அளவற்ற மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இந்த அறிவிப்பினைச் செய்கிறோம்.
மஹாகவி பற்றிய நிகழ்வினைச் செய்தல்வேண்டும் என்பது நமது நீண்டநாளைய கனா. திரு முத்துகிருஷ்ணனின் வருகை நம்மை அதற்காக மீண்டுமொருமுறை ஒருங்கிணைத்திருக்கிறது.
“இன்னவைதாம் கவியெழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர்திருப்பச்
சொல்லாதீர்.
மின்னல் முகில் சோலை கடல்
தென்றலினை மறவுங்கள் – மீந்திருக்கும்
இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்ச்சி
என்பவற்றைப் பாடுங்கள்”
என்ற கவிஞனின் படைப்புகளோடு வரும் சனி மாலைப்பொழுதைக் களித்து மகிழ இருக்கிறோம்.
வந்து, கேட்டு, பகிர்ந்து, உயிர்த்து, முகிழ்த்து, நினைந்து மகிழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
Comments
Post a Comment