யாழ்.குடாநாட்டின் ஒரு கால கட்டத்தின் ஆத்மாவை பிரதிபலிக்கும் கொல்லைப்புறத்து காதலிகள் புதிய தலைமுறைப்படைப்பாளி ஜே.கே.யின் பால்யகால வாழ்வனுபங்களின் பதிவு படலை வெளீயிடாக இந்த ஆண்டு(2014) இறுதிப்பகுதியில் வெளியாகியிருக்கும் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற ஜெயக்குமரன் சந்திரசேகரத்தின் பால்ய கால நினைவுப்பதிவாக வெளியாகியிருக்கும் அவரது என் கொல்லைப்புறத்து காதலிகள் நூலைப்பற்றி அதனைப்படித்துப்பார்க்காமல் ஒரு வாசகர் பின்வரும் முடிவுக்கும் வந்துவிடலாம். ஜே.கே . என்ற எழுத்தாளரின் வாழ்வில் வந்து திரும்பிய நிஜக் காதலிகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் கதைகளாக அல்லது கட்டுரைகளாகத்தான் இந்த நூலின் உள்ளடக்கம் இருக்கலாம் என்ற உத்தேச முடிவுக்கு அவர்கள் வரலாம்.