Skip to main content

2 States: Story of My Marriage.


“Island of Blood”, “கோபல்ல கிராமம்”, “Restaurant at the end of universe”, “காட்டாறு” என்று தொடர்ச்சியாக கொஞ்சம் சீரியசான புத்தகங்கள். இம்முறை லைட்டாக தான் வாசிக்கவேண்டும் என்று புத்தக வரிசையை நோட்டம் விட்டபோது தலைவரின் “விடிவதற்குள் வா” அகப்பட்டது. திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்துவிட்டு .. ப்ச் .. இன்னும் லைட்டாக வேண்டும் என்னும்போது வீணா அடிக்கடி சொல்லுவது ஞாபகம் வந்தது.
“அண்ணே புத்தகம் வாசிக்கிறது மனசுக்கு சந்தோஷத்துக்கு தானே .. பேந்தென்னத்துக்கு டென்ஷன் தாற புத்தகங்களை வாசிக்கிறீங்கள்? பேசாம ரமணிச்சந்திரன் வாசியுங்க .. கதை தெரிஞ்சாலும் வாசிக்க நல்லா இருக்கும்”
எனக்கு இப்போதைக்கு தேவை ரமணிச்சந்திரன் வகையறா தான் என்று அம்மாவிடம் போய் கேட்க, உனக்கென்ன லூசா? வாசிச்சு ரெண்டு பக்கத்தில தூக்கி எறிஞ்சுடுவ, உனக்கு அது தோதுப்படாது” என்றார். சரி ஆணியே வேண்டாம் என்று மீண்டும் என் கலக்ஷனுக்கு வந்து தேடியபோது மாட்டுப்பட்டது தான் 2 States : Story of My Marriage.
6969361
சென்ற வருடம் கஜன் டெல்லி போயிருந்தபோது பரிசாக வாங்கிவந்த புத்தகங்களில் ஒன்று. வாசிக்காமல் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தேன். ட்ரெயினில் போகும்போதும் திரும்பும்போதும், லஞ்ச் டைமில் Flagstaff gardenக்கு போய் எல்லா வெள்ளைகளும் கழட்டி எறிந்துவிட்டு ஜோடியாக புற்தரையில் வெயில் காயும். நான் அதைப்பார்த்து காய்ந்தபடியே புத்தகத்தை வாசித்து, இன்று முடிவுறும் சமயம் பொறுமை இல்லாமல் வீடு வந்ததும் வராததுமாய் சோபாவில் புதைந்து வாசித்து முடித்து … புத்தகத்தை பற்றி எழுதுவதை விட அதை வாசித்த அனுபவத்தை எழுதுவது அலாதியானது!
Five Point Someone, One Night @ the Call Center, The 3 Mistakes of My Life, Revolution 2020: Love, Corruption, Ambition, 2 States: The Story of My Marriage என சேட்டன் எழுதியது ஐந்து நாவல்கள். ஐந்தையும் வாசித்தாயிற்று. எல்லாமே ஒரே பாணி தான். ஒருவர் தன் வாழ்க்கையை யாருக்கோ சொல்லுவதாக எழுதப்பட்ட கதைகள். கதையில் வரும் பெண் ஹிந்தி ஹீரோயின் போல இருப்பாள். அழகான, modern sometimes feminist, அதே சமயம் வசதிப்பட்டால் கேலி செய்ய ஏதுவாக ஒரு வகை டம்ப் பாத்திரம். ஆண் .. ஹீரோ ஏதாவது IIT, IIMA அல்லது corporate சார்ந்த ஒருத்தனாக இருப்பான். காதல் அபத்தமாக வரும். செக்ஸ் அதைவிட அபத்தமாக.  இது சேட்டன் பகத்தின் எல்லா எழுத்திலும் இருக்கும்.
அப்பிடி என்றால் ஏன் வாசித்தாய் என்று கேட்டால், சேட்டன் பகத் ஒரு மஜிக் எழுத்தாளன். அவர் எழுத்து அப்படியே உங்களை கட்டிப்போடும். அவ்வளவு வேகம் சுவாரசியம்,  உங்களை கதைக்களனுக்குள் கொண்டுபோய், நடமாடவிட்டு, சுதாரிக்கவிடாமல் சுவாரசியங்களை தூவி, வாசித்து முடிந்து இரண்டு நாளைக்கு பிறகு தான் தோன்றும் .. அட பக்கா மொக்கை நாவல்டா இது என்று… ஆனாலும் அவரின் அடுத்த நாவல் வரும்போது இயல்பாக போய் வாங்குவீர்கள். அது தான் சேட்டன் பகத்.
கிரிஷ், டெல்லி வாழ் பஞ்சாபி இளைஞன். IIT முடித்து IIMA படிப்புக்காக அகமதபாத் போகிறான். அங்கே அனன்யா. கல்லூரியின் தேவதை. அழகு, திமிர், அதிகப்பிரசிங்கித்தனம் நிறைந்த தமிழ் பிராமண ஐயர்! சந்திக்கிறார்கள். மீண்டும் சந்திக்கிறார்கள். நண்பர்கள் என்கிறார்கள். கொஞ்சநாளில் கிஸ்.. அப்புறம் செக்ஸ்.. இரண்டு வாரத்தில் அவன் இருக்கும் ஹொஸ்டலில் லிவிங்டுகெதர். படிப்பு முடிய அடுத்தது என்ன? இங்கே தான் கதை ஆரம்பிக்கிறது.
கிரிஷ்ஷின் வீடு, அப்பா ஒரு போக்கு. அம்மா டிபிகல் பஞ்சாபி பெண்மணி. அனன்யா வீட்டில் அம்மா அப்பா இருவருமே பொதுவான கொன்சர்வேட்டிவ் பிராமண பெற்றோர். இங்கே பஞ்சாபி மதராசி பிரச்சனைகள், இருவர் கலாச்சார விரிசல்கள், இதற்குள் மாட்டுப்பட்டு திண்டாடும் க்ரிஷ் அனன்யா என வழமையான “ஜோடி”, “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “Meet my parents” வகையறா கதை தான். ஆனால் சேட்டன் பிரசெண்டேஷனில் வெளுத்து வாங்குவார்.
