Skip to main content

ஜே ஜே: சில குறிப்புகள்


“ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ம் திகதி, தனது 39வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறு நாள் இறந்தான்”

100-00-0000-053-3_b

அங்கே ஆரம்பித்தது “சனியன்”. இப்போது அல்பர் காம்யு யார் என்று அறியவேண்டும். அவரை ஏன் நாவலின் ஆரம்பத்திலேயே கொழுவினார்? அல்பர் காம்யு ஒரு பிரெஞ்சிய எழுத்தாளர். நோபல் பரிசுபெற்றவர் என்ற அளவுக்கு மேல் அவரை வாசித்தேன் என்று கெத்தாக எழுதுவதற்கு அட்லீஸ்ட் அவர் நாவலின் முன் அட்டைப்படமாவது நான் பார்த்திருக்கவேண்டும். ஆனால் இந்த நாவல் ஒரு எழுத்தாளரை பற்றி தான் என்பது அந்த வரிகளில் புரிந்துவிட, கொஞ்சம் கவனமாகவே ஜே ஜே சில குறிப்புகளை புரட்ட தொடங்கினேன்.

இதை நாவல் என்பதா, குறிப்புகள் என்பதா … என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத ஒரு வடிவம். பாலு ஒரு வளர்ந்து வரும்தமிழ் எழுத்தாளன். அவனுக்கு ஜேஜே என்ற மலையாள எழுத்தாளன் கம் சிந்தனைவாதி (இதை கேட்டால் ஜேஜே விழுந்து விழுந்து சிரிப்பான் இல்லை என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுவான்) ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஜேஜேயை இவன் தூர இருந்தே காதலிக்கிறான். எதை செய்யும்போதும் ஜேஜே எப்படி இதை அணுகியிருப்பான் என்று சிந்திக்கிறான். ஜேஜே பின்னால் திரிகிறான். ஜேஜே என்பவன் பற்றி ஒரு கோட்டை கட்டி அங்கே ஜேஜேயை சக்கரவர்த்தியாக நியமித்து, பகிடி என்னவென்றால் கோட்டைக்கு கொத்தனாரும் ஜேஜே தான். ஜேஜே அழகாக தச்சு வேலை செய்வான். அவன் அப்பாவிடம் இருந்து பழகிய பழக்கம். அதிலும் நேர்த்தி, தத்துவம் தேடி செதுக்குவான். ராணிக்கு சரிக்கட்டிய கட்டில் பிடியில் ராணியின் நிலை பற்றி செதுக்கியவன், அதை யாருக்கும் சொல்லவில்லை. உதைபந்தாட்டக்காரன். ஓவியன் … இந்த விவரங்களை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. எனிவே!

“நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு செய்யவேண்டும், இல்லையேல் இறந்துவிடவேண்டும், இரண்டுமே என்னால் முடிவதில்லை, அது தான் என் பிரச்சனை” என்கிறான் ஜேஜே. ஓமனக்குட்டியை காதலித்து கரம்பிடித்து இரண்டுபேரும் ரயிலில் தேனிலவுக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். விஷயம் தெரியாத ஓமணக்குட்டி ஜேஜேயிடம் தான் எழுதிய கவிதைத்தொகுப்பை நீட்டுகிறாள். ஜேஜே வாசித்துவிட்டு சிரிக்கிறான். கவிதைத்தொகுப்பை பெட்டிக்குள் கவனமாக வை என்கிறான். அவள் அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. “என் கவிதை எப்பிடி இருக்கு, சொல்லு” என்று அவனை தொணதொணக்க,  “அந்த கவிதைகளை பேசாமல் யன்னல் வழியாக தூர எறிந்துவிடு” என்கிறான். சண்டை. அடுத்த ஸ்டேஷனிலேயே பிரிகிறார்கள்.

பாலுவும் ஜேஜேயும் இந்த நூலில் ஒரே ஒரு இடத்தில் தான் சந்திக்கிறார்கள். ஒரே ஒரு வார்த்தை. “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டாரா?” என்று ஜேஜே கல்கியை ஒரு கடி கடிக்கிறாரன். இவ்வளவு தான். மற்றும்படி சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் பாலு ஜேஜேவை தூர இருந்தே ரசிக்கிறான். ஜேஜே பற்றி அவனோடு நெருங்கி பழகியவர்களிடம் குறிப்பெடுக்கிறான். மும்பை கூட போகிறான். இறுதியில் ஜேஜே சில குறிப்புகள் என்று ஒரு தொடர் டயரி குறிப்புகளை எழுதுகிறான். இது தான் நாவல்.

Sundara_ramasamy7_400
ஒரு கட்டத்தில் பாலு தன் தந்தையிடம் இருந்தே ஜேஜே பற்றி கேட்டறிகிறான். மீண்டும் மீண்டும் ஒரே கதையை அவரும் விரும்பி விரும்பி சொல்லுவார். அப்போது தான் நம் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக புலர தொடங்கும். பாலு தான் அந்த ஜேஜே. இன்னும் கொஞ்சம் மேலே போனால், நாவலின் எழுத்தாளர் சுந்தர ராமசாமியே தான் அந்த ஜேஜே. ஒரு எழுத்தாளனின் சிந்தனை ஒட்டங்கள், தத்துவ விசாரங்கள், விண்டாவாதங்கள், craziness, ஒருவரையும் கணக்கெடுக்காத குணம், தன்னை ஒருவருமே கணக்கெடுக்கிறார்கள் இல்லையே என்ற ஏக்கம் எல்லாமே சேர்ந்த ஒரு நிழல் பிரதியாக தன்னையே வடித்து சுரா எழுதிய நாவல் தான் ஜேஜே சில குறிப்புகள்.

