Skip to main content

Posts

Showing posts from 2020

சூரரைப்போற்று

நேற்று சூரரைப்போற்று பார்த்தேன். ‘எயார் டெக்கான்’ நிறுவனர் கோபிநாத்தினுடைய வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை உள்வாங்கி அவற்றின் ஈர்ப்பில் உருவானது இந்தப்படம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் படத்தைப்பார்ப்பவர்கள் இதனை ஒரு உண்மைக்கதை என்று நம்பிவிடக்கூடாது என்பதற்காகச் சில தகவல்கள்.

புது நேரம்

நித்திரையால் எழுந்தபோது நேரம் ஆறு மணியாகியிருந்தது. தாமதமாக எழுந்த எரிச்சலோடு தேநீர் ஊற்றவென குசினிக்கு வந்தேன். அங்கே ஹோலில் கடிகாரம் ஐந்து மணி என்று காட்டியது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. இன்றைக்கு அவுஸ்திரேலியாவில் நேரம் மாற்றப்படும் நாள். வசந்தகாலத்தில் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் முன்னகர்த்தி பின்னர் இலையுதிர்காலத்தில் திரும்பவமும் பின்னகர்த்துவார்கள். அதாவது இன்று அதிகாலை நள்ளிரவு இரண்டு மணி தன்னாலே மூன்று மணியாகியிருக்கும். கோடைக்காலங்களில் வெள்ளனவே வெளிச்சம் இங்கு வந்துவிடுவதால் பகற்பொழுதுகளை முழுமையாகப் பயன்படுத்தச் செய்யும் மாற்றம் இது. மின்சாரமும் மிச்சம். அந்த இரு நாட்களும் அனேகமான நவீன டிஜிட்டல் கடிகாரங்கள் எல்லாம் அதன்பாட்டுக்கு மாறிவிடும். ஆனால் வீட்டு ஹோல்களில் தொங்கும் சுவர்க் கடிகாரங்களை நாங்கள்தான் மாற்றவேண்டும். ஆனால் பலர் பஞ்சியில் அதை மாற்றாமல் எந்நேரமும் மனக்கணக்கு போட்டே ஆறுமாதங்களைக் கடத்துவார்கள்.
படம் : என் கொல்லைப்புறத்துக் காதலிகள் படலை திறந்து இன்றோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன. 

ஆதிக்குடிகள்

ஈழத்தின் ஆதிக்குடிகள் எவர் என்றொரு உரையாடல் அண்மையில் உருவாகியிருக்கிறது. அவ்வப்போது இந்தச் சந்தேகம் எனக்கும் ஏற்படுவதுண்டு. கூடவே ஆதிக்குடிகள் என்ற பதத்துக்குள் யார் யாரெல்லாம் அடங்குவர் என்பது பற்றிய வரைவிலக்கணமும் எனக்குள் காலப்போக்கில் மாற்றம் அடைந்துகொண்டேயிருக்கிறது. அவற்றின் அடிப்படையில் எளிமையான நேர் மொழியில் தர்க்கரீதியான ஒரு தேடலைச் செய்துபார்க்கலாம் என்று தோன்றியது.

சுற்றுலா

கீரனூர் ஜாஹிர்ராஜா எழுதிய ‘ஞாயிறு கடை உண்டு’ என்ற நாவலை வாசித்தேன்.  சமகால தஞ்சை மண்ணில் நிகழும் கதை இது. அதிலும் தஞ்சையில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கீழ்வாசல் மீன் சந்தை மனிதர்கள், ராவுத்தர் பாளையத்தில் தங்கியிருந்து தவணை வியாபாரம் செய்பவர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் என நாம் கேள்வியேபட்டிராத ஆனால் தஞ்சையின் சீவனாக இருக்கக்கூடியவர்களின் நாளாந்த வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசுகின்ற நாவல் இது. அதுவும் இன்றைய, காவிரி வற்றிப்போன, தன் பெருமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக்கொண்டிருக்கின்ற அல்லது மறந்துகொண்டிருக்கின்ற மண்ணின் கதை.

