Skip to main content

Posts

Showing posts from February, 2017

இக்கரைகளும் பச்சை 2 – கொண்டாட்டங்களின் நகரம்

Credit : Shane Bell மெல்பேர்னில் எனக்கு மிகப்பிடித்த விடயம், இந்நகர மையத்தின் இரவுகள்தான். இதன் இரவுகள் எப்போதுமே பன்முகப்பட்ட கலை அடையாளங்களால் நிரம்பியிருக்கும். நகரம் முழுதும் வரலாற்றின் பலவிதமான கலைவடிவங்களுக்காக மையங்களையும் நிலையங்களையும் திறந்துவைத்து உலகம் யாவிலுமிருந்து கலைஞர்களை வரவழைத்து அவர்களது திறமைகளை வருடம் முழுதும் காட்சிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். எம்முடைய குட்சொட் பார்ட்டிகளையும், அரங்கேற்றங்களையும், வெறுப்பையும் சோர்வையும் உமிழும் தமிழ் விழாக்களையும் வாராவாரம் வெளியாகும் சிங்கம்3 வகையறாக்களையும் சற்றுப் புறந்தள்ளி, வெளியே எட்டிப்பார்த்தோமானால் மெல்பேர்னின் குளிர் இரவு அவ்வளவு அழகாகத் தெரியும்.

ஜல்லிக்கட்டு - கடிதம்

ஜேகே, அதிக பணிச்சுமையில் இருப்பது போல் தெரிகிறது, அப்படியென்றால் இந்த ஈமெயிலுக்கு பதிலெழுத வேண்டாம். கீழே நீங்கள் எழுதியது: "ஒரு இனம் அடிமைப்பட்டுக் கிடந்தால் உடனே "புறப்படு, பொங்கியெழு, புரட்சி" என்று கோபாவேசத்தோடு முகநூல் எனும் பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில் போடுவார்கள். ...............ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையைப் போடவும், ரோட்டிலே சிதறிக்கிடக்கும் பழைய குப்பைகளை எல்லோரும் மறந்துவிடுவார்கள். .............................கேட்டால் சமூக வலைத்தளம் என்பார்கள். குப்பை தொட்டிகளிலேயே பூமிக்கிரகத்தின் அத்தனை புரட்சிகளும் எழுச்சியும் வீழ்ச்சியும் இடம்பெறுகின்றன." இப்படியெழுதிட்டு, தமிழ்நாட்டில் நடந்த தன்னெழுச்சி போராட்டத்தை பற்றி (ஆதரித்தோ/எதிர்த்தோ) எதுவும் சொல்லாமல் விட்டது ஏன்? கேட்கனும் நினைச்சேன் கேட்டுவிட்டேன். மோகன்

புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்

சொல்வனம் இணையத்தில் வெளிவந்துள்ள அ. முத்துலிங்கம் சிறப்பிதழில் நான் எழுதிய "புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்" என்ற கட்டுரை வெளியாகி உள்ளது. //தமிழில் ஒரு உதாரணத்தை எடுத்துப்பார்க்கலாம். சயந்தனின் ஆதிரை அண்மையில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நாவல். நாற்பது ஆண்டுகளுக்குமேலான ஈழத்துப்போராட்ட வாழ்க்கையை அழகியலோடு சொல்லிய நாவல் ஆதிரை. அதுவே ஆசிரியர் ஏற்படுத்துகின்ற நாவலின் மையப்புள்ளியுமாகும். ஆனால் ஆசிரியரின் மரணம் அந்நாவலின் மற்றமைகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும். மலையகத்தமிழரையும் உள்வாங்குகின்ற அந்த நாவலில் முஸ்லிம்கள் என்பவர்கள் மற்றமையாகவே அதில் தெரிவர். அதன் அரசியல் நாவலாசிரியரின் சொந்த அரசியலைப்போலவே எல்லா விமர்சனங்களையும் எல்லாப்பாத்திரங்களினூடு கடமைக்குப் பதிவுசெய்துவிட்டு தமிழ்த்தேசியத்தின் மீதும் புலிகள்மீதும் ஒருவித உறவு கலந்த கரிசனையை வலிந்து ஏற்படுத்தும். இது சயந்தனை விலத்தி ஆதிரையை அணுகும்போது சாத்தியப்படும் மாற்று மையங்கள்.// மேலும் வாசிக்க.. http://solvanam.com/?p=48404

கிடுகுவேலி விசாகன் - அஞ்சலி

இன்று காலை இன்னுமொரு மரணம் எதிரே வந்தது.  நண்பர் விசாகன் சமூக வலைத்தளங்களினூடு அறிமுகமான ஒரு நண்பர். நேரிலும் சந்தித்திருப்போமே தெரியாது. சந்தித்திருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்திருக்கமாட்டேன். விசாகன் என்றால் அவருடைய என்றைக்கும் மாறாத, சிரித்த முக, புரபைல் பிக்சரும் கிடுகுவேலியும் அவர் இடும் பதிவுகளும்தான் ஞாபகம் வரும். சின்னமணியின் வில்லிசையையும் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியையும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டையும் கம்பன் விழாக்களையும் நானும் அவரும் வெவ்வேறு மண் கும்பிகளில் இருந்து ரசித்திருக்கிறோம். கோயில் திருவிழாக்கடைகளில் நாங்கள் அருகருகே நின்று கச்சானோ, ஜூஸ் பக்கற்றோ வாங்கியுமிருக்கலாம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் “நிலாக்காயும் நேரம்” பாடலை அவரவர் வீட்டிலிருந்து கேட்டிருக்கிறோம். நான் வடக்குவீதியில் பார்த்துரசித்த ஹால்ப்சாரியை அவர் தேரடியில் கண்ணுற்றிருக்கலாம். என் கொல்லைப்புறத்துக் காதலிகள் அவருக்கும் கொல்லைப்புறத்துக் காதலிகள். அருண்மொழிவர்மனுக்கும் காதலிகள். பாலாவுக்கும் காதலிகள். சயந்தனுக்கும் அதே. நிலாவை அவரவர் முற்றங்களிலிருந்தும் வியந்து பார்த்திருக்கிறோம். ஒவ்வ...

இக்கரைகளும் பச்சை 1 – பருப்புக்கறி வாங்கிய பெண்

மெல்பேர்னின் புறநகர்ப்பகுதியான எப்பிங்கில் இருக்கும் “தமிழ் பலசரக்குக் கடை” ஒன்றுக்கு “மட்டன் ரோல்ஸ்” வாங்கச் சென்றிருந்தேன். மட்டன் ரோல்ஸ் தாச்சியில் பொரிந்துகொண்டிருந்ததால் கடைக்காரர் என்னைச் சற்றுநேரம் காத்திருக்கும்படி கூறினார். பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றால் அந்தப்பத்து நிமிடங்களுக்குள் நான் கடையை இரண்டுதடவை சுற்றிபார்க்கவேண்டிவரும், ஆங்காங்கே சில பொருட்களை எடுக்கலாம், இரண்டு ரோல்சுக்கு வந்தவன் இருபது டொலர்களுக்கு சாமான்கள் வாங்குவான் என்று கடைக்காரர் எதிர்பார்த்திருக்கக்கூடும். நான் உள்ளே சுற்றாமல் வாசலிலேயே நின்று விடுப்புப்பார்க்க ஆரம்பித்தேன்.