“அழகியல் சார்ந்தும் அதன் அமைப்பு வடிவம் சார்ந்தும் நவீனத் தமிழ் இலக்கியப் பிரதிகளின் நீட்சியாகவே அனோஜன் பாலகிருஷ்ணனின் பிரதிகளைப் பார்க்கமுடிகிறது” என்ற பதிப்பாளர் குறிப்போடு ஆரம்பிக்கிறது “சதைகள்” சிறுகதைத்தொகுப்பு. மொத்தமாகப் பத்து சிறுகதைகள். அநேகமானவை சமூகக்கதைகள். சிலது பாலியலைப் பற்றிச் சொல்லுகின்றன. சில நம் சமூகத்தின் உள்ளீடாக புரையோடிப்போயிருக்கும் சாதியச்சிக்கல்களைப் பேசுகின்றன. சிலது புலம்பெயர்ந்தவர் வருகையினை எதிர்கொள்ளும் உள்ளூர்க்காரர்களின் உணர்வுகளைப்பேசுகிறது. சிலது காதல். சிலது முன்னைய காதல். ஆங்காங்கே இயல்பான அரசியல். இப்படிப் பத்துக்கதைகளும் சுற்றுகின்றன.