ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித் தரைக்குப் பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் இருக்கும் சமாதானம் எப்போது பெர்த்திட்க்கு வரும் என்று கூற முடியுமா?
ReplyDeleteநேற்று அனுப்பினேன். இரண்டு மூன்று நாட்களில் வந்துவிடும்.
ReplyDelete- ஜேகே
இன்று சமாதானம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி . உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசத்தையும் கடக்க வேண்டும் என்னும் போது மனம் சமாதானம் அடைய மறுக்கிறது.ஆவலுடன் வாசிப்பதட்கு காத்திருந்தேன்..... ஆனால் அந்த ஒரு பெயரில் மனம் உடைந்துவிடுகிறது
ReplyDelete