இது சேட்டனின் சொந்த கதை. நிஜத்திலுமே அவர் தமிழ் பெண்ணை தான் மணந்து இருக்கிறார். நாவலின் முக்கியமான விஷயம் இரண்டு கலாச்சாரங்கள், அதன் மனிதர்களை அறிமுகப்படுத்துவது தான். ஆனாலும் கதை கிரிஷின் பார்வையில் சொல்லப்படுவதால் மதராசி என்று சொல்லி தமிழர்களுக்கு செம நக்கல். பஞ்சாபிகளையும் கலாய்த்தாலும் தன் மனைவி தமிழ் என்பதாலும், தான் சொந்த வாழ்க்கையில் எப்படி நினைத்தாரோ அப்படியே எழுதியிருப்பதாலும் தமிழர் மீது நக்கல் பல இடங்களில் எல்லை தாண்டுகிறது. ட்ரெயினில் இருந்து வாசிக்கும்போது பல இடங்களில் இயல்பாக புன்முறுவல் வந்து முன்னுக்கு இருந்த வெள்ளைக்காரி பதிலுக்கு தானும் புன்னகைத்து … அட அந்த கதை என்னத்துக்கு… சொன்னாப்போல தமிழின உணர்வாளர்கள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் தவிர்ப்பது நல்லது! உதாரணத்துக்கு,
“You are so fair, are you hundred percent south Indian? .. By South Indian standards, she is quite pretty, otherwise how black and ugly are the.”
“The Tamil font resembles those optical illusion puzzles that give you a headache if you stare at them long enough.”
“’Apologise’, Ramanujan told me, I glanced around. Tamils gathered around me like the LTTE. I had no choice. ‘I am sorry’ I said”
Five Point Someone வாசித்தவர்களுக்கு, அதன் கதை சொல்லும் பாத்திரம் கிரிஷ்ஷை தெரிந்திருக்கும். அதிலே கல்லூரி பேராசிரியர் பெண்ணை க்ரிஷ் காதலிப்பதாக இருக்கும்(த்ரீ இடியட்ஸ், நண்பனை போட்டு குழப்பாதீர்கள். படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரிஜினல் பாத்திரங்களை தலைகீழ் ஆக்கியிருப்பார்கள்). இந்த நாவலில் அதே க்ரிஷ் தான், அந்த பெண்ணோடு ப்ரேக் அப் என்ற பாணியில் கதை ஆரம்பிக்கிறது. சேட்டன் கூட IIT முடித்து தான் IIMA செய்து, அங்கே தான் மனைவி அனுஷாவை சந்தித்தார். கதையில் அது அனன்யா ஆகிவிட்டது அவ்வளவு தான்.
chetan-bhagat-with-wife-anusha-pic8நாவல் முழுக்க கிளிஷே வசங்கள் ஏகத்துக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு,
“The word “future” and females is a dangerous combination.”
“She had perfect features, with her eye, nose, lips, and ears the right size and in right places. That is all it takes to make people beautiful, normal body parts – yet why does nature mess it up so many times?”
“Corporate types love to pretend their life is exciting. The whispers, fist-pumping and animated hand gestures are all designed to lift our job description from what it really is - that of an overpaid clerk”
சேட்டனை, வாழ்க்கையை அபரிமிதமாக படம் பிடிக்கும், எங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட வைக்கும் எழுத்துக்களை எழுதும் அவரின் சமகாலத்து லாகிரியோடோ, காலீத் ஹூசைனியோடோ ஏன் அனிதா நாயரோடு கூட ஒப்பிடமுடியாது. சேட்டன் ஜனரஞ்சக எழுத்தாளர். சொல்ல வரும் விஷயத்தை மசாலா கலந்து சொல்லுவார். எழுதும்போதே இந்த நாவலை யாராவது படமாக எடுப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே காட்சிகள் அமைக்கிறாரோ என்ற சந்தேகம் பல இடங்களில் வரும். சேட்டன் இன்னுமொரு நாவல் எழுதி அதுவும் இதே பாணியில் அமைந்தால், வாசகர்கள் இவரை தாண்டி சென்றுவிடுவார்கள் என்பது இவரின் கடைசியாக வெளிவந்த Revolution 2020 நாவல் சொல்லும் பாடம். பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று.
The world's most sensible person and the biggest idiot both stay within us. The worst part is, you can't even tell who is who.

