Skip to main content

Posts

Showing posts from May, 2018

யாரு நீங்க?

கண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா?  தம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.

மனிசர் கொலையுண்டார்

“கல்லொன்று வீழ்ந்து  கழுத்தொன்று வெட்டுண்டு  பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு  சில்லென்று செந்நீர் தெறிந்து  நிலம் சிவந்து  மல் லொன்று நேர்ந்து  மனிசர் கொலையுண்டார்”  — தேரும் திங்களும், மஹாகவி உருத்திரமூர்த்தி  மே மாதம் என்பதே அயர்ச்சியும் கழிவிரக்கமும் இயலாமையும் நிரம்பியிருக்கும் மாதம்தான். எதை வாசித்தாலும் எதை எழுதினாலும் எதை நினைந்தாலும் அவை எல்லாம் வெறும் அபத்தத்தின் மறுவடிவங்கள் என்ற எண்ணமே இக்காலத்தில் மேலோங்குகிறது. ‘மனிசர் கொலையுண்டார்’ என்ற வார்த்தைகள் அர்த்தப்படும் நாள்கள் இவை. மஹாகவி சொல்லும் அந்த ‘கொலையுண்ட மனுசர்’ யார் என்று யோசிக்கிறேன். வீழ்ந்துபட்டவர்களை அது குறிக்கவில்லை. மாறாக வீழ்த்தியவர்களையும் மனுசர் வீழும்போது பார்த்துக்கொண்டு வெறும்வாய் மெல்லுபவர்களையும்தான் அது குறிக்கிறது. அதிகாரத்தைவிட அதிகாரத்துக்கு எதிராக வாளாவிருப்போர்தான் ஆபத்தானவர்கள். அவர்களே அதிகாரத்துக்கான உரத்தைக்கொடுப்பவர்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் அதிகாரம் மேலும் கிளை பரப்பி விரிகிறது. அவர்கள் வேறு யாருமிலர். நானும் எ...

பூமியை அழகாக்குபவர்கள்

இன்றைக்கு மெல்பேர்ன் அநியாயத்துக்குக் குளிர்ந்தது. வழமையாக ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் நடுச்சாமம் மூன்று மணிக்கே அடித்ததுபோல உணர்ந்தேன். குறண்டிக்கொண்டு தூங்கியதில் ஐந்தாவது தடவை ஸ்னூஸ் பண்ணும்போது நேரம் ஆறே கால் ஆகிவிட்டிருந்தது. அரக்கப்பறக்க எழுந்து, கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு தேநீர் ஊற்றலாம் என்று குசினிக்குப்போனால், தேநீர் பைகள் தீர்ந்திருந்தன. மச்சான் ஒருவர் ஊரிலிருந்து வரும்போது கொண்டுவந்திருந்த தேயிலைத்தூள் பக்கற் ஞாபகம் வர, வடியையும் தேடி எடுத்து, ஒருமாதிரித் தட்டித்தடவி தேநீரையும் ஊற்றி முடிக்க நேரம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் எதையாவது வாசிக்கலாம் என்று உட்கார்ந்தால் மனம் ஒருபட்ட நிலையில் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. மனைவியும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிடுவார். வீட்டில் இருந்தால் வேலைக்காகாது என்று ஒன்பது மணிக்கு அருகிலிருக்கும் கஃபே ஒன்றுக்கு வந்தேன். ஒரு பெரிய கப்புசீனோவை ஓர்டர் கொடுத்துவிட்டு சோஃபா ஒன்றினுள் புதைந்திருந்து கணினியை வெளியில் எடுத்தேன். சிறுகதை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. முடிக்கவேண்டும். இரண்டு வரிகள் எழுதி முடித்திருக்கமாட்ட...