Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி டிலக்சனா


இது கொல்லைப்புறத்துக் காதலிகள் வாசித்தபிறகு சிலநாட்கள்/கிழமை சென்றபின் என் மனதிலே உள்ள பதிவுகளை உங்களுக்கு கூறுவதற்காக எழுதுகிறேன். தமிழில் டைப் பண்ணே நீண்ட நேரம் எடுக்கும் என்பதற்காக என் கைப்பட எழுதுறன்! 
- நிறைய நினைவுகளையும் கடந்த கால இரை  மீட்டல்களையும் உங்கட கதைகளை வாசிக்கும்போது உண்டரக்கூடியதாக இருந்தது! நன்றி. “இலங்கைத் தமிழில்” ஒரு நல்ல எழுத்தாளனை அவரது படைப்புகளை வாசிக்க எதேச்சையாக கிடைத்த சந்தர்ப்பம். யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்டவள்! வவுனியா மக்களின் தமிழும் தனித்துவமானதுதான்.  தமிழ் என்றால் யாழ் மட்டுமே என்று குறுக்குவதில் விருப்பமில்லை.
- எக்ஸாமுக்கு போறதுக்கு முதல் சாமி கும்பிடுறது. எல்லா சாமியையும் ஒரேயளவு கும்பிடுறது. இதே பழக்கம் எனக்கும் இருக்கு! வாசிக்கேக்க பஸ் முழுவதும் சிரிச்சுக்கொண்டே வந்தன். 
- குட்டியன் கதை செம. “Touching”. என்ன எண்டு சொல்லத் தெரியேல்ல.
- எல்லோரும் கூடுதலாக உங்கட எழுத்துக்களை பாராட்டியிருப்பார்கள். So மேலும் பாராட்டுவதைவிட இன்னும் நீங்கள் சில Topics பற்றி எழுதவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
1) நீங்கள் சிங்கப்பூரில் இருந்ததெண்டபடியால், இங்குள்ள மக்கள், அவர்களின் நினைவுகள் (This is just to see how you captured the moments and your opinion compared to mine, ha ha)
2) வன்னி வவுனியா மக்களைப்பற்றியும் எழுதவேண்டும். பரந்துபட்டு எழுதவேண்டும். உங்களுக்கு அனுபவம் இருக்கலாம். நீங்கள் ஆராய்ந்து எழுதுபவர் என்றும் தெரியும்.
3) உங்கள் எல்லா male, female characters உம் “குமரன்”, “ஆங்கில இலக்கியம்” படித்தவனாக இருக்கவேண்டும் என “fix” பண்ணாமல் எல்லாவிதமான மனிதர்களையும் சூழலையும் பற்றி எழுதுங்கள்.
எதுவும் தவறெனின் மன்னிக்கவும். இப்பத்தான் உங்கட blog வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
--- டிலக்சனா.

12

Comments

  1. "உங்கள் எல்லா male, female characters உம் “குமரன்”, “ஆங்கில இலக்கியம்” படித்தவனாக இருக்கவேண்டும்..."இதை நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன், இது மாதிரியான ஒரு சந்தர்பத்திற்காக காத்திருந்தேன். உதாரணமாக சமீபத்தில் ஒரு கதாபாத்திரத்திம் 80:20 ரூல் பேசியது கொஞ்சம் நெருடியது. எழுத்துகளில் பல வகை உண்டு, உங்களுக்கு அது மகிழ்ச்சியளிக்கிறது அதனால் எழுதுகிறீர்கள். ஒரு சிலரை எழுத்து வந்து புரட்டிப்போடும் எழுதாவிட்டால் விடாது. தொடர்ந்து பல விஷயங்களை பற்றி எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மோகன். அந்த குமரன் மேகலா விஷயம் கடந்த ஒரு வருடமாக வரவே இல்லை எனலாம். கொல்லைப்புறத்துக் காதலிகள் தொடர் வேறு விஷயம். அந்த தொடரிலே சில பாத்திரங்கள் throughout ஆக வருவது ஒரு தொடர்ச்சிக்கு உதவும். ஆனாலும் வாசிப்பின்போது பாத்திரங்களில் என்னைப் பொருத்திப்பார்ப்பதை தவிர்க்குமாறு எழுதவேண்டும். இப்போது அதில் கூடுதல் சிரத்தை எடுக்கிறேன்.

      மீண்டும் உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி.

      Delete
  2. Tonic enna boss???? naanga Quartere thaarom... neenga eluthunga boss..
    ethu nadanthaalum amuthavaayan mukkayam boss... ippave formatting start pannunga...

    ReplyDelete
    Replies
    1. பண்ணிட்டா போச்சு

      Delete
  3. Anna, I perfectly read your book.l am studying physics , your favourite kumaran sir. I never miss my physics class for the same reason. But I really miss s.master.
    I will comment your articles as soon as possible.

    ReplyDelete
  4. Just now onwards I'm your fan.
    Go ahead dear

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...