கறுப்பியை இனிமேல் விற்றே ஆகவேண்டிய நிலைமை வந்துவிட்டது. மெல்பேர்ன் வந்ததுக்கு இது இரண்டாவது வாகனம். முதல் வாகனத்தைப் படிக்கும் காலத்தில் வாங்கியது. அறாவிலைக்கு ஓட ஓட நடுவழியில் நட்டுகள் கழன்றுவிழும் நிலையில் இருந்த வாகனத்தை வாங்கித் திருத்தி ஓட ஆரம்பித்தது. ஆனால் எத்தனை நட்டுகள் விழுந்தாலும் அந்த வாகனம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது. வாங்கிக் கொஞ்சக் காலத்துக்கு ஹீட்டர் கூலர் இரண்டுமே வேலை செய்தது. பின்னர் ஹீட்டர் மாத்திரம் வேலை செய்தது. அதன் பின்னர் கூலர் கரைச்சல் கொடுத்தது. கொஞ்ச நாளைக்குப்பின்னர் வெறும் காற்று மட்டும் மெல்லிய எஞ்சின் நெடியுடன் பறந்தது. பாட்டுப்பெட்டிக்கும் அதே கதைதான். முதலில் சிடி பிளேயர் முழுதாக வேலை செய்தது. பின்னர் கனலில் கருவாகி புனலில் உருவானதை மாத்திரம் அது தொடர்ந்து ரிப்பீட் பண்ணியது. அதன்பின்னர் வானொலி மட்டும் தனியே பாடியது. ஈற்றில் வெறும் இரைச்சல் மாத்திரம். அதையும் ஒரு கட்டத்தில் நிறுத்தமுடியாமற்போனது. எஞ்சின் அதற்கும்மேலே. அடிப்பகுதியில் இங்கிங்கெனாது எங்கெனும் ஒயில் ஒழுகியது. ரேடியேட்டர் தண்ணீர் வடிந்தது. பெற்றோல் குடிக்கப்பட்டது. இயக