Skip to main content

படலை 2017

செய்யும் தொழில் எனக்குப் பிடித்தமாதிரி அமையவேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருப்பதுண்டு. கடந்த பதினைந்து வருடங்களாக அப்படியே அது அமைந்தும்விட்டமை வெறும் தற்செயல் என்று கருத இடமில்லை. நடப்பு வேலையினுடைய நேர்முகத்தேர்வின்போது நிர்வாக இயக்குனருக்குக் கூறியது ஞாபகம் இருக்கிறது.
“Programming is my passion. So long as you let me do what I love to do, I will deliver what you need, not what you ask, but what you need”
இந்தப் புள்ளியில் நான் எப்போதுமே கவனமாக இருப்பதுண்டு. அலுலகத்தின் அன்றாட சில்லறைப்பிரச்சனைகள் என்னை அண்ட ஒருபோதும் விட்டதில்லை. அவசரக்கோலத்தில் அள்ளித்தெளிக்கும் டிசைன்களையோ தீர்வுகளையோ கொடுப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னை நாடி வராதபோதும் தேடிச்சென்று தடை போடுவதுண்டு.

இந்தவருடம் நான் என்னுடைய சக புரோகிராமர்களோடு அதிகம் செலவிடவேண்டிவந்தது. இரண்டு விடயங்களை அவர்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தேன். முதலாவது “Telling a story via programming”. இரண்டாவது, “Slow Programming”. இவ்விரண்டு விடயங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

யோசித்துப்பார்த்தால் இந்த வருடம் எழுத்திலும் “Slow Writing” என்பதைக் கடைப்பிடித்திருக்கிறேன். இந்தப்புள்ளிக்கு வர கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. “நகுலனின் இரவு” எழுதிமுடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடித்தது. விளமீன் அப்படியே. விரைவிலேயே அவற்றை எழுதி முடித்திருக்கலாம். சிறுகதையை எழுதிமுடித்தால் அத்தோடு அது கொடுத்த அனுபவமும் முடிந்துவிடுகிறது. அதற்காகவே அவற்றை முடிக்காமல் மெதுவாக எழுதுகிறேனோ தெரியவில்லை.

அடுத்தவருடம் அட்டை நத்தையாகலாம்.

இவ்வருடம் படலையில் எழுதியது.

சிறுகதைகள்

  1. சந்திரா என்றொருத்தி இருந்தாள் (ஆக்காட்டி)
  2. விளமீன் (புதிய சொல்)
  3. நகுலனின் இரவு

கட்டுரைகள்

  1. வழிகாட்டிகளைத் தொலைத்தல் (உவங்கள்)
  2. புனைவுக்கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும் (சொல்வனம்)
  3. வெற்றுமுரசு (நடு)
  4. ஜல்லிக்கட்டு
  5. ஊக்கி
  6. கொட்டக்கொட்ட விழித்திருத்தல்
  7. ஜெயக்குமரன் என்கின்ற
  8. கள்ள மௌனம்
  9. பால் சமத்துவத் திருமணங்கள்

பதிவுகள்

  1. ஸ்டூடியோமாமா
  2. மடுல்கிரிய
  3. வட்டக்கச்சி மகாவித்தியாலயம்
  4. நாம் தமிழர்
  5. பாழ்மனம்
  6. ஓய்வு
  7. மாலைப்பொழுதிலொரு மேடை
  8. மச்சாங்
  9. எம்.ஜி.சுரேஷ்
  10. ஆனந்தம் அண்ணை

இக்கரைகளும் பச்சை

  1. பருப்புக்கறி வாங்கிய பெண்
  2. பஹன
  3. மினோஸா
  4. கொண்டாட்டங்களின் நகரம்
  5. நாயகிகள்
  6. அங்காடிப்பெண்

நூல்/திரைப்பட அனுபவங்கள்

  1. மழையின் கதை
  2. என் மக்களின் கனவு
  3. சொல்லவேண்டிய கதைகள்
  4. காற்று வெளியிடை

Comments

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .