டூரிங் டாக்கிஸ் என்று சித்ரா லக்ஸ்மன் நடத்தும் யூடியூப் சனலை அவ்வப்போது பொழுதுபோக்காகக் கேட்பதுண்டு. அவர் ஒரு ஊடகவியலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தமையால் சுவாரசியமான திரைத் தகவல்களை அடிக்கடி பகிர்ந்துகொள்வார். ரசிகர்கள் கேள்விகளுக்கும் வார வாரம் பதில் சொல்வார். அவருடைய சென்ற வாரத்து நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டார். “என்னால் பல பாடல்களில் எஸ்பிபிக்கும் மனோவுக்கும் வித்தியாசம் கண்டறிய முடிவதில்லை. அதேபோல ஜேசுதாசுக்கும் உன்னிமேனனுக்கும் இடையிலும் குரல் வித்தியாசம் தெரிவதில்லை, நீங்கள் எப்படி சார்?” அதற்குச் சித்ரா லக்ஸ்மனின் பதில். “நான் ஒரு இசை ரசிகனே ஒழிய கலைஞன் கிடையாது. எனக்கும் அந்தக் குழப்பங்கள் இருப்பதுண்டுதான்” இருந்துட்டுப் போகட்டும். என் நண்பன் ஒருவனால் எம். எஸ். சுப்புலட்சுமிக்கும் சித் ஶ்ரீராமுக்கும் இடையில்கூட வித்தியாசம் கண்டுபிடிக்கமுடிவதில்லை. ஹூ கெயார்ஸ்? ஆனால் பிரச்சனை அடுத்த சம்பவத்தில் இருக்கிறது.