Skip to main content

சகுந்தலா கணநாதனின் உரையின் எழுத்து வடிவம்




என்னை “எப்போது தமிழிலே எழுதப்போகிறீர்கள்?” என்று இங்கு வந்திருக்கும் எஸ்.பி.எஸ் ரேணுகா துரைசிங்கம் ஒருமுறை கேட்டார். அப்போது ஜேகேயின் கொல்லைப்புறத்துக் காதலிகள் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படி எழுதவேண்டும் என்றேன். அதன்பிறகு தொடர்ச்சியாக அவருடைய எழுத்துகள் மீது காதல் கொண்டேன். 

William Shakespeare, George Bernard Shaw இருவரும் சமூகக்குறைபாடுகளை கேலிப்பேச்சு, அதாவது satire மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர். உதாரணமாக , Touchstone என்று ஒரு முட்டாள் செக்ஸ்பியரின் நாடகத்தில் அப்பப்போ தோன்றி மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் உதவினார் .

Bernard Shaw வின் Pygmalion நாடகத்தில் Eliza Doolittle ஒரு சாதாரண பூக்காரி. அவளின் நடை உடை பேச்சை அடியோடு மாத்தி , லண்டன் வாழ் மேட்டுக்குடி மக்களை திணற வைக்கிறார் Professor Henry Higgins. 

கந்தசாமியும் கலக்சியும் நாவலின் கதாசிரியர் ஜேகே இந்த satire ஐத்தான் கையாள்கிறார். அவரின் கதாநாயகன் எப்போதும் அரையில் சாரம் கட்டி தோளில் துவாய்துண்டு போட்டிருப்பார். அதிகாலையில் வளவுக்குப்போய் சுருட்டு புகைப்பார். “அய்யய்யோ உலகம் அழியப்போகிது” எண்டு மக்கள் அலறியடித்து திண்டாடியபோதும் தில்லுமுல்லு பண்ணற சுமந்திரன், “ஏய், மறந்திடாமல்துவாயைஎடுத்துவா,” என்கிறார் . அதன் ரகசியம்தான் என்ன ? அதுதான்அவர்கள் கலக்ஸியில் போறதுக்கு magic carpet போலும். 

அதேநேரத்தில் அச்சன்குளத்து மைதிலி தின்னவேலி கடையில் காலை உணவு சாப்பிடுறாள். அவள் மனசில் பல குழப்பங்கள். ஆனா பச்சை மிளகாயை கடித்த மாத்திரத்தில் அவளுக்கு ஞானோதயம் பிறக்கவும், உடனே தன் சிநேகிதருடன் முகநூலில் பகிர்ந்துகொள்ள நினைக்கவும், எங்கள் அருமையான பூமி வெடித்து பொடிபொடியாய் சிதறுகிறது.

கந்தசாமியும் சுமந்திரனும் போடுகிற கோமாளி விடயங்களை கந்தர்மடத்தில் நாங்கள் பார்த்து வயிறுகுலுங்க சிரித்திட்டோம். அடுத்து , நாவலாசிரியர் எங்களுக்கு பால்மண்டலத்தில் பிரயாணம் செய்ய வாய்ப்பளிக்கிறார். பயணம் கொழும்பு யாழ் A9 பாதையிலும்பார்க்க, ரொம்ப ஸ்மூத் ஆக, ஆனால் speed of thought வேகத்தில்விரைகிறது.

கலக்ஸியிலும் மிஹிந்தர்கள் பண்ணும் அட்டூழியங்களை ஜீரணிக்க முடியாது தவிக்கிறார் கந்தசாமி. அதுகள் இயற்றிய கவிதைகள் கேட்டு கந்தசாமிக்கு வாந்தி வருது. 

“பயப்படாதே. நாங்கள் பயணிக்கும் எதிர்காலத்துக்குள் மிஹிந்தர் வரமாட்டாதுகள்," என்கிறார் சுமந்திரன். “ஏன் எனில் அவர்கள் எதிர்காலத்தின் விளைவுகளை துளியளவும் பொருட்படுத்துவதில்லை." இதைக்கேட்டு கொஞ்சம் ஆறுதல் அடைந்தாலும், கந்தசாமி சாரத்தையும் துவாயையும் கெட்டியாக பிடிக்கிறார்.

