Skip to main content

Posts

Showing posts from August, 2020

கொரானாவும் மலையாளத் திரைப்படங்களும்

“உண்டா” என்றொரு மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் மாவோயிஸ்டுகளின் பிரசன்னம் உள்ள கிராமங்களுக்குத் தேர்தல் கடமைக்காகச் செல்லும் ஒருதொகுதி காவல்துறையினரின் கதை. கலவரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மறியல் கடவைகளையும் லத்திகளையும் சில துப்பாக்கிகளையும்தான் அவர்கள் துணைக்குக் கொண்டு செல்கிறார்கள். போதுமான தோட்டாக்கள்கூட அவர்களிடம் இல்லை. அவர்களில் பலர் பயிற்சியின்போது சுட்டதற்குப்பின்னர் துப்பாக்கியையே பயன்படுத்தியதில்லை. தாக்குதல் அனுபவம் இல்லாதவர்கள். மிக எளிமையான சாதாரண மனிதர்கள். சரியான தயார்படுத்தல் இன்றி எப்படி மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை அந்தக் காவலர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஈற்றில் மாவோயிஸ்டுகளிடமிருந்து சனநாயகத்தைக் காக்க வந்தவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்களின் கையாட்களிடமிருந்துமே சனநாயகத்தைக் காக்கப் போராடுவதாகக் கதை முடிகிறது.

அவள்

வேலை முடித்து நடைப்பயிற்சிக்கு நாங்கள் தயாரானபோது ஏழுமணி ஆகியிருந்தது.  கொஞ்சம் காற்றும் சேர்ந்த மரணக்குளிர். ஊரடங்கு எட்டு மணிக்கு என்றாலும் வீதிகள் எல்லாமே அப்போதே வெறிச்சோடிக்கிடந்தன. சனத்துக்கும் வெளியே போவதற்கான தேவைகள் ஏதுமில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. வேலைத்தளங்கள் மூடப்பட்டுவிட்டன. பலசரக்குக் கடைகள் தவிர்ந்த ஏனையவை மூடப்பட்டுவிட்டன. மாவும் சீனியும் வாங்கக்கூட ஐந்து கிலோமீற்றரைத் தாண்டக்கூடாது என்று சட்டம். உடற்பயிற்சிக்கும் ஒருமணி நேரம்தான் அனுமதி. உலகிலேயே வாழ்வதற்குச் சிறந்த இடம் என்று கொண்டாடப்பட்ட மெல்பேர்னில் இப்போது தெருவில்கூட நடமாடமுடியாதபடி கிருமி எம்மை ஒடுக்கி வைத்திருக்கிறது.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி அஃப்ராத் அஹமத்

ஓர் எழுத்து உங்களை என்ன செய்துவிட முடியும் எனக் கேட்பவர்களுக்கான என் பதில் நீளமானது, ஆழமானதும் கூட! என் கொல்லைப்புறத்துக்காதலிகள் நூல் என்னுள் கடந்த தலைமுறை வாழ்ந்த யாழ்ப்பாண வாழ்வியல் நினைவுகளுக்குள் காலப்பயணம் சென்றுவந்த உணர்வொன்றை கடத்திவிட்டது.