இந்த நாவல் கொஞ்சம் மிரட்டலான நடை. மலையாள நெடி அதிகம் உள்ள நாவல். அதுவும் என் போன்ற தமிழறிவு டைப்படிக்கும் வாசகர்களுக்கு வாசித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டிவிடும். அதைவிட சொல்லும்விஷயம் இன்னமும் மண்டை காயவைக்கும். திரும்ப திரும்ப வாசித்தால் மாத்திரமே இந்த மக்கு மண்டைக்கு புரியக்கூடிய பக்கங்கள் தான் ஏராளம். எடுத்தவுடனேயே புரிந்த ஒரே ஒரு பகுதி முன்னுரை மாத்திரமே. நான் முதலில் எல்லோரும் அட்வைஸ் பண்ணுவது போல, தமிழ் படிக்கவேண்டும்.
ஜே ஜே சிலகுறிப்புகள், வாசித்தால் வாசிப்பவர்களை எழுத்தாளர் ஆக்கிவிடும் அபாயங்கள் நிறைந்த புத்தகம். சிந்தனாவாதிகளை தற்கொலை செய்ய தூண்டும். Bluffs கூட வாசிக்கலாம். அட்லீஸ்ட் நான்கு வாரங்களுக்கு facebook இல் புரியுதோ இல்லையே ஸ்டேடஸ் போட்டு கலக்குவதற்கு புத்தகம் நிறைய கிளிஷே வசனங்கள் குவிந்துகிடக்கின்றன. உதாரணத்துக்கு.
“மாட்டுக்கு சொறிந்து கொடு, அது நல்ல காரியம். மனிதனுக்கு ஒரு போதும் சொறிந்து கொடுக்காதே, சக மனிதனை ஏமாற்றாதே”
இந்த நாவலை ஒரு கிளாசிக் என்று ஜேஜே தவிர்ந்த மீதி எல்லோருமே சொல்வார்கள்.

Comments

  1. "ஜே ஜே சிலகுறிப்புகள்" இல் எனக்கு உடன் ஞாபகம் இன்னொரு வரி - “ஒரு தவளையும் இனி கிணற்றுக்குள் இருக்க முடியாது“

    ReplyDelete
  2. ஏற்கேனவே ஜி.நாகராஜனுடன் மல்லுக்கட்டுக்றேன். கதையில் இருந்து காமத்தை எடுத்தால் இலக்கியம் மிஞ்சுதா அல்லது உண்டா? என்று தீர்மானிக்க முடியவில்லை. 'மாப்பசான்' மாதிரிக் கிண்டலும் இல்லை. என்னால் என்னவோ புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், பின்னாட்களில் வண்ணநிலவன் என்று நான் தேடி வாசிக்கும் நபர்களில் ஜி.நா. ஐ வைக்கமுடியவில்லை.

    சுந்தரராமசாமியில் ஒரு சிறுகதைத் தொகுப்பொன்றை ரசித்து வாசித்தேன். தொகுப்பின் பெயர் ஞாபகம் வருதில்லை. அனால் நிச்சயமாக அது மேலுள்ளது போல் 'சிக்கலான' வஸ்து அல்ல. தெளிந்த நீரோடை போல் அழகான நடை.

    (முடிபு : சுய அலம்பல் )

    ReplyDelete
  3. ஏற்கேனவே ஜி.நாகராஜனுடன் மல்லுக்கட்டுக்றேன். கதையில் இருந்து காமத்தை எடுத்தால் இலக்கியம் மிஞ்சுதா அல்லது உண்டா? என்று தீர்மானிக்க முடியவில்லை. 'மாப்பசான்' மாதிரிக் கிண்டலும் இல்லை. என்னால் என்னவோ புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், பின்னாட்களில் வண்ணநிலவன் என்று நான் தேடி வாசிக்கும் நபர்களில் ஜி.நா. ஐ வைக்கமுடியவில்லை.

    சுந்தரராமசாமியின் ஒரு சிறுகதைத் தொகுப்பொன்றை ரசித்து வாசித்தேன். தொகுப்பின் பெயர் ஞாபகம் வருதில்லை. அனால் நிச்சயமாக அது மேலுள்ளது போல் 'சிக்கலான' வஸ்து அல்ல. தெளிந்த நீரோடை போல் அழகான நடை.

    (முடிபு : சுய அலம்பல் )

    ReplyDelete
  4. நன்றி பாலா .. ஜேஜேவின் ஒரே ஒரு மேடையேற்றப்பட்ட நாடகம் அது .. :)

    ReplyDelete
  5. அண்ணே ...

    // புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், பின்னாட்களில் வண்ணநிலவன் என்று நான் தேடி வாசிக்கும் நபர்களில் ஜி.நா. ஐ வைக்கமுடியவில்லை. //

    நான் இன்னும் புதுமைப்பித்தனே முடிக்கவில்லை அண்ணே .. சுரா இந்த புத்தகத்தை ஒரு முடிவோடு தான் எழுதியிருக்கொணும். புளியமரத்தின் கதை வச்சிருக்கிறன். கொஞ்ச நாளில் துறக்கோணும்.

    எனக்கெண்டா நட்சத்திரசெவ்விந்தியன் அண்ணேயை யோசிக்கேக்க ஜேஜே ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை..

    //(முடிபு : சுய அலம்பல் )//
    எந்த எழுத்துமே சுய அலம்பல் தானோ என்ற சிந்தனை எழுதினதை வாசிக்கேக்க வருது! .. அப்பிடி நினைச்சா எழுதவே ஏலாது எண்டு நினைக்கிறன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .