நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப் போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ மேதகு தகைய மிகுநல மெய்தி -- மாங்குடி மருதனார், (மதுரைக் காஞ்சி) பரத்தைப்பெண் ஒருத்தி தெருவிலே தன்னை மிகையாக அலங்கரித்து விண்ணை எட்டும் நறுமணம் தவழ நடந்தாளாம். இந்த சுதந்திரம் சமூகம் அவளுக்குத்தந்த உரிமையாக நினைத்து வளையல்கள் ஒலிக்க கைகள் வீசியபடி நடந்தாளாம். “மேதகு தகைய மிகுநல மெய்தி” க்கு, முன்னர் பலரோடு புணர்ந்ததால் கலைந்த ஒப்பனை கொடுக்கும் அழகு அவளுக்கு மேலும் நீடித்த பெருமை சேர்க்கிறது என்று நச்சினார்க்கினியர் விளக்கம் கொடுக்கிறார். அதில் ஒரு உள்ளார்த்தமும் இருக்கிறது. பாவம், தலைவனின் இன்பத்துக்காகத்தான் அவள் இப்படி அலங்கரிக்கிறாள், அதனாலேயே அவளுக்கு இந்த சுதந்திரம் என்பதைக்கூட அறியாமல் அதனை ஒரு பெருமையாக கருதுகிறாளே இந்தப்பேதை.