Skip to main content

Posts

Showing posts from January, 2019

வெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்

வணக்கம் ஜேகே. வெம்பிளி ஓஃப் ஜாப்னா கதை(?)யின் முதல் பாகம் வாசித்துவிட்டு சத்தமே போடவில்லை. கருத்திடவில்லை. ஆனால், நிறையவே சிரித்தேன்.என்னையும் மீறி பெருமூச்சுக்களும் வெளியேறியதைத் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்து அறிமுகம் செய்கின்ற அம்மாவை ஒருதடவை சந்திக்கவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது. இரண்டாவதை வாசித்து முடித்ததும் எப்போதும் போலவே மனதோரம் பொறாமை. 'எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது?' என்ற வியப்பு, மகிழ்வையும் மீறி அந்த ஆமையையும் தட்டி விட்டால் நான் என்ன செய்வது?  <<<<உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை.>>>> எனக்கு இந்த வரிக...

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று. சம்பவம் ஒன்று ‘பேட்ட’ ட்றெயிலரை அம்மாவிடமும் அப்பாவிடமும் போட்டுக்காட்டினேன். ‘இந்த எடுப்பையும் நடப்பையும் வச்சு இவ்வளவு காலமும் இவன் விளையாடிட்டான், வீரன்தான்’, இது அப்பா. ‘நல்லாத்தான் இருக்கு … ஆனால் இந்தாள் உளறினதை எல்லாம் கேட்டாப்பிறகு இதைப்பார்க்க விசர் வருகுது’, இது அம்மா. ‘என்ன இப்டி சொல்லுறிங்கள், வெறும்படம்தானே, வடிவேலுவும்தான் அரசியல்ல உளறிக்கொண்டு திரிஞ்சுது, ஆனாலும் அந்தாளிண்ட கொமடியை நாங்கள் ரசிக்கிறதில்லையா?’ ‘அது வடிவேலுடா … இது ரஜினிகாந்த் .. இவர் நடிப்பையும் அரசியலையும் போட்டுக் குழப்புறதாலதான் நாங்களும் குழம்பவேண்டியிருக்கு’, இது அம்மா. ‘விடு, அவன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தென்ன, வராட்டியென்ன, அவங்கள் மட்டும் எங்கட சுமந்திரன், கஜா பற்றி பேசி அடிபட்டுக்கொண்டா இருக்கிறாங்கள்? நம்மளுக்கு படம் பிடிச்சா ரசிக்கலாம், இல்லாட்டி விட்டிட்டு சோலியை பார்க்கலாம்… அவங்கட அரசியல் அவங்களோட’ — அப்பா மீண்டும். இவ்வளத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் சீனியர் சிட்டிசன் கிளப் அங்கிள் கேட்டார். ‘எல்லாஞ்சரி …. ஆனா படத்துக்கேன்...

ஒரு காண்டாமிருகத்தைப்போல

"This is a bondage, a baited hook. There's little happiness here, next to no satisfaction, all the more suffering & pain." Knowing this, circumspect, wander alone like a rhinoceros.” "இது ஒரு கட்டு, இரையுள்ள தூண்டில். இங்கு இன்பம் குறைவு, கொஞ்சமும் திருப்தி இல்லை, துக்கமும் துன்பமுமே அதிகம்." இதை அறிந்து, எச்சரிக்கையோடு இருந்து தனித்து நடமாடு காண்டாமிருகத்தைப் போல.” கடந்துபோன இரண்டாயிரத்துப் பதினெட்டு சற்று விசித்திரமான ஒரு ஆண்டு. எதிலுமே பிடித்தமில்லாமல், எவற்றிலுமே நம்பிக்கை கொள்ளாமல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்ட மனநிலை மேலோங்கியிருந்த ஆண்டு இது. என் தொலைப்பேசி முழுதும் தவறவிடப்பட்ட அழைப்புகள் நிறைந்திருந்த வருடம். தகவல் பெட்டிகளும் மின்மடல்களும் வாசிக்கப்படாமல் முடங்கியிருந்த காலம். வாசிப்பில் பிடித்தம் அருகிக்கொண்டு வந்ததும் எழுதும் எழுத்தை வெளியிடும் ஆர்வம் குறைந்ததும் இதே காலப்பகுதியில்தான். சமூக வலைத்தளங்கள் மீதான வெறுப்பும் மேலோங்க ஆரம்பித்ததும் அப்போதுதான். மனிதர்களின் போலித்தனங்கள் மேலும் மேலும் பட்டவர்த்தன...