து இப்போதைக்கு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறேன். ஏனைய பாடல்கள் காலப்போக்கில் தேடிவரலாம். அதிலே “புடிக்கல மாமு” வின் ஆரம்ப அரேஞ்மெண்ட் கலக்கல். ஆனால் பாடல் ஆரம்பித்தபிறகு தொடர்ந்து கேட்கதோன்றவில்லை. Its not mine. “முதல் முறை” பாடல் சுனிதி சவ்கான் பாடியிருக்கிறார். ஆனால் கேட்கும்போது again, வேறு genre. படம் பார்த்தபின் கேட்கலாம். “சற்றுமுன்” பாடலும் அப்படியே. “பெண்கள் என்றால்” பாடல் நான் எக்காலாத்திலும் ரசிக்கமாட்டேன் என்பது கேட்ட மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது.
ஆனால் இங்கே பகிர்ந்த நான்கு Blues genre வகை பாடல்களும் நிச்சயம் இனி வரும் மாதங்களில் என் உயிரை எடுக்கப்போகும் பாடல்கள். கேட்க கேட்க புதிது புதிதாக அறிந்து புரிந்து ரசிக்கப்போகும் பாடல்கள். எப்போது மொத்தமாக ரசிப்பேன் என்று சொல்லமுடியாது. எப்போதோ வெளியான “வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது” இப்போதும் புதிதாக இருக்கிறது. “குண்டு மல்லி குண்டு மல்லி” என்று ஸ்ரேயா கோஷல் ஒவ்வொருமுறையும் கெஞ்சும்போதெல்லாம் ராஜாவை அடுத்த flight பிடித்து சென்னை போய் குத்திக்கொலை செய்யவேண்டும் போன்றும் தோன்றும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த ராஜாவின் “கண்ணுக்குள்ளே” பாடல்களை கேட்க கேட்க எங்கிருந்து இந்த மெலடிகள் இந்த மனுஷனுக்கு வந்திறங்குகிறது என்று பொறாமையாய் இருக்கும். அவற்றை வெளியே கொண்டுவருவது தான் பெரிய சவால். “என் பதின்மத்து இளையராஜா” என்ற பதிவிலே இருந்து ஒரு குறிப்பு.
“ராஜாவின் அண்மைக்கால மெட்டுகள் ஒருவித stalemate க்குள் சென்றுவிட்டதாக ஒரு அபிப்பிராயம். பால்கியின் படங்களில் அது இல்லை. தமிழில் இருக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்றால் இயக்குனர்கள் தான் காரணம். அண்மையில் தோணி படத்து இசை வெளியீட்டில் நாசர், பிரகாஷ்ராஜின் பேச்சுக்களை பாருங்கள். ராஜாவை கடவுளாகவும், கேள்வி கேட்கப்படமுடியாதவாராயும் சித்திரித்து நடுங்கி நடுங்கி பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி இருந்தால் எப்படி இவர்கள் நல்ல பாடல்களை ராஜாவிடம் இருந்து வாங்க முடியும்? பாரதிராஜாவும் பாலச்சந்தரும் ராஜாவை நீ நான் என் ஒருமையில் அழைக்கக்கூடியவர்கள். ஒன்று பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுவார்கள். அப்படித்தான் பாரதிராஜா “தம் தன் னம் தன தாளம் வரும்” பாடல் வாங்கியதாக ராஜாவே கூறியிருக்கிறார். இயக்குனர்கள் ராஜாவை முதலில் பயமின்றி எதிர்கொள்ளவேண்டும். கௌதம் மேனன் இப்போது அணுகி இருக்கிறார். ட்ரைலரே மிரட்டுகிறது. எப்படியும் ராஜாவுக்கு தீனி கொடுப்பார் என்று நம்பலாம்.”
கௌதம் மேனன் என் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. சரியாக வேலைவாங்கி மனிஷனுக்கு தீனி போட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ராஜாவை ராஜாவாகவே கொண்டுவந்ததுக்கு கௌதமுக்கு ஒரு Hats off. நம்மில் பலர் ராஜாவிடம் ரகுமானையும், ரகுமானிடம் ராஜாவையும் தேடி தேடி கடைசியில் இருவரையும் ரசிக்கமுடியாத நிலைக்கு போய்விடுவர். இசையை அணுகும்போது ஒருவித premeditation உடன் அணுகுவதால் வரும் சிக்கல் இது. கௌதம் தெளிவாகவே இந்த இசை தான் எனக்கு வேண்டும் என்று அணுகியிருக்கிறார். அதுதான் நமக்கும் வேண்டும். அவரவர் இசையின் தனித்துவம் தான் அவர்களின் அடையாளம். அதில் செய்யும் இடையறாத பரிசோதனைகள் தான் அவர்களின் recreations. ஹாரிஸ், ரகுமான், ராஜா என்று கெளதம் எமக்காக அவர்களிடம் இருந்து அள்ளிக்கொடுத்த இசை கொஞ்ச நஞ்சமில்லை. இவர் அடுத்ததாக எடுக்கும் ரொமாண்டிக் கொமடிக்கு வித்தியாசாகரை நாடிப்போனால் இன்னொரு மியுசிகல் கிளாசிக் நிச்சயம்! படத்துக்கு பெயர் கூட “நீ காற்று நான் மரம்” என்று வைக்கலாம்!