Comments

  1. ரொம்ப ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன். எனவே வாசிக்கச் சந்தர்ப்பம் குறைவு. ஏற்கெனவே ஜி.நாகராஜனைப் படித்துக் கொண்டதும் சிரமப்பட்டும் கொண்டும் உள்ளேன். இத்தனைக்கும் அவர் 'சேட்டன்' வகையறா அல்ல.

    ReplyDelete
  2. நல்லா வெயில் காயுறீங்க!!! (சும்மா வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கப்பா!
    //லஞ்ச் டைமில் Flagstaff gardenக்கு போய் எல்லா வெள்ளைகளும் கழட்டி எறிந்துவிட்டு ஜோடியாக புற்தரையில் வெயில் காயும். நான் அதைப்பார்த்து காய்ந்தபடியே புத்தகத்தை வாசித்து,//

    ReplyDelete
  3. @சக்திவேல் அண்ணா !!
    இண்டைக்கு தான் ஜே ஜே சில குறிப்புகள் தூக்கி வச்சிருக்கிறன் .. நான் எடுத்த நேரமோ என்னவோ .. செவ்விந்தியன் அண்ணே சுராவை வாரிவிட்டு போயிருக்கிறார் இண்டைக்கு :)

    //'சேட்டன்' வகையறா//
    விளங்குது பாஸ் .. எங்கேடா சக்திவேல் அண்ணே சாதா தோசையோட போகமாட்டாரே எண்டு பார்த்தன் .. நக்கல் விளங்குது அண்ணே!

    ReplyDelete
  4. வாங்க செழியன் ..

    //நல்லா வெயில் காயுறீங்க!!!//
    காஞ்ச மாடு கம்புமேட்டில விழுந்த கதை தான் பாஸ்!

    ReplyDelete
  5. ''அண்ணே புத்தகம் வாசிக்கிறது மனசுக்கு சந்தோஷத்துக்கு தானே .. பேந்தென்னத்துக்கு டென்ஷன் தாற புத்தகங்களை வாசிக்கிறீங்கள்? பேசாம ரமணிச்சந்திரன் வாசியுங்க ..''

    உங்களையுமா????

    ''ஆனாலும் அவரின் அடுத்த நாவல் வரும்போது இயல்பாக போய் வாங்குவீர்கள். அது தான் சேட்டன் பகத்.''
    The 3 Mistakes of My Life இது மட்டும் தான் வாசித்தேன்

    சொன்னாப்போல தமிழின உணர்வாளர்கள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் தவிர்ப்பது நல்லது! உதாரணத்துக்கு,
    இப்படி சொல்லியே வாசிக்கவைத்துவிடுவீர்கள் போல

    பழைய ஜேகே எட்டி பார்க்கிறார் போல .....

    ReplyDelete
  6. ஆங், ஜி.நாகராஜன் புத்தகம் தம்பி செவ்விந்தியன் இரவல் தந்ததுதான்.

    ReplyDelete
  7. நன்றி கீதா .. பழைய ஜேகே எட்டிப்பார்க்கிறாரா? நான் எப்பப்பப்பா புது ஜேகேயா போனேன்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .