Skip to main content

Posts

Showing posts from May, 2020

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி வினோத் கருணா

ஒரு சில எழுத்தாளர்களினால் மட்டுமே வாசிப்பவர்களை அவர்களாகவே மாற்றி விடுவார்கள். அந்த வரிசையில் ஜெயக்குமார் ஓர் எழுத்துலக சாணக்கியனாவர்.JK என சுருக்கமாகவும் அன்பாகவும் அழைக்கப்படும் ஜெயகுமாரினுடைய என் கொல்லைப்புறத்து காதலிகள் எம்மை JK யாகவே மாற்றி தொண்ணுறு காலப்பகுதிகளில் எம்மை யாழ் மண்ணில் உலவவிடுகின்றார். ஓர் பதினைந்து வயது சிறுவன் தொண்ணுறு காலப்பகுதியில் எம்மை a r ரகுமானையும் மணிரத்தினத்தையும் இளையராஜாவையும் ராஜனியையும் அதே நேரத்தில் இசையையும் அவனுடைய கண்களினாலும் உணர்வுகளினாலும் எம்மை அந்த சிறுவனாகவே மாற்றுகின்றார். எம்மையும் அகிலனையும் கஜனையும் காதலிக்க வைக்கின்றார்.இந்த புத்தகத்தை கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்க மனம் ஏங்கும் புத்தகத்தை கீழே வைக்க மனம் முயற்சிக்காது..... இந்த புத்தகத்தை வாசித்து அனுபவியுங்கள்.

“விளமீன்” பற்றி மணியாள்

மகனின் ‘விளமீன்’ கதையை வாசித்தபோது பல ஞாபகங்கள் வந்து போயின. அந்தக்காலத்தில் கொஞ்சம் வசதி கூடிய குடும்பங்களுக்கு வீட்டிற்கே மீனைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். வசதி குறைந்த குடும்பத்தார் கொஞ்சப்பேர் கடற்கரைக்குப் போய் தோணிக்குக் கிட்டவா நிற்பார்கள். மீன்காரன் பையை வாங்கிக்கொண்டுபோய் தோணிக்குள் இருந்து மீனை எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பான். ஆனால் அவர்கள் அதுவரைக்கும் பொறுக்காமல் தோணியை கரையேற்றமுதலேயே அடித்துப்பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவார்கள். இப்படிப்போட்டி போட்டுக்கொண்டு நின்றால்தான் நல்ல மீன்கள் கிடைக்கும். இவர்கள் எல்லோருமே மீனுக்கான காசை மாதம் முடியும்போதுதான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தீவுப்பகுதி மீன்கள் எல்லாம் அந்த மக்களுக்குப் போகாமல் ஐஸ் பெட்டியில் யாழ்ப்பாணம் போய்விடுகிறது. ஊரிலும் முன்னமாதிரி ஆட்கள் இல்லை. சரசுமாமி மாதிரி வெளி நாட்டுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்றுவிட்டார்கள்.