முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை சந்தித்தபோதே சொன்னான். ஜென்டில்மன். அகல்யாவுக்கு உள்ளம் குளிர்ந்தது. இவன் காதலில் மென்மை பாராட்டுபவன். . பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் பாட்டு சீன் ஞாபகம் வந்தது. அகல்யா தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்.