"சைக்கிள் கடைச்சாமி" உரையாடல்

சமாதானத்தின் கதையில் உள்ள 'சைக்கிள் கடைச் சாமி' என்ற சிறுகதையைப் பற்றி கேதாவும் நானும் உரையாடும் காணொலி இது (இணைப்பு முதல் கொமெண்டில்). ஓரளவுக்கு கதைக்குப் பின்னணியாக இருக்கும் எண்ணங்களைப் பற்றி பேசியிருக்கிறோம் என்று நம்புகிறேன்.    உரையாடலின் ஓரிடத்தில் 'The straw that broke the camel's back' என்ற சொல்லடையைத் தமிழில் எப்படிக் குறிப்பிடுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். காணொலியைப் பார்த்துவிட்டு கலாதேவி அதற்கு நிகராகத் தமிழில் திருக்குறளே இருக்கிறது என்று இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

"சமாதானத்தின் கதை" உரிமைத்தொகை

காலையில் இலாச்சி துப்புரவாக்கிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது. “சமாதானத்தின் கதை” நூலுக்கான முதற்பதிப்பு உரிமைப்பங்கை புத்தகம் வெளியாகி ஒரு மாதத்திலேயே ஆதிரை வெளியீட்டாளர்கள் எனக்குக் கொடுத்துவிட்டிருந்தார்கள். குறிப்பாகப் புத்தகம் குறித்த எந்தவித நிகழ்வுகளும் இடம்பெறமுன்னமே முந்நூறு பிரதிகள் விற்பனை செய்யப்பட்டதும் அதற்கான உரிமைப்பங்கை வெளியீட்டாளர் உரிய நேரத்தில் கொடுத்ததும் மகிழ்ச்சிக்குரியதும் நம்பிக்கையூட்டும் நிகழ்வுகள்தாம். புத்தக வெளியீடு குறித்த நம்பிக்கைகளை இவை விதைக்கின்றன. ஆதிரை குழுமத்துக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த விநியோகக் குழுமங்களுக்கும் நன்றி. அதைவிட இதனை சாத்தியமாக்க உதவிய வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும். "சமாதானத்தின் கதை" நூலை இந்தியாவில் "டிஸ்கவரி புக் பாலசிலும்", இலங்கையில் வெண்பா புத்தகசாலை, பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் பெற்றுக்கொள்ளலாம். புத்தகத்தை வாங்க .

கொரானாவும் மலையாளத் திரைப்படங்களும்

“உண்டா” என்றொரு மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் மாவோயிஸ்டுகளின் பிரசன்னம் உள்ள கிராமங்களுக்குத் தேர்தல் கடமைக்காகச் செல்லும் ஒருதொகுதி காவல்துறையினரின் கதை. கலவரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மறியல் கடவைகளையும் லத்திகளையும் சில துப்பாக்கிகளையும்தான் அவர்கள் துணைக்குக் கொண்டு செல்கிறார்கள். போதுமான தோட்டாக்கள்கூட அவர்களிடம் இல்லை. அவர்களில் பலர் பயிற்சியின்போது சுட்டதற்குப்பின்னர் துப்பாக்கியையே பயன்படுத்தியதில்லை. தாக்குதல் அனுபவம் இல்லாதவர்கள். மிக எளிமையான சாதாரண மனிதர்கள். சரியான தயார்படுத்தல் இன்றி எப்படி மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை அந்தக் காவலர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஈற்றில் மாவோயிஸ்டுகளிடமிருந்து சனநாயகத்தைக் காக்க வந்தவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்களின் கையாட்களிடமிருந்துமே சனநாயகத்தைக் காக்கப் போராடுவதாகக் கதை முடிகிறது.