“பிரிவோம் சந்திப்போம்” படப்பாடல்களை நான் கேட்காத நாள் இல்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த பாடல்கள் என்னளவுக்கு போட்டு தாக்கவில்லை. அதில் கூட எனக்கு ஒரு அற்ப சந்தோஷம். சிலபாடல்களை நாம் மட்டுமே ரசிக்கும்போது ஒருவித பெருமை. அட இந்த இசை எமக்காகவே உருவான இசை என்ற எண்ணம். இசை ரசனை என்பது மிகவும் பெர்சனலான விஷயம். அதனால் தான் பிடித்த இசையை தனிமையில் கேட்கவேண்டும் என்பார்கள். கண்ணுக்குள்ளே படத்தின் “எங்கே நீ சென்றாலும்” பாடலில் ஒரு வரி இருக்கும். ராஜாவே சொல்லுவது போன்ற வரிகள்.
என்று பாடிக்கொண்டே போகிறவர் இடையில் ஒன்று சொல்லுவார்!
எங்கே நீ சென்றாலும் அங்கும் உன்னைத்தொடர்ந்துவரும்
என் ராகம் என் ராகம் என் ராகம்
என்னென்ன நடந்தாலும் நெஞ்சம் உன்னை கண்டுகொள்ளும்
என் ராகம் என் ராகம் என் ராகம்
தனிமையிலும் சென்று பார்
நினைவுகளில் நின்றுப்பார்
உலகில் எந்த மூலையில் இருப்பினும்
பிடித்துன்னை இழுத்து வரும்.
“கேட்காத கீதம் அது தானே அழகு, கலைஞனின் மனம் அறியும்!”
நீ பாட ஆரம்பிச்சல்ல!
அங்க நான் காலி!
இளையராஜா!
The songs have '80s touch.
ReplyDeleteநீங்கள் கொலவெறியோட ரசிச்சிருக்கிறிங்கள்
நன்றி தன்யா ... 80's and 90s touch .. especially late 90's Raja's touch(சிறைச்சாலைக்கு பின்னரான ராஜா) இருக்கு.
ReplyDelete//நீங்கள் கொலவெறியோட ரசிச்சிருக்கிறிங்கள்//
ரசிக்கும்படியா இருந்தா அப்புறம் half measure எல்லாம் கிடையாது... கொலைவெறி தான்!
இப்பொழுது தான் டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். ரசித்துக் கேட்டிருக்கிறீங்க.
ReplyDelete“காற்றைக் கொஞ்சம்” மட்டும் வெள்ளிக்கிழமை கேட்டேன். இளையராஜாவின் டச் அதில் கண்டேன். மற்றைய பாடல்களும் பிடிக்கிறதா பார்ப்போம்.
கேட்டுப்பாருங்கள் ஹாலிவுட் ரசிகரே ... அந்த நாலு பாடல்களிலும் மெலடியோடு சேர்ந்து அரேஞ்ச்மென்டில் நாம் கொண்டாடிய ராஜா இசை இருக்கிறது. கேட்க கேட்க நிச்சயம் பிடிக்கும்.
ReplyDeleteஎன் வயதுக்கு(23) நான் இப்படி சொல்வது கொஞ்சம் ஓவராகக் கூட இருக்கலாம்.. பொறுத்தருள்க.. :):) நானும் ஒரு வெறித்தனமான இளையராஜா பக்தன் தான்... :) :) என்னைப் பொறுத்தவரையில் இது ராஜா சாரின் ஒரு அட்டகாசமான ‘Come Back' என்றே சொல்லுவேன்...!! Return of the Golden 80's நேற்று காலை கேட்க ஆரம்பித்தவன் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். நீங்கள் பாடல்களை ரசித்திருக்கும் விதமும் எழுதியிருக்கும் விதமும் அட்டகாசம் :) :) ஆனால் ‘முதல் முறை’ பாடல் பற்றி எழுதாமல் விட்டுவிட்டீர்கள்..!! படத்தின் 'Climax' பாடல் என்று கெளதம் சொன்னதாக நினைவு.. அதுவும் அந்த ‘நீ தானே என் பொன்வசந்தம்’ என்று ஹை பிட்சில் சுனிதி செளஹான் பாடுகின்ற இடத்தில் ‘பரவசம்’..!! :):) கண்டிப்பாக பின்னாளில் ரசிப்பீர்கள் என்று நம்புகின்றேன்..!!
ReplyDeleteமாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும். இன்னும் பழைய இளையராஜாவைத் தேடிக்கொண்டிருக்கிறேன். என் தனிப்பட்ட ரசனை- 'பிட்ச்' மாறாவிட்டால் ரசிக்க மாட்டேன். ஒரு சிலவிதி விலக்குகள், ஏ.ம்.ராஜா, பி.வி.சிறீனிவாஸ். சிலவேளை ராஜாவிற்கு ஏ.ம்.ராஜா' மாதிரி ஒரு மென்குரல், 'பிட்ச்' இல் அதிக மாறுதல் இல்லாமல் அதேநேரத்தில் 'இழுத்துப் பிடிக்கும்' வசீகரத்துடன் தேவைப்படலாம்.
ReplyDeleteநன்றி சுதர்சன்
ReplyDelete‘முதல் முறை’ பாட்டு கேட்கும்போது புதிதாக இருந்தது. ஆனால் ஐந்தே genre ஐ ஓரிரு தடவை கேட்பேனே ஒழிய நாள் முழுக்க கிடந்தது லயிக்க மாட்டேன் .. படத்தின் சிடுவதியன் க்கு பொருந்த கூடிய பாட்டாக இருக்கலாம்.
//என் வயதுக்கு(23) நான் இப்படி சொல்வது கொஞ்சம் ஓவராகக் கூட இருக்கலாம்//
அதென்ன பாஸ் ... உங்கள விட சின்ன பையன் நானே சொல்லும்போது நீங்க சொன்னா என்ன .. ஷப்பா எப்பிடியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு!
நன்றி சக்திவேல் அண்ணா
ReplyDelete//மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும்.//
மாற்று கருத்து சொல்லுவதற்கே மன்னிப்பு கேட்கவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம் பாருங்கள்!
//என் தனிப்பட்ட ரசனை- 'பிட்ச்' மாறாவிட்டால் ரசிக்க மாட்டேன்.//
எனக்கு நீங்கள் சொல்லவருவது புரியவில்லை .. சாம்பிள் ஒன்று சொல்லுங்களேன் .. A.M. Raja ரசிகர் என்றால் "என்னோடு வா வா " பாட்டு உங்களுக்கு பிடிக்கலாம். கொஞ்சம் "பாட்டு பாடவா" இருக்கிறது.
பாடலின் ஆய்வு உங்கள் பார்வர்வையில் அருமை எனக்கு புதுமை
ReplyDelete"ராஜாவை ராஜாவாகவே கொண்டுவந்ததுக்கு கௌதமுக்கு ஒரு Hats off. "
ReplyDeleteஅதேதான். ராஜாவுக்குள் ரகுமானையும் ரகுமானுக்குள் ராஜாவையும் தேடி இசையை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் இசையை இப்பிடியும் ரசிக்கலாம் என்று எடுத்து சொல்லும் இந்த பதிவு அருமை தலைவா. அவனவன் சச்சினுக்கு, மணிரத்தினத்துக்கு, கமல், ரஜினிக்கெல்லாம் சொல்லி களைச்சுப்போய் இப்ப இளையராஜா ஓய்வெடுக்க நேரம் வந்திட்டுது எண்டு நோட்டீஸ் ஒட்டி திரியுறானுகள். இனிமேல் காரில சில வாரங்களுக்கு இந்த பாட்டுகள்தான்.
நன்றி கேதா ..
ReplyDelete//இளையராஜா ஓய்வெடுக்க நேரம் வந்திட்டுது எண்டு நோட்டீஸ் ஒட்டி திரியுறானுகள்//
நினைத்தாலே இனிக்கும் வெளிவர இருந்த சமயம் MSV க்கு கூட இப்படி இசை விமர்சகர்கள் அழுத்தம் கொடுத்ததாக கேள்வி! ஆளாளுக்கு இசையை அணுகும் விதங்கள் வேறு படலாம். அதனால் ஒருவருக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்கவேண்டுமென்பதில்லை. அதற்காக இசையமைப்பதையே நிறுத்தினால் நல்லது என்று சஜஸ்ட் பண்ணுவது சிரிப்பாக தான் இருக்கு!
