ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித் தரைக்குப் பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...
குருவியின் கண்ணுக்கு எய்த அர்ச்சுனனின் குறி போல உண்மையான பிரச்சினையை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள். "பாட பாட ராகம், மூட மூட ரோகம்" என்று பழமொழி கேட்டிருக்கிறேன், அதுபோல பாலியல்பு என்பதை இயல்பானதொன்றாக அல்லாமல் கலாச்சாரம், கற்பு, புனிதம், நல்ல பிள்ளைத்தனம் என்று மூடி மூடி வைக்க நாற்றமெடுக்கும் நிலைக்கு தான் நமது போய்க் கொண்டிருக்கிறது. 4 வயசிலேயே குட் டச், பாட் டச் சொல்லிக் கொடுக்கின்ற உலகில் 18 வயதிலும் முழுமையான தௌிவான அறிவு இல்லாமல் தடம் புரளுகின்ற பதின்ம வயதினரை கொண்ட சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் கலாச்சாரம் என்கிற பெயரில். மிகவும் தேவையான புனைவு.
ReplyDeleteசின்ன perfection: தேவகியின் பதில்கள் 2 hours ago என்று இருக்க, அதற்கு மேல் இருக்கும் வாகனின் கருத்துரைகள் 11 minutes ago என்றிருக்கின்றன.
அதை கவனிக்கவில்லை. Mockup செய்யும்போது மிஸ்ஸாகிவிட்டது :(
Delete"Nirabarathi" maathiri konru vidunkal?? athukkum meela kudukkanum... :D
ReplyDeleteகொல்லப்பட்டவர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருந்து எழுதுகிறார்கள் போல ........இன்றும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே ......
ReplyDelete