“ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ம் திகதி, தனது 39வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறு நாள் இறந்தான்” அங்கே ஆரம்பித்தது “சனியன்”. இப்போது அல்பர் காம்யு யார் என்று அறியவேண்டும். அவரை ஏன் நாவலின் ஆரம்பத்திலேயே கொழுவினார்? அல்பர் காம்யு ஒரு பிரெஞ்சிய எழுத்தாளர். நோபல் பரிசுபெற்றவர் என்ற அளவுக்கு மேல் அவரை வாசித்தேன் என்று கெத்தாக எழுதுவதற்கு அட்லீஸ்ட் அவர் நாவலின் முன் அட்டைப்படமாவது நான் பார்த்திருக்கவேண்டும். ஆனால் இந்த நாவல் ஒரு எழுத்தாளரை பற்றி தான் என்பது அந்த வரிகளில் புரிந்துவிட, கொஞ்சம் கவனமாகவே ஜே ஜே சில குறிப்புகளை புரட்ட தொடங்கினேன். இதை நாவல் என்பதா, குறிப்புகள் என்பதா … என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத ஒரு வடிவம். பாலு ஒரு வளர்ந்து வரும்தமிழ் எழுத்தாளன். அவனுக்கு ஜேஜே என்ற மலையாள எழுத்தாளன் கம் சிந்தனைவாதி (இதை கேட்டால் ஜேஜே விழுந்து விழுந்து சிரிப்பான் இல்லை என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுவான்) ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஜேஜேயை இவன் தூர இருந்தே காதலிக்கிறான். எதை செய்யும்போதும் ஜேஜே எப்படி இதை அணுகியிருப்பான் என்று சிந்திக்கிறான். ஜேஜே பின்னால் திரிகி