//இனிமேல் காரில சில வாரங்களுக்கு இந்த பாட்டுகள்தான்.//
காலையிலேயே ரயிலில் "காற்றை கொஞ்சம்" இறுதி பல்லவி வந்தது ... lead sound கடந்து உள்ளுக்குள் நடக்கும் விஷயங்கள், அதிலும் இறுதியாக வயலின் எகிறிவிட்டு வந்து நிற்கும் ... அப்புறம் என்ன? புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ரிபீட் தான்!
>எனக்கு நீங்கள் சொல்லவருவது புரியவில்லை
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=JKAcq3l6FY4&feature=related
உச்சத்தாயி,கீழ்யாயி என்றில்லாமல் (பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்) இப்பிடிப் பாடினால் ஏஎம் ராஜ அல்லது பி.வி.சிறீனிவாஸ் என்றால் மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். OF course அப்படி நிறையப் பேர் பாடியுள்ளார்கள். ஆனால் மேலுள்ளவர்கள் மட்டுமே(என்னைப் பொறுத்தவரையில்!)இதை அழகாகச் செய்தவர்கள்.
நன்றி சக்திவேல் அண்ணா .. சொன்னது போல "என்னோடு வா வா" இந்த ரகம் என்று நினைக்கிறேன் .. but again harmony வருவதால் நீங்கள் எதிர்பார்க்கும் mode கிடைக்காமல் போகலாம் .. இம்சை அரசன் படத்து "ஆசைக்கனவே" பாட்டு பிடிக்குமா?
ReplyDeleteஓரளவுக்கு... ஏ.எம்.ராஜா போல வருமா? (=எனக்கு வயசாயிட்டுது)
ReplyDeleteஉண்மை என்னவென்றால் ஏ.எம்.ராஜா பாடல்களை நான் சிறுவயதுகளில் பெரிதாக ரசித்ததில்லை.
...அல்லது இப்போது ரசிப்பதுமாதிரி ரசித்ததில்லை.(சிலவேளை எனக்குத் தெரியாமலே ரசித்திருக்கலாம் :-))
ReplyDeleteVisiting after long time...
ReplyDeleteஅழகிய ஆரம்பம் அண்ணா, குளிரை ரொம்ப நல்லா அனுபவிதிருக்கிறீங்க போல ;) .
அழகிய விமர்சனம் கூட.
//இசை என்பது எம்மோடு கூட வரும் ஜீவன். அதை விமர்சிக்க கூடாது. அனுபவிக்கலாம்.//This statement is true for any art...including your blog posts (seriously, I am not joking). Keep it up and enjoy.
ReplyDeleteஒரு மாதிரி வியாழமாற்றத்தை விட்டு விட்டு பழைய ஜேகே வந்துவிட்டான் .நன்றி தொடங்கியமைக்கு .எல்லா பதிவும் வாசித்துவிட்டேன் ஆனால் விமர்சனம் எழுதவில்லை .இத்துடன் முடிக்காமல் தொடரவும் .
ReplyDeleteஇன்னும் முழுமையாக சேமிக்க முடியவில்லை ஆனால் சாய்ந்தாடு என்னை ராஜாவின் தோழில் சாய வைக்கின்றது!ம்ம் ராஜா காலம்!சொர்க்கம்!ம்ம்
ReplyDeleteஎன்னோடு வாவா என்று கேட்க மாட்டேன்!ம்ம் மீண்டும் ஒரு தீவில் என் இளமைப்பராயம்!ம்ம் ராஜா வர்த்தக சேவையில் பொங்கும் பூம்புனல் ஊடாக வந்த காலம்!ம்ம் வசந்த காலம்! எல்லா பாட்டும் முத்துக்குமாரா ! அடுத்த பதிவு நானும் போடத்தயார்!ம்ம் இராஜேஸ்வரி சன்முகம் இருந்தால் கவிஞர் பெயர் முதலில் வரும்!பொங்கும் பூம்புனலில்! ம்ம் அது ஒருகாலம்!ம்ம்
ReplyDeleteநன்றி தனிமரம் ... இராஜேஸ்வரி சண்முகத்தை நேரில் கண்டு பேசும் சந்தர்ப்பம் ஒருமுறை வாய்த்தது ... அண்மையில் அவர் காலமாகிவிட்டார் :(
ReplyDelete"சாய்ந்து சாய்ந்து" மற்றும் "வானம் மெல்ல" ஆகிய பாடல்களை எத்தனை முறைதான் கேட்பது.ஆனாலும் நாவிற்கு சர்க்கரை போல் காதுகளுக்கு அவை சலிப்பதே இல்லை.
ReplyDeleteபெலே ஷிண்டே பாடிய கருகுமணி கருகுமணி(அழகர்மலை) பாடல் எப்படி நண்பா?
அப்புறம் இங்கே http://www.sekkaali.blogspot.com/2012/04/blog-post.html சென்று இதையும் கேட்டுப்பாருங்கள்