செய்யும் தொழில் எனக்குப் பிடித்தமாதிரி அமையவேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருப்பதுண்டு. கடந்த பதினைந்து வருடங்களாக அப்படியே அது அமைந்தும்விட்டமை வெறும் தற்செயல் என்று கருத இடமில்லை. நடப்பு வேலையினுடைய நேர்முகத்தேர்வின்போது நிர்வாக இயக்குனருக்குக் கூறியது ஞாபகம் இருக்கிறது. “Programming is my passion. So long as you let me do what I love to do, I will deliver what you need, not what you ask, but what you need” இந்தப் புள்ளியில் நான் எப்போதுமே கவனமாக இருப்பதுண்டு. அலுலகத்தின் அன்றாட சில்லறைப்பிரச்சனைகள் என்னை அண்ட ஒருபோதும் விட்டதில்லை. அவசரக்கோலத்தில் அள்ளித்தெளிக்கும் டிசைன்களையோ தீர்வுகளையோ கொடுப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னை நாடி வராதபோதும் தேடிச்சென்று தடை போடுவதுண்டு. இந்தவருடம் நான் என்னுடைய சக புரோகிராமர்களோடு அதிகம் செலவிடவேண்டிவந்தது. இரண்டு விடயங்களை அவர்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தேன். முதலாவது “Telling a story via programming”. இரண்டாவது, “Slow Programming”. இவ்விரண்டு விடயங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிக்கொ...