Skip to main content

Posts

Showing posts from May, 2017

கள்ள மௌனம்

அலிஸ் மன்ரோவை ஓரிரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மன்ரோவின் சிறுகதைகளில் இனம்புரியாத ஒரு தனிமை சூழுந்திருக்கும். வன்கூவரின் குளிர் அதற்குக்காரணமாக இருக்கலாம். குளிர் மனிதர்களை ஒடுக்குகிறது. தனிமைப்படுத்துகிறது. சக மனிதருக்கு கைலாகு கொடுக்கக்கூட அது விடுவதில்லை. "பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப் பகலோரு யுகமாக் கழித்தாளே" என்று அசோகவனத்துச் சீதையைப்பற்றி அருணாச்சலக் கவிராயர் குறிப்பிடுவார். நம் சங்கக்கவிகளை வன்கூவரின் பனிக்காலத்தில் கொண்டுபோய் வசிக்கவிட்டிருந்தால் நமக்குப் புதிதாக ஒரு நிலம் கிடைத்திருக்கும். காதலைப்பற்றி மன்ரோவின் ஒரு பாத்திரம் சொன்ன வார்த்தைகள் இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. பனியோடு அவை மிகவும் பொருந்தி வருகின்றன. “love is not kind or honest and does not contribute to happiness in any reliable way. "

வட்டக்கச்சி மகா வித்தியாலயம்

காலை எழுந்தபோது மின்னஞ்சலில் ஒரு மகிழ்ச்சிதரும் தகவல் வந்திருந்தது.  “வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழா மலருக்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றவர்களது புகைப்படங்கள் தேவைப்படுவதால் வெகுவிரைவில் அவற்றைத் தந்துதவி ஆவண செய்யவும்” லிஸ்டிலே என்னுடைய பெயரும் இருந்தது. நான் ஓ.எல் எடுத்தது தொண்ணூற்றாறாம் ஆண்டு. பரீட்சை இறுதித்தினத்திலிருந்து இன்றைக்கு இருபத்தொரு ஆண்டுகள் கழிந்து எனக்கும் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முதல் தொடர்பு இது. பதின்மக்காதலிகளில் ஒருத்தி, ‘எப்படி இருக்கிறீங்கள் குமரன்?’ என்று மெசேஜ் அனுப்புவதுபோல. மகா வித்தியாலயத்தில் படித்த காலம் என்பது மிகக்கொஞ்சம்தான். ஆனாலும் அவற்றை மீட்டிப்பார்க்கையில் கால மீளிருவாக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எத்தனைதடவை எழுதினாலும் காரியமில்லை.

தமிழ் ஊக்குவிக்குப்போட்டிகள்

அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் 'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2017' இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப்போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்துவந்துள்ளேன். நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் இவை. அவுஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தேசியமட்டப் போட்டிகளிலும் தோற்றுவார்கள். சீரிய ஒழுங்கோடும் மிக நீண்ட தயார்படுத்தல்களோடும் நடத்தப்படும் போட்டி இது.  போட்டித்தினமன்று என் மனம் எப்போதுமே ஒரு கொண்டாட்ட நிலையை அடைவதுண்டு. அந்தச் சூழலை அணு அணுவாக ரசிக்கலாம். அலிஸ் அதிசய உலகத்துக்குள் நுழைந்ததுபோலவே சிறுவர்கள் போட்டி மண்டபத்துக்குள் நுழைவார்கள். பின்னேயே பயங்கரப் பதட்டத்துடன் பெற்றோர்கள். அப்பாமார்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அம்மாக்கள்தான் கடைசிக்கணத்திலும் அக்கம்பக்கம் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கடியில் மீண்டுமொருமுறை குழந்தையோடு ஒத்திகை பார்ப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால் நம் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு ஓர்மம் வந்துவிடுகிறது. அம்மாக்...

மடுல்கிரிய

வார இறுதியில் மெல்பேர்னில் இடம்பெற்ற எழுத்தாளர் விழாவைப் பார்க்கச்சென்றிருந்தேன். விழாவுக்கு மடுல்கிரிய விஜேரத்ன வந்திருந்தார். மடுல்கிரிய என்ற பெயர் ஈழத்து வாசகர்களுக்கு மிகப் பரிச்சயமானது. அவர் ஒரு மொழியியல் நிபுணர். ஏராளமான தமிழ் நூல்களை சிங்களத்துக்கும், சிங்கள நூல்களை தமிழுக்கும் மொழிபெயர்த்தவர். சரளமாகத் தமிழில் உரையாடக்கூடியவர். அவருடைய பேச்சைக்கேட்பதற்காகவே ஏழு கடல், ஏழு மலை தாண்டி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். 

"ஜெயக்குமரன்" என்கின்ற...

என் அக்காமார்களுக்கு அம்மா தனக்குப் பிடித்தமாதிரியே பெயர் வைத்துக்கொண்டார். அறுபதுகளின் இறுதியில் வீரகேசரியில் ரஜினி என்றொரு எழுத்தாளர் தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரின் பெயரையே எங்கள் மூத்த அக்காவுக்கும் வைத்ததாக அம்மா சொல்வார். அந்த எழுத்தாளர் ரஜினி இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் நாவலை யாரேனும் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்றும் தெரியாது. ஆனால் எப்படியோ அக்காவின் பெயரில் ஏறிக்குந்திவிட்டார். இப்படி எழுத்தாளர்களின், இலக்கியப்பாத்திரங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. லாகிரியின் “The Namesake” அதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான். “லாகிரி”யே ஒரு அழகான பெயர்தான். பொன்னியின்செல்வனிலிருந்தும் பலர் பெயர் எடுப்பதுண்டு. வர்மன், அருண்மொழி, குந்தவை, குந்தவி, நந்தினி, மணிமேகலை என்று பல பெயர்களைக் கவனித்திருக்கிறேன். இரண்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தம் பெயரை கதைப்பாத்திரங்களிலிருந்து வைத்திருக்கிறார்கள். சுஜாதாவின் வசந்த் ஒன்று. தாஸ்தாவஸ்கியின் மிஷ்கின் இன்னொன்று.