Skip to main content

Posts

Showing posts from July, 2013

போயின … போயின … துன்பங்கள்!

  “நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்.  “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req);     லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.

எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை

  அவை வணக்கம். தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி. கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே ஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும் காலத்திலே கேசியிலே உருவெடுத்து மொத்த ஆஸிக்குமே புகழ் சேர்க்கும் மாசற்ற மன்றமிதை நடத்துவதோ வெட்டி பேச்சு இல்லே. தமிழுக்கு பாடை சாய்த்து பாலை ஊத்தும் நேரத்திலே ஆடிக்கு பிறப்பு எண்டு கூழை ஊத்தி கொண்டாடுவது காலத்தின் தேவையிது; அதில் கவியரங்கம் அமைத்து என்னையும் சேர்த்தது மட்டும் தேவையற்ற வேலையது.  

எளிய நாய்!

  நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம். அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த போட்டோவை கிளிக் பண்ணுங்க. அண்ணே அப்பிடியே கொப்பி பண்ணி தேடாதீங்க. அந்த பொண்ணுக்கு எங்கண்ணே தமிழ் தெரியப்போகுது? இங்கிலீஷ்ல டைப் பண்ணி தேடுங்க.  “Manisha Sur”ஆ வருதா? ஒரு பொம்பிளை படம் இருக்கா? கொஞ்சம் நிறம் குறைஞ்ச பிள்ளை. தலையை ஸ்ட்ரெய்ட் பண்ணி, கண்ணெல்லாம் பெயின்ட் அடிச்சு அரியண்டம் பண்ணியிருக்கும். கடும் நாவல் கலர்ல லிப்ஸ்டிக் அடிச்சிருக்கும்.