Skip to main content

Posts

Showing posts from February, 2016

ஞானம் சஞ்சிகையின் "ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்"

அனைவருக்கும் வணக்கம். சிறுகதைகள். சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.

காதல்

  மாளவிகா அக்கா பயங்கரக் கெட்டிக்காரி. பயங்கர வடிவு. பயங்கரமா இங்க்லீஷ் கதைப்பா. இப்படி பல பயங்கரங்கள் அவரிடம் இருந்தன. அதனாலேயே அவரை எனக்குப் பயங்கரமா பிடிக்கும். அவர் அப்பாவிடம் சேர்வயிங் படிக்கவரும் சமயம் கணக்கு கொப்பியை எடுத்துக்கொண்டுபோய் நானும் பக்கத்தில் உட்காருவேன். ஏற்கனவே செய்து பிழை திருத்திய கணக்குப்பேப்பரை திரும்பவும் அவவுக்கு முன்னாலேயே செய்து முடிப்பேன். “மண்டைடா நீ” என்பார். வெளிப்படை உண்மை நிறுவிவிட்டு கீழே இரண்டு கோடுவேறு சரிவாக சர்க் சர்க்கென்று அடிப்பேன். “ஜீனியஸ்” என்பார். அப்பா கிளையண்டோடு பேசுகின்ற சமயங்களில் செஸ் விளையாடுவோமா? என்று கேட்டு அடம் பிடித்திருக்கிறேன். கோபப்படமாட்டார். நிறைய கதைப்புத்தகம் வாசிப்பார். அம்மாவுக்கு கொண்டுவந்து கொடுப்பார். ஒரு முறை அவர் கொண்டுவந்த “தீப ஒளி”யை வாசித்துவிட்டு நானும் வளர்ந்து ரமணிச்சந்திரன் ஹீரோமாதிரி ஒரு கொம்பனிக்கு நிர்வாகியாக வருவேன் என்று சொன்னேன். இந்த வயசில உனக்கு ரமணிச்சந்திரன் கேட்குதா என்று மெல்லமாய் குட்டுவார். வலிக்கவே வலிக்காது. அடுத்த நாள் அம்புலிமாமா ஒன்றைக் கொண்டுவந்து தருவார். விறகு வெட்டி தங்கக்கோடரி த...

ஈர்ப்பு அலைகள்.

  கடந்த சில நாட்களாக மொத்த உலகமும் பரபரக்கின்ற விடயம் இது. நூறு வருடங்களுக்கு முன்னாலே ஐன்ஸ்டீனால் உய்த்தறியப்பட்டிருந்த ஈர்ப்பு அலைகளை இப்போது அதி நவீன கருவிகள் மூலம் அவதானிக்க முடிந்திருக்கிறது. நாம் எல்லோருமே ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ஈர்ப்பு அலைகள்? வெண்முரசு நீளத்துக்குப் பாகம் பாகமாக விவரிக்கவேண்டியதை அம்புலிமாமா சைசுக்குள் சுருங்கச்சொல்ல முயல்கிறேன். ஈர்ப்பு அலைகளை விளக்குவதற்குமுன்னாலே சார்பு விதிகளைப்பற்றி மேலோட்டமாகப் பார்க்கவேண்டும். நீங்கள் 100km/h வேகத்தில் செல்லும் ஒரு ரயில் வண்டியினுள்ளே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னே உசைன் போல்ட் உட்கார்ந்திருக்கிறார். ரயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் ரயிலுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு ரயில் கண்ணாடிகளை மூடிவிட்டால் அதனை உணர்வது கடினம். முன்னே உட்கார்ந்திருக்கும் உசைன் போல்ட் 100km/h வேகத்திலே பயணம் செய்வதுபோலவும் உங்களுக்குத் தோன்றாது. ஏனெனில் நீங்கள் இருவருமே ரயிலுக்குள் இருப்பவர்கள். ரயிலின் சட்டத்தில் நீங்கள் இருவரும் நிலையாக இருக்கிறீர்கள். சீரான வேகத்தில் இயங்கு...

ஆதிரை

      ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “ நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை …” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “ அண்ணை வெளிக்கிடுங்கோ …” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “ என்னை விடு. நீ போ ” “ ஷெல்லடி கூடுதண்ண … வாங்க போவம் ” “ டேய் … நாயே … ஒருக்காச் சொன்னா கேக்க மாட்டியே …. நீ போ … நான் வரேல்ல ” அத்தார் சந்திராவின் கன்னங்களை வருடினான். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கோடுகளை வரைந்தன. “ குடும்பத்தில ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா … என்ர சுகதுக்கம் எல்லாத்திலயும் பக்கத்தில நிண்டவளை ஒரு அநாதையா விட்டிட்டு வரச்சொல்லுறியே …” அத்தார் சந்திராவின் தலையைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். “ என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே …” அவளுடைய கழுத்தில் தலையைச் காய்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின. மறுநாள் காலை , இயக்கத்தின் தமிழர் ‘ புனர்வாழ்வு ’ கழக...