நீண்டதொரு ரயில் பயணம், நீண்ட நாட்களின் பின்னான நல்லதொரு நாவலும்,என் தமிழ் எழுத்தும். கடுகதி ரயில் சேவை என்று கடைசியில் கடுகடுப்பாக்கிய 12 மணித்தியாலங்கள்,ஆபத்பாந்தனாய் "கந்தசாமியும் கலக்சியும்" முன் பின் தெரியாதவர்களிடம் அவ்வளவாக பேச்சுக் கொடுக்கமாட்டேன்,ஆனால் அவர்கள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் என் பூர்வீகம் முழுவதும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்,பதிலுக்கு அவர்கள் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் என்று மட்டும் தெரிந்து கொள்வேன்.அப்படிப்பட்ட சக பயணியிடம் தப்பிப்பதற்கு நான் எடுத்துக் கொள்ளும் ஆயுதங்கள் ஒன்று புத்தகம்,இன்னொன்று நல்ல மலையாளப்படம். அச் சகபயணி கொழும்பு பயணத்தை ரத்து செய்து இன்னுமொரு அரைமணித்தியாலதில் அநுராதபுரத்தில் இறங்கிவிடுவார் என்ற செய்தி லாட்டரிச்சீட்டு விழுவதைப்போல.லாட்டரிச்சீட்டு விழுகிறதோ இல்லையோ எனக்கு அவாட ஜன்னல் சீட்டு confirm.பிறகென்ன , ஜன்னலோரம் ,ரயில் பயணம், தனிமை,புத்தகம்,கையில் ஒரு hot coffee இல்லாததுதான் குறை.ஸ்டார்ட் த மியூஜிக். ஜேகே அண்ணா,உங்களுடைய "கொல்லைப்புறத்து காதலிகள்" பற்றியே முதல் பதிவு போட வேண்டும் என்று நினைத்திருந்த...