ஒரு இயல்பான நிச்சயத் திருமணம். பரஸ்பரம் அறிமுகமில்லாத இருவரின் ஈகோ, அதெல்லாம் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளும்போது மலரும் இனிமையான காதல். திருமணத்துக்கு பின்னரான காதல். “மௌனராகம்”. எண்பதுகளில். காதலிக்கிறார்கள். இருவீட்டிலும் சம்மதமில்லை. தன்னிச்சையாக திருமணம் முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து குடும்பம் நடத்துகிறார்கள். ஈகோ. ஊடல். சின்னதாய் பிரிவு. அப்போது அவர்களுக்குள்ளேயே இருக்கும் அந்த ஈர்ப்பும் காதலும் புரியவே மீண்டும் சேருகிறார்கள். “அலைபாயுதே”. தொண்ணூறுகளில். காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழுகிறார்கள். திருமணம் எல்லாம் தேவையில்லாத கொமிட்மெண்ட் என்று சொல்லுகின்ற “லிவிங் இன் ரிலேஷன்ஷிப்” காதலர்கள். இருக்கும்வரைக்கும் சந்தோசமாக இருப்போம். எதுக்கு திருமணம் செய்து தேவையில்லாத சண்டை, ஊடல், கோபம், அங்கலாய்ப்பு எல்லாம் அனுபவிப்பான் என்கின்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் இளம் ஜோடி. வாழ்க்கை நன்றாகவே போகிறது. ஆனாலும் அதே சண்டை, ஊடல், கோபம் எல்லாமே லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பிலும் வருகிறது. ஒரு கட்டத்தில், தாம்பத்யம் என்பது வெறும் இருபதுகளோடு முடியும், வேண்டுமானால் பிய்த்து...