Skip to main content

Posts

Showing posts from February, 2020

சமாதானத்தின் கதை - யாழ் நூலக சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம். வரும் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு யாழ் நூலகத்தில், ஆதிரை வெளியீடான ‘சமாதானத்தின் கதை’ பற்றிய உரையாடல் ஒன்றை வெண்பா நிறுவனம் ஒழுங்குசெய்துள்ளது. கதைகளினூடான உரையாடல் என்பது எப்போதுமே உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. ஒருவித எண்ணச்சுழற்சியில் எழுதப்படும் கதைகள் வாசிக்கப்படும்போது முற்றிலும் பிறிதொரு வடிவம் எடுத்து எழுதப்பட்டவரிடமிருந்து பிரிந்து அந்நியப்பட்டு நிற்கையில் நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் ஆயாசமும் சேர்ந்துவரும். அவ்விடத்தில் எழுதியவர் தொலைந்துபோய் அவரும் அந்தக்கதைகளின் இன்னொரு வாசகராகவே ஆகிறார். அந்தப்புள்ளியிலிருந்து விரிவடையும் உரையாடலை இந்நிகழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாசிப்பினூடாக இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் வருகை தாருங்கள். உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாட மிக ஆவலோடு இருக்கிறேன். சந்திப்போம் சனி பிற்பகம் 4.00 மணி, குவிமாடக் கேட்போர் கூடம் யாழ் பொது நூலகம் அன்புடன்.

"சமாதானத்தின் கதை" பற்றி சுபாசிகன்

"நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத்துரத்தி விடுகிறேன். புத்தகங்களையும்தான்" சமாதானத்தின் கதை ஜேகேயின் புத்தகம் வெளிவந்து, வாங்கி நாட்கள் கடந்து விட்டன. வாசித்து முடித்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. வழமைபோல் பரபரவென வாசிக்கத் தொடங்கி இரண்டாவது கதையில் ஒரு இடைவெளி வந்து விட்டது. இந்த இரண்டாவது கதை பற்றி கொஞ்சம் விரிவாகவே கூறுகிறேன். கூற வேண்டும்! சிறிது நாட்கள் இடைவெளியின் பின் மீண்டும் வாசித்து முடிக்கையில், அவரவர் ஏற்கனவே விமரிசனங்கள் எழுதி முடித்து விட்டனர். இதற்குள் நான் என்னத்தைச் சொல்லிக் கிழிக்க? எனினும் நான் நினைத்ததை முடிக்காமல் விடுவதெப்படி?

ஏழு வாத்திகளின் கதைகள் : 2. பிரின்ஸி

இந்தச் சூழலைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பக்கம் பழைய பூங்கா. பூங்கா முழுதும் பிரிட்டிஷ்காலத்தில் நடப்பட்ட, அடர்த்தியாக வளர்ந்துநிற்கும் மலைவேம்புகள். அம்மரங்களின் உச்சிகளில் இலைகளுக்குப் போட்டியாகத் தொங்கிக்கிடக்கும் வௌவால்கள். பழையபூங்காவுக்குள் அப்போது காவல்துறை பயிற்சிமுகாம் இருந்தது. எப்போதாவது யாராவது தவறுதலாக வெடிவைத்தால் அத்தனை வௌவால்களும் தூக்கம் கலைந்து எழுந்து கூட்டமாக மேற்குப்பக்கமுள்ள பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்மேலே ஒரு விரிப்புபோல மேவிப்பறக்கும். மற்றபடி அத்தனை வௌவால்களும் பகலில் சிறு சிறு சலசலப்புகளுடன் தொங்கியபடி. மைதானத்தின் வடக்கு மூலையில் இரண்டுமாடி வீடு ஒன்று. அதிபர் பங்களோ. கிட்டத்தட்ட எழுபது எண்பது வருடங்கள் பழமையானது அந்த வீடு. அதுவும் பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்டதுதான். பங்களோவின் சுவர்களைத் தொட்டால் சுண்ணாம்புப்பூச்சு உதிரும். அவ்வளவு பழசு. ஆனால் அந்தப் பழமைதான் அச்சூழலை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. அந்த பங்களோவின் போர்ட்டிகோவில் ஒரு சாய்மனைக்கதிரை. கதிரைக்குப்பக்கத்திலேயே தேநீர்கோப்பை வைத்து எடுக்கவென அளவான உயரத்தில் ஒரு ஸ்டூல்....

ஏழு வாத்திகளின் கதைகள்: 1. கருணைநாயகத்தார்

@ http://www.thecricketmonthly.com/ எங்கள் பாடசாலையில் ‘வாழ்க்கைத்திறன் கல்வி’ என்றொரு தனிப் பாடம் இருந்தது. வாழ்க்கைத்திறன்கள் பலவகைப்படும். சைக்கிள் டியூப் ஒட்டுவது. சட்டைக்குக் ஹங்கர் சரிக்கட்டுவது. சீலைத்துணியில் தேயிலை வடி செய்வது. செவ்வரத்தையில் பதி வைப்பது. எக்ஸோராவில் பத்து ஒட்டு ஒட்டி பதினொரு கலரில் பூக்கவைப்பது. மரக்கன்று வைக்கவென வீடுவீடாகச்சென்று குப்பைகளில் லக்ஸ்பிரே, நெஸ்பிரே பாக்குகளைத் தேடிச் சேகரிப்பது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். வாழ்க்கைத்திறன் கல்வியை எங்களுக்குப் பாடசாலையில் கற்பித்தவர் கருணைநாயகத்தார்.