எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அதுபோல தலைவனை நம் சங்க இலக்கியத் தலைவியும் ஏற்றுக்கொள்கிறாள். நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. நிலம் என்பது இங்கே மருதத்தை குறிப்பதாம்.
நீர் ஒரு நிலைப்பட்டதல்ல. இருக்குமிடத்தோடு அது தன் குணத்தையும் மாற்றிக்கொள்ளும். பனியாய் உறைந்து மலை உச்சியில் கிடக்கையில் அழகாய் அது பார்ப்பவரை ஈர்த்துக்கொள்ளும். நெருங்கிப்போனால் கணத்தில் நம்மையும் அது உறைய வைத்துவிடும். சரிவும் பொழிவும் பனியின் இயல்புகளாம். நீர் வானில் முகிலாய்த் திரண்டு நிலத்தின் பொறுமையையும் சோதிக்கும். அழும். கெஞ்சும். நிலத்தை அடைவதற்காக மழையாகவோ, ஆறாகவோ எப்படியோ அது வந்துசேர்ந்துவிடும்.
நீரின் கோபம் சமயத்தில் காரணமேயில்லாதது. தன்னைத்தாங்கும் நிலம்மீதே அது தன் கோபத்தை வெள்ளமாகவும் புயல்மழையாகவும் காட்டும். நிலம் பாவம். பொறுமையாய்க் காத்திருக்கும். நீர் அதனைத்தேடி வந்து கலக்கும்போது, உயிர்களெல்லாம் நிலத்தினின்று சிலிர்த்து எழும். ஆனால் அவற்றை ரசிக்கக்கூட மாட்டாமல் நீர் மீண்டும் கடலுக்கோ மலையுச்சிக்கோ சென்றுவிடும். திமிர். ஆணவம். நீருக்கு நிலம் ஒரு பொருட்டே இல்லை. அதற்கு நிலம் என்பது எப்போதுமே இரண்டாம் பட்சம்தான். தன் இச்சைக்கு அதனிடம் இணைந்துவிட்டு பின் அதுபாட்டுக்குப் பறந்துவிடும். பரந்து விரிந்த வானத்துக்கு தான் சொந்தக்காரன் என்ற இறுமாப்பு.
நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு.
நீருக்கு “வருண்” என்றும் ஒரு பெயர் உண்டு.
கறந்தபால் கன்னலொடு கலந்த நெய் என்றும் இதைச் சொல்லலாம். அல்லது,
காற்று வெளியிடை என்றும்.
I ask more discussion about katru veliyidai.
ReplyDelete
ReplyDeleteபடத்தின் தலைப்பை பார்த்த போதே.......படம் ஒரு கவிதையாக தான் இருக்கும் என்று புரிந்து விட்டது.அருமை
இதைப்போலவே எனை நோக்கி பாயும் தோட்டா வையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். வந்த பாடில்லை
குறி தவறி விட்டது. இவ்வளவும் இதற்காக தானே
தொலைதூரம் சென்றாலும்...... தொடுவானம் என்றாலும் நீ.......