அங்கேயும் மெண்டல் சுமந்திரன் கந்தசாமியை விட்டபாடில்லை. இவண்டை தொல்லையா அல்லது Mrs செல்வராணி கணவருக்கு கொடுத்த கருக்கு மட்டை அடியா மோசம் என்று எனக்கு ஒரு டவுட். 

இதிலே வரும் விடுப்புமீன் பற்றிய தகவலை பிரகாராதிரியிலே வாசித்து எனக்கு அன்று ராத்திரி துண்டா நித்திரை வரல்லே. ஒருவர் மூளைக்குள் சென்று அவர் நினைக்கும் அந்தரங்களை கண்டுபிடிச்சு எவ்வளவு சண்டைகளை விளைவிக்கிறது இந்த விடுப்புமீன். இந்தக்கதையில் இருவர் தத்தம் மனசில் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்ட, இனக்கலவரத்தில் முடிந்தது என்று வாசித்தேன். இந்த விடுப்புமீன்தான் அநேக அபத்தங்களின் மூல காரணமோ?

இந்த நாவலின் பல இடங்களில் ஏதோ பதிலை தேடுவதும் பின்னர் அதற்கேற்ற கேள்வியை தெரியாமல் மிஹிந்தர்களும் சபரிமக்களும் அலைகின்றனர். “காலமே ஒரு அபத்தம். இந்தப்பிரபஞ்சம் ஒரு அபத்தம் ..." என்கிறார் சுமந்திரன். "எல்லாத்தையும் குழப்புகின்ற அந்தக் கேள்வியை மட்டும் ..." மேலே அவர் பேச்சை கேளாமல் நான் நாவலை மூடி வைத்தேன்.

அன்று என் சிந்தனை எல்லாம் 2016 American elections மேல் தாவியது. அதை விட மாபெரும் அபத்தம் வேறென்ன? பட்டம் பதவிக்காக என்னவெல்லாம் இருதரப்பினரும் கையாளுகிறார்கள்? 

அடுத்த நாட்காலை மீண்டும் கந்தசாமியும் கலக்ஸியும் நாவலை திறந்தேன். எங்கே அந்த அச்சன் குளத்து பச்சைமிளகாய் கடித்த மைதிலி? அவளிடம் கேள்வி பதில் தெரிந்து கொள்ளலாம். 

அந்த நேரம் பார்த்து CNN சனலில் Donald Trump நேர்காணல் கொடுத்தார். “I am the 45th American ப்ரெசிடெண்ட் ” என்று பெலத்த குரலில் கத்திறார். 

அங்கே யாரோ ஒருத்தன் மைக்கை பிடித்து, “Ok, but what was the relevant question for your answer?”

Donald Trump திணறுறார்.

அப்போ அந்தப் பையன், “நீர் எத்தனையாவது அமெரிக்கன் பிரெசிடென்ட்?” என்று கேட்கிறான். இந்த கேள்வியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும்.”

ப்ரெசிடெண்ட் Elect முகம் சிவந்து போகிறது .

எனக்கு ரொம்பநாளா ஒரு ஆசை. சிரிச்சுக்கொண்டே போகணும் எண்டு. ஆனா இந்த நாவலை வாசித்த பின்னர் நான் அவசரப்படவேண்டாம் என்று தோன்றிச்சு . மீண்டும் மீண்டும் ஜேகேயின் படைப்புகளை வாசிக்க சந்தர்ப்பம் கிட்டும் என்ற நம்பிக்கையில், மேலே போகிறதை கொஞ்சம் போஸ்ட்போன் பண்ணியுள்ளேன். 

அவரின் எழுத்துப்பணி மேன்மேலும் உயரட்டும் என்று நல்லூர்கந்தனை வேண்டுறேன். 

இந்த நாவல் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.




சகுந்தலா கணநாதன்

ஆங்கில நாவலாசிரியையான திருமதி சகுந்தலா கணநாதன் "White Flowers Of Yesterday" என்கின்ற நாவலையும், "Bovine Friends and Lavender", "Jar 39" என்கின்ற சிறுகதைத் தொகுப்புகளையும்  இதுவரை எழுதியுள்ளார். 
http://www.goodreads.com/author/show/3115541.Sakuntala_Gananathan


Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...