அவள்

வேலை முடித்து நடைப்பயிற்சிக்கு நாங்கள் தயாரானபோது ஏழுமணி ஆகியிருந்தது.  கொஞ்சம் காற்றும் சேர்ந்த மரணக்குளிர். ஊரடங்கு எட்டு மணிக்கு என்றாலும் வீதிகள் எல்லாமே அப்போதே வெறிச்சோடிக்கிடந்தன. சனத்துக்கும் வெளியே போவதற்கான தேவைகள் ஏதுமில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. வேலைத்தளங்கள் மூடப்பட்டுவிட்டன. பலசரக்குக் கடைகள் தவிர்ந்த ஏனையவை மூடப்பட்டுவிட்டன. மாவும் சீனியும் வாங்கக்கூட ஐந்து கிலோமீற்றரைத் தாண்டக்கூடாது என்று சட்டம். உடற்பயிற்சிக்கும் ஒருமணி நேரம்தான் அனுமதி. உலகிலேயே வாழ்வதற்குச் சிறந்த இடம் என்று கொண்டாடப்பட்ட மெல்பேர்னில் இப்போது தெருவில்கூட நடமாடமுடியாதபடி கிருமி எம்மை ஒடுக்கி வைத்திருக்கிறது.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி அஃப்ராத் அஹமத்

ஓர் எழுத்து உங்களை என்ன செய்துவிட முடியும் எனக் கேட்பவர்களுக்கான என் பதில் நீளமானது, ஆழமானதும் கூட! என் கொல்லைப்புறத்துக்காதலிகள் நூல் என்னுள் கடந்த தலைமுறை வாழ்ந்த யாழ்ப்பாண வாழ்வியல் நினைவுகளுக்குள் காலப்பயணம் சென்றுவந்த உணர்வொன்றை கடத்திவிட்டது.

சித்தகத்திப் பூக்களே

நேற்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இளையராஜாவுடன் நடைப்பயிற்சியில் இருந்தேன். எல்லாமே தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்து இளையராஜா. “கட்டி வச்சுக்கோ”வில் ஆரம்பித்து “முத்துமணி மாலை”, “தானந்தன கும்மிகொட்டி”, “சாமிக்கிட்ட சொல்லிவச்சு”, “என்னைத் தொட்டு” என்ற வரிசை பதினொராவது கிலோமீற்றர் கடக்கையில் “சித்தகத்திப் பூக்களே”க்குத் தாவியது. அதன்பின்னர் அடுத்த முப்பது நிமிடங்களுக்கு அதுவே ரிப்பீட்ட ஆரம்பித்தது.

குருபரன்

இனிய நண்பர் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியைத் துறந்தார் என்ற செய்தி மிகுந்த மன அலைக்கழிப்பைத் தந்துகொண்டிருக்கிறது. ஊரில் இவ்வகை நிகழ்வுகள் தினமும் நிகழும் ஒன்றுதான். ஆனால் குருபரனை நெருக்கமாகத் தெரியும் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோலத்தான் என் இன்னொரு நண்பர் பாலமுருகனுக்கும் நிகழ்ந்தது. மருத்துவரான பாலமுருகன் சில வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஊரில்போய் வாழவேண்டும் என்று போன இடத்தில் அரசுத்துறையும் அதிகாரிகளும் ஆண்டுக்கணக்கில் அவருக்கு வேலைக்கான ஒதுக்கீட்டை செய்யாமல் அவரை அலைக்கழித்ததில் பாலா திரும்பவும் வெளிநாட்டுக்கே வந்து இங்குள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்துக்குப் படியாமல், நேர்மையான வழியில், நெளிவு சுளிவுகளின்றி வாழ விரும்பும் பலரை இப்படித்தான் அந்தக்கட்டமைப்புகள் பிழிந்து எடுத்துவிடுகின்றன. குருபரனுக்கு நிகழ்ந்தது அதற்கான சமீபத்திய அடையாளம்.

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 2

அன்றைக்கு சிவராத்திரி தினம். மத்தியானம் இரத்தமாக வெட்டிய ஆட்டிறைச்சிக்கறி செமிப்பதாக இல்லை. இரவுக்கு மிச்சச்சட்டியைவேறு பிரட்டவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வண்டி இன்னமும் பொம்மிக்கொண்டு நின்றது. இரண்டு பனங்கிழங்குகளை சீவி உள்ளே போட்டுப்பார்த்தேன். வயிறு மேலும் இறுகியதுதான் மிச்சம். ‘நாச்சிமார் கோவிலடிவரைக்கும் நடந்திட்டு வருவமா’ என்று அக்கா ஐடியா கொடுத்தார். சரியென்று நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அப்போது நேரம் இரவு எட்டுமணி.

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 1

யாழ்ப்பாணம் முழுதும் கட்டாக்காலி நாய்களால் நிறைந்திருந்தது. முன்னரானால் ஒழுங்கை முகப்புகளிலும் கோயில் முன்றல்களிலும் சந்தைகளிலும் சாப்பாட்டு ஓட்டல்களுக்குப் பின்னாலிருக்கும் வெறுங்காணிகளிலுமே கட்டாக்காலி நாய்கள் திரிவதுண்டு. என்னதான் கட்டாக்காலிகள் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ‘கண்ணன் லொட்ஜ் நாயள்’, நந்தாவில் அம்மன் நாயள்’, ‘நல்லூரடி நாயள்’, ‘மூத்திர ஒழுங்கை நாயள்’, பணிக்கரடி நாயள் என்று பல முத்திரைப் பெயர்கள் இருந்தன. அந்தக் கட்டாக்காலிகள் போட்ட குட்டிகள்தான் எங்கள் வீடுகளிலெல்லாம் வளர்ப்பு நாய்களாகவும் இருந்தன. கட்டாக்காலிகளின் எண்ணிக்கை அதிகமானாலோ அல்லது அவற்றின் தொல்லை கூடிவிட்டாலோ நகரசபை நாய்பிடிகாரர் வந்து அவற்றைப்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். பல நாய்களைத் தெருவிலேயே வைத்து இயக்கங்களும் இந்திய இலங்கை ஆர்மிகளும் மாறி மாறிச் சுட்டுப்போட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சுடும்போது அவர்கள் வளர்ப்புநாயா கட்டாக்காலியா என்று பேதம் பார்க்கமாட்டார்கள். எது எப்படியோ, இன்னோரன்ன காரணங்களால் அந்நாட்களில் கட்டாக்காலிகளின் எண்ணிக்கை எப்போதுமே ஒருவித கட்டுக்குள்ளேயே இருந்தது என்க.

'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா

ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.

'சமாதானத்தின் கதை' பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம்

அ. முத்துலிங்கத்திற்கு எழுத்துலக வாரிசு கிடைத்துவிட்டார். அ. மு போன்று இலகுநடையிலும், ஐனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும், நீரில் வழுக்கிச்செல்லும் இலைபோன்று தமிழைக் கையாழ்வதும் இலகுவல்ல. வாசகனின் கவனக்குவிப்பு கலைந்துவிடாது கதை முழுவதையும் ஒரே மூச்சில் வாசிக்கவைப்பது ஒரு தனிக் கலை. இவையெல்லாமே 'சமாதானத்தின் கதை' எழுதியவரிடம் உண்டு.

'சமாதானத்தின் கதை' பற்றி ரோஸி கஜன்

ஜேகே அவர்களின் சமாதானத்தின் கதை , அதிலுள்ள 11 சிறுகதைகள் பற்றி என்ன என்னவோ எல்லாம் சொல்லவேண்டும் என்று ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கையில் நினைத்திருந்தேன். இப்போதோ கோர்வையாகச் சொல்ல ஒன்றுமே வருதில்ல. வெரைட்டியா நாலு ரெசிபி கேளுங்க நச்சென்று சொல்லுவன்.

