Skip to main content

மழையின் கதை



நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலை ஒலிப்புத்தகத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி இந்த நாவல் என்னைத் தெரிவு செய்தது? முதல் வரியினூடாகத்தான்.

“We are our stories. We tell them to stay alive or keep alive those who only live now in the telling. In Faha, County Clare, everyone is a long story”

இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ரூத். தந்தை ஒரு கவிஞர். தாத்தா ஒரு போதகர். தாத்தா இறந்துபோய்விட்டார். தந்தை எங்கென்று தெரியவில்லை. அவரும் இறந்துபோயிருக்கலாம். மேல்மாடி அறை ஒன்று. அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் தகப்பன் அரைகுறையாகத் தானே செய்துகொடுத்த படகுபோன்ற ஒரு கட்டில்தான் ரூத்தின் உலகம். சுற்றிவர புத்தகக் குவியல்கள். மொத்தமாக 3958 புத்தகங்கள். தனிமையில் வாடும் ரூத்துக்குத் தன் தந்தையைத் தேடிக்கண்டறியவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விளைவு கதைகளினூடாக அவள் தன் தந்தையைக் காண முனைகிறாள்.

“Nobody now living was there. That’s the thing. But a lot of them are in the pages of books. My grandfather is inside the skinny smoke copy of “All quiet on the western front” , in the stern stiff-feeling pages of “The Guns of August”, books my father read to see if he could find his father”

கதைகளினூடாக மனிதர்களைத் தேடுவது என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒன்றுதான். என் அப்பாவுக்கு நான்கு வயது இருக்கையிலேயே அவரின் அப்பா இறந்துவிட்டார். அப்பாவுக்குத் தன் தந்தை பற்றிய ஞாபகங்கள் பெரிதாக ஏதும் இல்லை. எல்லாமே அவருடைய தாயார் சொன்ன பதிவுகள்தான். இருந்தும் இப்போதும்கூட “தாத்தாவைப்பற்றிச் சொல்லுங்களேன்” என்று கேட்டால் அப்பா மணிக்கணக்கில் சொல்லுவார். தாத்தா எப்படி கொழும்புக் கடை ஒன்றில் வேலை செய்தார் என்றும், எப்படிப் பங்காளிகள் அவரை ஏமாற்றினார்கள் என்றும் விளக்குவார். ஒருநாள் ஒழுங்கை ஒன்றினூடாக நடந்துவருகையில் திடீரென்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்ததுதான். கதை முடிந்துவிட்டது. சிலர் சூனியம் என்கிறார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் நேர்ந்துவிட்ட தேசிக்காய்ப் பாதிகளும் விலங்கு இரத்தமும் கிடந்ததாகக் கூறுகிறார்கள். அப்பா விளக்கும்போது அதிசயமாக இருக்கும். இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். Nobody now living was there. That’s the thing! எனக்கு என் தாத்தா பற்றிய ஒரு பிம்பம் இங்கே கிடைக்கிறது. அவ்வளவுதான்.

யோசித்துப்பாருங்கள். நாற்பதுகளில் நயினாதீவு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். கொழும்பு வர்த்தகரின் கதை ஒன்று. படகில் பயணம் செய்து, அம்மாள் கோயில் பாலத்தில் இறங்கி, மூன்றாம் வட்டாரத்தில் உள்ள வீட்டுக்குப் போகும்பாதையில் மரணம் நிகழ்கிறது.

அங்கிருந்து பின்னோக்கி தாத்தாவின் நீண்ட கதை ஒன்று விரிகிறதல்லவா?

“In Faha, County Clare, everyone is a long story”

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .