வரவேற்புரையும் கவிதை வாசிப்பும்
"சங்ககாலத்துக்குப் பின்னர் இலக்கியங்கள் அதிகாரத்தின் வசம் சிக்கிவிட்டன, அல்லது இலக்கியவாதிகள் அதிகாரபீடத்தைத் தாமே கட்டியமைத்துக்கொண்டனர்"
சேரன் உருத்திரமூர்த்தி உரை
"மஹாகவியைத் தீவிரமாக, கிளர்ச்சியுடன் ஆழமாக அணுக வேண்டுமானால் அவருடைய பரவலாக ஜனவசியமாக அறியப்பட்ட கவிதைகளைத் தாண்டி “சாதாரண மனிதனின் சரித்திரம்” போன்ற காவியங்களின் உள்ளே போய்த் தேடவேண்டும்.”
கலாதேவி பாலசண்முகன் உரை
“மஹாகவிகள் காலத்திரையின் துளையூடாக முன்னும் பின்னும் பார்க்க வல்லவர்கள்”
கேதா உரை
"உயர்வானவர்கள் என்று கருதப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்துகொண்டு வாழலாம் என்று புதிய இளைஞர்கள் நினைக்கின்றபோது ஏற்கனவே உயர்மட்டத்தில் அமர்ந்துகொண்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் குறுக்கே வந்து எப்போதும் அதைத் தடுக்கிறார்கள் என்கிறது கண்மணியாள் காதை "
அ. முத்துக்கிருஷ்ணன் உரை
"பெருத்த முன்னெடுப்புடன் இடம்பெற்றுவரும் உலகலாவிய திணை அழிப்புகளை, அதற்குப்பின்னரான அதிகாரக் கட்டமைப்புகளை இலக்கியங்கள் வெளிப்படுத்தவேண்டும். தமிழகத்தின் நெய்தல்திணை என்பது பெரும் கம்பனிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. நம் கண்முன்னே இடம்பெறும் விடயங்களை உள்ளது உள்ளதுபோலப் பேசுவதற்குத் தயங்குகிறோம். பழிவாங்கப்படுவோமோ என்ற பயத்தில் பேசாமல் கடந்துவிடுகிறோம்."
நன்றி
Thanks for introducing our poet to us. Good job.
ReplyDelete