"சமாதானத்தின் கதை" பற்றி தாரணி பாஸ்கரன்

ஜேகே ஐ பற்றி நான் தெரிஞ்சுகொண்டது கந்தசாமியும் கலக்சியும் வந்த timeலதான் . Fbல யாரோ பகிர்ந்த போஸ்ட் பார்த்து impress ஆகி படலைக்கு போய் இன்னும் நிறைய தெரிஞ்சு fbல friend request குடுத்து அதை அவர் accept பண்ணி ஆச்சரியங்களிலே காலம் கடந்தது. ஜேகேயின் எழுத்துக்கள் தன்னை நோக்கி மெல்ல மெல்ல என்னை இழுக்கத்தொடங்கியிருந்தது என்னையறியாமலே.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி வினோத் கருணா

ஒரு சில எழுத்தாளர்களினால் மட்டுமே வாசிப்பவர்களை அவர்களாகவே மாற்றி விடுவார்கள். அந்த வரிசையில் ஜெயக்குமார் ஓர் எழுத்துலக சாணக்கியனாவர்.JK என சுருக்கமாகவும் அன்பாகவும் அழைக்கப்படும் ஜெயகுமாரினுடைய என் கொல்லைப்புறத்து காதலிகள் எம்மை JK யாகவே மாற்றி தொண்ணுறு காலப்பகுதிகளில் எம்மை யாழ் மண்ணில் உலவவிடுகின்றார். ஓர் பதினைந்து வயது சிறுவன் தொண்ணுறு காலப்பகுதியில் எம்மை a r ரகுமானையும் மணிரத்தினத்தையும் இளையராஜாவையும் ராஜனியையும் அதே நேரத்தில் இசையையும் அவனுடைய கண்களினாலும் உணர்வுகளினாலும் எம்மை அந்த சிறுவனாகவே மாற்றுகின்றார். எம்மையும் அகிலனையும் கஜனையும் காதலிக்க வைக்கின்றார்.இந்த புத்தகத்தை கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்க மனம் ஏங்கும் புத்தகத்தை கீழே வைக்க மனம் முயற்சிக்காது..... இந்த புத்தகத்தை வாசித்து அனுபவியுங்கள்.

“விளமீன்” பற்றி மணியாள்

மகனின் ‘விளமீன்’ கதையை வாசித்தபோது பல ஞாபகங்கள் வந்து போயின. அந்தக்காலத்தில் கொஞ்சம் வசதி கூடிய குடும்பங்களுக்கு வீட்டிற்கே மீனைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். வசதி குறைந்த குடும்பத்தார் கொஞ்சப்பேர் கடற்கரைக்குப் போய் தோணிக்குக் கிட்டவா நிற்பார்கள். மீன்காரன் பையை வாங்கிக்கொண்டுபோய் தோணிக்குள் இருந்து மீனை எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பான். ஆனால் அவர்கள் அதுவரைக்கும் பொறுக்காமல் தோணியை கரையேற்றமுதலேயே அடித்துப்பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவார்கள். இப்படிப்போட்டி போட்டுக்கொண்டு நின்றால்தான் நல்ல மீன்கள் கிடைக்கும். இவர்கள் எல்லோருமே மீனுக்கான காசை மாதம் முடியும்போதுதான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தீவுப்பகுதி மீன்கள் எல்லாம் அந்த மக்களுக்குப் போகாமல் ஐஸ் பெட்டியில் யாழ்ப்பாணம் போய்விடுகிறது. ஊரிலும் முன்னமாதிரி ஆட்கள் இல்லை. சரசுமாமி மாதிரி வெளி நாட்டுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்றுவிட்டார்கள்.

ஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்

எனக்கும் மனைவிக்குமிடையில் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி சண்டை வரும். நாங்கள் ஒரு தீவுக் குடும்பம் என்பதால் கடலில் நீந்துகின்ற, கடற்கரையில் ஊருகின்ற எதையுமே ருசித்துச் சாப்பிடுவோம். ஒவ்வொரு ஜந்துவையும் எப்படிச் சமைக்கவேண்டுமென்பதை வேதங்கள்போல எங்கள் முன்னவர்கள் செவிவழியாக தம் அடுத்த சந்ததிகளுக்கு அருளிச்செய்திருக்கிறார்கள். நிலவுக் காலத்தில் நண்டு வலிச்சலாக இருக்கும். சின்னத்திரளி பதினொருமணிக்குமேலே நாறிவிடும். களங்கண்டி விளமீனைப் பொரித்துப் புட்டோடு சாப்பிடவெண்டும். ஒட்டி என்றால் தடித்த குழம்பும் சொதியும். கணவாயை ஏழு சிரட்டையில் அவிய விடவேண்டும். மட்டி எப்படி சமைப்பது. ஒடியற்கூழுக்கு என்னென்ன போடுவது, நெத்தலியில் சொதி. சூடையில் பொரியல். முரள். கிளாக்கன். சீலா, கும்பளா, அறக்குளா முதற்கொண்டு முள்ளு மீனான கொய்யையையும் பச்சைத்தண்ணியான கட்டாவையும்கூட எப்படி சமைக்கவேண்டுமென எத்தனை எத்தனை ரெசிப்பிகள். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மீன்கள். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த கறிகள் என எல்லாமே என் அம்மாவுக்கு அத்துப்படி. அபிமன்யுவுக்கு கருவிலேயே சக்கரவியூகம் சொல்லிக்கொடுக்கப்பட்டதுபோல ந...

ஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்

அன்றிரவு ஏழு மணிக்கு வசாவிளானில் செம்முகம் ஆற்றுகைக்குழுவினரின் அரங்கு ஒன்று நடக்கப்போவதாக அக்கா சொல்லியிருந்தார். அதனாலேயே நிருபாவின் புத்தக நிகழ்விலிருந்து வெள்ளனவே கழன்று, வீடு திரும்பி ஆறரைக்கே தயாராக இருந்தேன். நேரம் ஏழு, ஏழரை மணி ஆகிவிட்டது. ஆனால் அக்கா மட்டும் வெளிக்கிடும் சிலமனே இல்லை.  “என்னக்கா லேட்டாப் போய் என்னெய்யிறது” “பொறு ஏழு மணி எண்டா இவங்கள் ஒன்பது மணிக்குத்தான் தொடங்குவாங்கள்”

நீண்ட காத்திருப்பு

கொமடோர் போயகொட ஶ்ரீலங்கா கடற்படையின் அதிகாரியாக இருந்தவர். 74ல் கடற்படையில் இணைந்து 93ல் சாகரவர்த்தனா கடற்படைக் கப்பலின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். 94ம் ஆண்டு கற்பிட்டிக் கடற்பகுதியில் நங்கூரம் தரித்து நிற்கும்போது சாகரவர்த்தனா புலிகளின் கரும்புலித்தாக்குத்தலில் சிக்குகிறது. போயகொட புலிகளால் கைது செய்யப்படுகிறார்.  அடுத்த எட்டு ஆண்டுகள் புலிகளின் கட்டுப்பாட்டில் சிறைக்கைதியாகத் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சுயசரித நூலாக, போயகொட சொல்லச்சொல்ல, சுனிலா கலப்பதி கேட்டு எழுதியிருக்கிறார்.“A Long Watch” என்று ஆங்கிலத்தில் வெளியான அந்த நூலைத் தமிழில் தேவா மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பெயர்தான், “நீண்ட காத்திருப்பு”

ஒற்றன்

பெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.

பராபரம்

எல்லோரும் வீட்டினுள் முடங்கிக்கிடக்கையில் வெளியில் நடமாடுவதில் ஒரு சுகம் உண்டு. எங்காவது ஓரிரு மனிதர்கள். மனிதர்களைக் கண்டு ஆச்சரியமாகத் திரும்பிப்பார்க்கும் கங்காருக்கூட்டங்கள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள்.  இவர்களோடு நானும்.

ஊபர் ஈட்ஸ்

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஒரு ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்துரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன்.

