Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள்


அச்சுப்பிரதிகள் தீர்ந்துவிட்டதால் புத்தகம் இப்போது அமேசனில் மாத்திரம் கிடைக்கிறது. நன்றி.

https://www.amazon.com/dp/B0762ZRLZM/ref=cm_sw_r_sms_awdo_1ZXPSMTGVJFX4ZHPHNAE


பிறவழிகளில் கட்டணம் செலுத்த விரும்புவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் இந்த  விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

மெல்பேர்னில் வசிப்பவர்கள் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற இருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நிகழ்விலும் புத்தகத்தை வாங்கலாம். நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் இந்தவாரம் வெளியிடப்படும். 

புத்தகம் ஒக்டோபர் இறுதிவாரம் முதல் தபாலில் அனுப்பிவைக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு jkpadalai@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

 

புத்தக விவரம்

காப்புரிமை - ஜேகே 
பதிப்பாளர் - வண்ணம் நிறுவனம் (www.vannam.com.au)
ISBN-10 : 0992278422

ISBN-13 : 978-0-9922784-2-7
பக்கங்கள் – 344


அட்டைப்பட புகைப்படம் - செல்லத்துரை ரதீஸ்குமார்
அட்டைப்பட வடிவமைப்பு - மெட்ராஸ் கஜன்
அட்டைப்படச் சிறுவன் - டேவிட் பதூஷன்
ஓவியங்கள் – ஜனகன், ஜனனி, நாகநந்தினி, தர்ஷி

காணொளி வடிவமைப்பு & உருவாக்கம் - கேதா





"உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி."

அன்புடன்,
ஜேகே 

Comments

  1. நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஜேகே
    Uthayan

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணே

      Delete
  3. வாழ்த்துகள் ஜே.கே. முன் பதிவு செய்துவிட்டேன் .

    மோகன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மோகன். உங்கள் ஆதரவும் இந்த புத்தகம் வெளியாவதற்கு முக்கிய காரணம்.

      Delete
  4. வாழ்த்துகள் அண்ணா..... முன் பதிவு செய்துவிட்டேன் .
    அண்ணா..... புத்தக அட்டை ; பார்த்ததும் சிலிர்த்தவர்கள் அநேகர் இருக்கலாம்... நான் உட்பட.. காதலியைக் கைப்பிடிக்கும் நாளிற்காய்..... காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செல்வி

      Delete
  5. வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. ஜேகே,

    உங்கள் முதல் குழந்தையை கையில் அள்ளும் நாளுக்காய் தாய்மையோடு காத்திருக்கிறேன்.

    ஆத்மார்த்தமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கூடவே!

    ஒரு நிமிடக் காணொளியில் நேர்மை தொனிக்கும் குரலில் கச்சிதமான அறிமுகமும் மிக தத்ரூபமான அட்டைப்படமும் புத்தகத்தை முழுவதுமாகச் சொல்லி விடுகின்றன. புத்தகத்துக்கு பொருத்தமான முகம் தந்த புகைப்படத்துவ கலைஞனுக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அக்கா.

      Delete
  7. அன்பரே உங்கள் எழுத்து வண்ணம் மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே ... வாழ்த்துக்கும், முன் பதிவுக்கும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .