மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன.
இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல்
அவதாரங்களுக்கு தயாராகின்றனர்.
சூரியன் தீக்குளித்தவன் போல
வெப்பம் மேலேறி அலறுகிறான்.
தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம் தேடி
பதுங்குகுழிகள் தேடுகின்றார்கள்.
அவள் வருகிறாள்.
சித்தார்த்தர்கள் போதிமரத்து
குயிலிசையில் மயங்குகிறார்கள்.
ராஜாவின் வீட்டுக்கு ரகுமான் விரைகிறார்.
வரவேற்பரையிலோ வைரமுத்து.
எறும்புக்கும் கவிதை வருகிறது.
அவனிடம் வருகிறாள்.
சமயலறை வெந்நீர் கொதிக்கமாட்டேன்
என்று அடம்பிடிக்கிறது.
அவளுக்கான பருக்கை சோற்றோடு
அட்சய பாத்திரம் அப்படியே காத்து கிடக்கிறது.
மகிழூந்தின் பக்கத்து இருக்கை அனிச்சையாய் தூசு தட்டப்படுகிறது!
அகலிகை பயம் இன்றி கற்களில் பாதம் படுத்த முடிகிறது.
அறிவும் அறியாதனவும் அச்சம் அகற்றுகின்றன.
அவள் வந்து விடுவாள்.
தோற்றவனை பார்த்து
"இன்று போய் நாளை வரவா?"
என்று மனம் பண்படுகிறது.
இந்த இப் புள்ளிக்கான கோட்டை
திரும்பி பார்க்கையில்
எதிர்கால துன்பங்களில்
நம்பிக்கை துளிர் விடுகிறது.
எதை நீ கொண்டுவந்தாய்? என்பவனிடம்
உனக்கெதுக்கு எல்லாமே? என்று கேட்க தோன்றுகிறது.
"எப்போதாவது காதலித்திருக்கிறாயா?"
நான் கேட்கும்போது மட்டும்
காடு விழுந்து விழுந்து சிரிக்கிறது.
அவளேகினான்.
I am confused.
ReplyDeleteஅவளே-Feminine கினான் Masculine.
So what is the meaning of அவளேகினான்.
Also, அவள் வருகிறாள்,அவனிடம் வருகிறாள்,அவள் வந்து விடுவாள் is fine. no problem.
But how comes நான் கேட்கும்போது மட்டும்
All the other lines I enjoyed.
Thursday blog was missing so I thought ur not well or in holidays.
Siva
Thanks Siva.
Delete//But how comes நான் கேட்கும்போது மட்டும்//
This was little deeper and had a context also. Please read this
http://www.padalay.com/2012/10/blog-post.html
//Thursday blog was missing so I thought ur not well or in holidays.//
No no .. its just that I wasn't inspired to write anything last thursday.
"எப்போதாவது காதலித்திருக்கிறாயா?"
ReplyDeleteநான் கேட்கும்போது மட்டும்
காடு விழுந்து விழுந்து சிரிக்கிறது.
>>
ஏன் சிரிச்சது?!
//ஏன் சிரிச்சது?!//
Deleteஅது புரிய நீங்கள் எப்போதாவது காடேகி இருக்கவேண்டும்!
காற்றும் மாறவில்லை,
ReplyDeleteகதிர் சிந்தும் ஒளியும் மாறவில்லை,
நேற்று இன்று நாளை இந்த நிலவும் மாறவில்லை,
பார்வை மட்டும் மாறும் இதில் பாரின் வண்ணம் மாறும்.
காதல் வந்து மூட இந்த காசினி எழிலாகும்.
காதல் என்ற ஒன்றை நீவிர் கண்ட சேதி கண்டு
மேவும் அலைகள் போல வாழ்வு என்று காடு நகைத்திருக்கும்.
உன்காடு என்காடு அல்ல!
Deleteஉன் பாடும் என் பாடும் அல்ல.
என்காடு எப்போதும்
எகத்தாளமாயே சிரித்துவைக்கும்.
எக்கேடு கேட்டாலும் இங்கேயே வரவேணும்
எண்டு சொல்லும்.
என்னோட கூட இருக்கும்.
பல சமயம் குழிபறிக்கும்.
இங்கிக்காடை நான் அடையேல்
நானே இல்லையன்ற உரை பகர்க்கும்!