சமாதானத்தின் கதை - யாழ் நூலக சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம். வரும் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு யாழ் நூலகத்தில், ஆதிரை வெளியீடான ‘சமாதானத்தின் கதை’ பற்றிய உரையாடல் ஒன்றை வெண்பா நிறுவனம் ஒழுங்குசெய்துள்ளது. கதைகளினூடான உரையாடல் என்பது எப்போதுமே உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. ஒருவித எண்ணச்சுழற்சியில் எழுதப்படும் கதைகள் வாசிக்கப்படும்போது முற்றிலும் பிறிதொரு வடிவம் எடுத்து எழுதப்பட்டவரிடமிருந்து பிரிந்து அந்நியப்பட்டு நிற்கையில் நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் ஆயாசமும் சேர்ந்துவரும். அவ்விடத்தில் எழுதியவர் தொலைந்துபோய் அவரும் அந்தக்கதைகளின் இன்னொரு வாசகராகவே ஆகிறார். அந்தப்புள்ளியிலிருந்து விரிவடையும் உரையாடலை இந்நிகழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாசிப்பினூடாக இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் வருகை தாருங்கள். உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாட மிக ஆவலோடு இருக்கிறேன். சந்திப்போம் சனி பிற்பகம் 4.00 மணி, குவிமாடக் கேட்போர் கூடம் யாழ் பொது நூலகம் அன்புடன்.

"சமாதானத்தின் கதை" பற்றி சுபாசிகன்

"நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத்துரத்தி விடுகிறேன். புத்தகங்களையும்தான்" சமாதானத்தின் கதை ஜேகேயின் புத்தகம் வெளிவந்து, வாங்கி நாட்கள் கடந்து விட்டன. வாசித்து முடித்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. வழமைபோல் பரபரவென வாசிக்கத் தொடங்கி இரண்டாவது கதையில் ஒரு இடைவெளி வந்து விட்டது. இந்த இரண்டாவது கதை பற்றி கொஞ்சம் விரிவாகவே கூறுகிறேன். கூற வேண்டும்! சிறிது நாட்கள் இடைவெளியின் பின் மீண்டும் வாசித்து முடிக்கையில், அவரவர் ஏற்கனவே விமரிசனங்கள் எழுதி முடித்து விட்டனர். இதற்குள் நான் என்னத்தைச் சொல்லிக் கிழிக்க? எனினும் நான் நினைத்ததை முடிக்காமல் விடுவதெப்படி?

ஏழு வாத்திகளின் கதைகள் : 2. பிரின்ஸி

இந்தச் சூழலைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பக்கம் பழைய பூங்கா. பூங்கா முழுதும் பிரிட்டிஷ்காலத்தில் நடப்பட்ட, அடர்த்தியாக வளர்ந்துநிற்கும் மலைவேம்புகள். அம்மரங்களின் உச்சிகளில் இலைகளுக்குப் போட்டியாகத் தொங்கிக்கிடக்கும் வௌவால்கள். பழையபூங்காவுக்குள் அப்போது காவல்துறை பயிற்சிமுகாம் இருந்தது. எப்போதாவது யாராவது தவறுதலாக வெடிவைத்தால் அத்தனை வௌவால்களும் தூக்கம் கலைந்து எழுந்து கூட்டமாக மேற்குப்பக்கமுள்ள பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்மேலே ஒரு விரிப்புபோல மேவிப்பறக்கும். மற்றபடி அத்தனை வௌவால்களும் பகலில் சிறு சிறு சலசலப்புகளுடன் தொங்கியபடி. மைதானத்தின் வடக்கு மூலையில் இரண்டுமாடி வீடு ஒன்று. அதிபர் பங்களோ. கிட்டத்தட்ட எழுபது எண்பது வருடங்கள் பழமையானது அந்த வீடு. அதுவும் பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்டதுதான். பங்களோவின் சுவர்களைத் தொட்டால் சுண்ணாம்புப்பூச்சு உதிரும். அவ்வளவு பழசு. ஆனால் அந்தப் பழமைதான் அச்சூழலை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. அந்த பங்களோவின் போர்ட்டிகோவில் ஒரு சாய்மனைக்கதிரை. கதிரைக்குப்பக்கத்திலேயே தேநீர்கோப்பை வைத்து எடுக்கவென அளவான உயரத்தில் ஒரு ஸ்டூல்....

ஏழு வாத்திகளின் கதைகள்: 1. கருணைநாயகத்தார்

@ http://www.thecricketmonthly.com/ எங்கள் பாடசாலையில் ‘வாழ்க்கைத்திறன் கல்வி’ என்றொரு தனிப் பாடம் இருந்தது. வாழ்க்கைத்திறன்கள் பலவகைப்படும். சைக்கிள் டியூப் ஒட்டுவது. சட்டைக்குக் ஹங்கர் சரிக்கட்டுவது. சீலைத்துணியில் தேயிலை வடி செய்வது. செவ்வரத்தையில் பதி வைப்பது. எக்ஸோராவில் பத்து ஒட்டு ஒட்டி பதினொரு கலரில் பூக்கவைப்பது. மரக்கன்று வைக்கவென வீடுவீடாகச்சென்று குப்பைகளில் லக்ஸ்பிரே, நெஸ்பிரே பாக்குகளைத் தேடிச் சேகரிப்பது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். வாழ்க்கைத்திறன் கல்வியை எங்களுக்குப் பாடசாலையில் கற்பித்தவர் கருணைநாயகத்தார்.

சமாதானத்தின் கதை : இணையத்தில் வாங்க

சமாதானத்தின் கதை : புதிய வெளியீடு

ஆதிரை வெளியீடாக நான் எழுதிய ‘சமாதானத்தின் கதை’ என்கின்ற நூல் இப்போது கடைகளில் கிடைக்கிறது. 000 கதைகளைச் சொல்லாமலேயே விட்டுவிட்டால் என்ன என்று எண்ணிய காலமது. சொல்லாத கதைகள் எப்போதுமே எம்மோடு அமுங்கியபடி கூடவே இருக்கின்றன. இரகசியங்களைப்போல. சொல்லியபின் அவை எம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். பின்னர் கூப்பிட்டாலும் அவை செவிமடுப்பதில்லை. எப்போதேனும் தெருவோரம் யாரோ அவற்றைக்கூட்டிச்செல்லும்போது எம் வாசலை எட்டிப்பார்ப்பதோடு சரி. அதற்குமேல் அவற்றுக்கும் எமக்குமான உறவு நெருங்குவதேயில்லை. “சமாதானத்தின் கதை” நூலில் உள்ள பதினொரு கதைகளும் எப்போதோ என்னோடு கோபித்துக்கொண்டு பிரிந்துபோன கதைகள். அவற்றை மீள எழுதும்போது நிரம்பிய அன்பும் அதற்கும்மேலாகச் சண்டையும் அவற்றோடு பிடிக்கவேண்டியிருந்தது. சில கதைகள் வளர்ந்தும் இன்னும் பல ஒடுங்கியும் கிடந்தன. ‘விசையறு பந்து’ மதுவந்திகாவைக் காணும்போது புதிதாக இருந்தது. ‘தூங்காத இரவு வேண்டும்’ சிவலிங்கத்தின் வாழ்வை நினைத்துப்பார்க்கவே ஒரு கலக்கம் வந்துபோனது. கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இக்கதைகளின் களங்களிலும் கதை மாந்தரோடும் செலவிட்ட காலைப்பொழுது...

அவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது? 
 முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும். அவுஸ்திரேலியாவின் சுதேசிய மரம் இது. அதனாலேயே சிகரட் நெருப்போ மின்னலோ அல்லது இயல்பாகவே சூடேறி வெடித்தோ காடு உடனேயே தீப்பற்றிவிடுகிறது. தவிர இங்கே காற்றில் ஈரப்பதன் இருப்பதில்லை. கொஞ்சம் வெயில் என்றாலும் மண்ணிலும் வளியிலும் குளிர்மை அகன்றுவிடும். இந்த சூழ்நிலையில் காற்றும் சேர்ந்துகொள்ள தீ இலகுவில் பற்றி விரிவடைய ஆரம்பிக்கிறது.